Monday, August 30, 2010

வேங்கடேசாய மங்களம்.

வெங்கட்ராமா கோவிந்தா
நாராயண் மூர்த்தி.....

வேலூர் அக்ரஹாரா வாசிகளுக்கு இது நினைவிருகின்றதா? எனக்கும் மறந்து தான் விட்டது.  நேற்று பெரிய சீனியிடம் பேசிக்கொண்டிருந்த போது, சனிக்கிழமை திருப்பதி வெங்கடா சலபதிக்கு மாவிளக்கு ஏற்றியது பற்றி சொன்னபோது, அவனால் நினவு ஊட்டப்பட்ட  அந்த நினைவுகள்...

புரட்டாசி மாதம் பிறந்து விட்டால்.. ஒவ்வொரு சனிக்கிழமையும் கிழக்குத்தெரு பையன்கள் வரிசையாக, கும்பல் கும்பலாக ,
(அதில் பாதிப்பேர் குளித்தே இருக்க மாட்டார்கள்..)
வெங்கட்ராமா கோவிந்தா...
நாராயண மூர்த்தி...
என்று கூவிக்கொண்டு அரிசிக்காக படையெடுப்பு நிகழ்த்தும் போது, ஏதோ சிலருக்கு மட்டும் அரிசி போட்டுவிட்டு மிகுதிப்பேரை விரட்டி அடிக்கும் நிகழ்ச்சி தவறாமல் நடக்கும். இன்றும் அதெல்லாம் நடக்கின்றதா என்று தெரியவில்லை.


ஸ்ராவண சனிவாரம்... மாவிடித்து விளக்கேற்றும் வைபவம்;

ஐயா இது ஒன்றும் சாதாரண நிகழ்ச்சி அல்ல.  வீட்டு அரிசியினால் இது நிகழாது. வெள்ளிகிழமையே ஒரு பயம் வந்து விடும். சனிக்கிழமை காலை குளித்து விட்டு நாமம் இட்டுக்கொண்டு பட்டு உடுத்திக் கொள்ள வேண்டும். அப்பா சந்தியாவண்ண பேழாவில் சுற்றி சுண்ணாம்பால் வளையமிட்டு குங்குமப் போட்டு வைத்து என் கையில் கொடுத்து விடுவார்கள்.  அப்போதே கண்களில் நீர் கட்டி விடும்,,, பிறகு...?
குறைந்தது ஐந்து வீடுகளுக்குச் சென்று 'வேங்கடேசாய மங்களம்" என்று கூறி அரிசி வாங்கி வர வேண்டும். வெட்கமும் கோபமும் இணைய சாமி பயம் வேறு. விதிப்படி அய்யர் வீடு, பேங்க்   ராம ராவ் வீடு, அய்யங்கார் மாமி வீடு, சென்னம்மா அத்தை வீடு, வெள்ளமண்டி அய்யர் வீடு .... அப்பா போதுமடா சாமி என்று வீட்டுக்கு ஓடி வந்து அரிசியைத் தர வேண்டும்.  பிறகு அதை ஊற வைத்து மாவிடித்து , விளக்கேற்றி ....
பக்திக்கு மீறிய பயத்துடனும் சலிப்புடனும் வெட்கத்துடனும் செய்யப்பட இந்த வேலை..

என் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எங்களை சுற்றி இருந்த அக்கிரகாரமும் இல்லை, அந்த மனிதர்களும் இல்லை.

முதல் முறையாக அம்மாவும் அப்பாவும் இல்லாத வீட்டில் நான் மட்டும் பூமாவுடன் ஏதோ காமா சோமாவென்று  மாவிளக்கு ஏற்றியபோது,
சலிப்பும் கோபமும் காணாமல் போய்விட்டிருந்தது..
.

oru kolaththin udhayam

படித்து ரசித்தது...
தை மாதக் குளிரிலும் அந்த சின்ன ஊரை அழகு படுத்த கங்கணம் கட்டினாற்போல் எல்லாப் பெண்களும் திரட்டி அடித்துக்கொண்டு அதிகாலையில் எழுந்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வாளியினால் தண்ணீரை இறைத்தபின், மண்ணின் நிறம் ஆழமான பழுப்பு நிறமாக இருண்டது. ஈர மண்ணின் லேசான மழை வாடை, துல்லியமாக மூக்கைத் துளைத்தது.  புழுதி அடங்கிய ஈர மண்ணில் குளுமையான அமைதி.  எதோ ஒன்றை எதிர்பார்க்கும் அந்த ஈர வெற்று மண்ணின் ஒரு கணத்தின் நிதானம். அடுத்த வினாடி கறுத்த மண்ணின் மேல் பளீரென்று வெள்ளைப்புள்ளிகள்  ஒன்றன் பின் ஒன்றாக சீராக வந்து விழுந்தன. ஈரம் உலர உலர முதலில் சாதுவாக வைக்கப்பட்ட புள்ளிகள் பிரகாசமான நட்சத்திரகளைப்போல் காட்சி அளித்தன. ஒரு வினாடி அந்த சாதாரண மண் தரை புள்ளிமான் தோலாகக் கண் முன்னே விரிந்தது.  ஒவ்வொரு புள்ளியும் ஏகாந்தமான கிரகத்தின் வரிசையில், தனித்தன்மையுள்ள ஒரூ செருக்குடன் காட்சியளித்தன.  மறு வினாடியே, குனிந்த அந்தப் பெண்களின் விறுவிறுப்பான விரல்கள், அலட்சியமாக இங்கேயும் அங்கேயும் கோடுகளை, வளைவுகளை இழுத்து, ஒரு கணம் தனிச்செருக்குடன் நின்ற புள்ளிகளை இணைத்து, அவர்களுக்கிடையில் மர்ம உறவுகளை ஏற்படுத்தினார்கள். தனி புள்ளிகளின் அகம் அகன்ற பின் கோல பந்தத்தின் குழைவுகளில் தோற்றம் மாறியது.

நன்றி: காவேரி கதைகள்; கண்ணாடி சுவர்கள்.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...