அக்ரஹாரம்: (ஒரு மேம்போக்கான அறிமுகம்)
காவேரி ரோட்டிலிருந்து மேற்கு நோக்கி பிரியும் இன்னொரு அக்ரஹாரம் . நாங்கள் குடியிருந்த கூரை வீடு இருந்த தெரு. தெருவின் ஆரம்பத்தில் வலதுபுறம் முதல் வீடு TNR வீடு. இடது புறம் அய்யர் வீட்டு பட்டி. பொதுவாக வாழைக்கு வேண்டி மூங்கில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வாத நாராயண மரங்கள் இந்த பட்டியை சுற்றி இருக்கும். இந்த மரத்தின் பூக்களின் மொட்டுக்களை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் அதிகம் விளையாடிய இடம். பட்டியை ஒட்டி கபடி விளையாடும் மைதானம். பிறகு தொடர்ந்து வீடுகள். வலது புறம் முதல் வீடு TNR வீடு. குடுமி வைத்த ரிடயர்ட் டீச்சர் வீடு. பிறகு சிறு காலி நிலம். பிறகு அர்த்தநாரி வாத்தியார் வீடு. அடுத்து ஒரு பாழடைந்த வீடு. அச்சுப்பாட்டி குடி இருந்த வீடு. தொடர்ந்து செட்டியார் வீடு, சாமிநாத அய்யர் வீடு, அடுத்து காலி நிலம். இதை ஒட்டித்தான் நாங்கள் குடி இருந்த கூரை வீடு. இதில் இரு போர்ஷன்கள். முதல் போர்ஷன் சற்று பெரியது. இதில்தான் நாங்கள் இருந்தோம். மற்றதில் EB ல் வேலை செய்து வந்த ராமநாதன் மாமா. இதை அடுத்து காலி நிலம். இந்த இடமும் அய்யர் வீட்டு பட்டியாக செயல்படும். பட்டியை ஒட்டி சுவாமிநாத டாக்டர் வீடு. (என்னை மீண்டும் உயிர்பித்தவர்,, இதைப்பற்றி தனியாக எழுதுகிறேன். கடைசி வீடு சின்னு செட்டியார் வீடு. இந்த வீட்டு மாடியில் கல்லூரியில் வேலை செய்து வந்த botony லெக்சரர் ரவீந்திரன் சார் குடி இருந்தார். இடது புறம் பட்டியைத் தொடர்ந்து செட்டியார் வீடு, ராமண்ணா வீடு, ஜெகதீச ஐயர் வீடு. அடுத்து பர்வதம் மாமி வீடு. பிறகு அனந்தா lodge வீடு. இது பின்னாளில் பாக்கு செட்டியாரால் வாங்கப்பட்டு அவர்கள் குடி வந்தார்கள். தொடர்ந்து சிதம்பர ஐய்யர் வீடு, கம்பவுண்டர் மாமா (எனக்கு விவரம் தெரிந்த பிறகு) குடியிருந்த வீடு. கடைசி வீடு கணபதி அய்யர் வீடு. அடுத்து வாய்க்காலுக்கு செல்லும் வழி. ஒட்டி தென்னந்தோப்பு . சின்னு செட்டியாருக்கு சொந்தமானது. இதில் ஒரு பாழடைந்த கிணறு ஒன்று இருக்கும். முயல் சிங்கத்தை தள்ளிவிட்ட கிணறு போல் நீர் அதிகம் இல்லாமல் சேற்றுடன் இருக்கும். கிணற்றின் உள்ளே ஒரு கல் நீட்டிக்கொண்டிருக்கும். கண்ணாமூச்சி ஆடும் பொது அதிகம் ஒண்டிகொண்ட இடம். இதில் இறங்கி உட்கார்ந்து கொண்டால் சீக்கிரம் அவுட் ஆக தேவையில்லை. தோப்பைத்தாண்டி ராஜா வாய்க்கால். ஏப்ரல் , மே மாதம் தவிர தண்ணீர் வற்றாத வாய்க்கால்.
தொடர்வேன்....
Tuesday, November 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...
2 comments:
இவ்வளவு நாட்களாக இவ்வளவு ஞா பகங்களையும் எங்கே புதைத்து வைத்திருந்தாய்? நம் உள்ளங்களையெல்லாம் வேலூர் இப்படி ஆகரமித்திருக்கிறதே! வேலூரில் நமக்கென்று ஒரு இடம் இல்லை தான். ஆனால் வேலூரே நம்முள்இருக்கிறதே!
ரமா
அன்புள்ள ரமாவுக்கு, எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. ஆனால் எழுத ஆரம்பித்த பிறகு என்னால் நிறுத்த முடியவில்லை. எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. கோர்வைப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. நீ சொன்னது போல் வேலூரில் நமக்கு ஒரு இடம் இல்லாவிட்டாலும் வேலூர் நம்மிடம் இருக்கின்றது. சுமார் 30 வருடங்கள் .....எத்தனை வீடுகள்? எத்தனை நிகழ்வுகள்? எத்ததனை மனிதர்கள்? எனக்கு நினைவில் வருவதை ரசிக்கும்படி எழுதவேண்டும் என நினைத்துள்ளேன். எழுதுவது என்பது எவ்வளவு இன்பமாக இருக்கின்றது.
உனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஸ்ரீதரன்
Post a Comment