Monday, August 30, 2010

oru kolaththin udhayam

படித்து ரசித்தது...
தை மாதக் குளிரிலும் அந்த சின்ன ஊரை அழகு படுத்த கங்கணம் கட்டினாற்போல் எல்லாப் பெண்களும் திரட்டி அடித்துக்கொண்டு அதிகாலையில் எழுந்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வாளியினால் தண்ணீரை இறைத்தபின், மண்ணின் நிறம் ஆழமான பழுப்பு நிறமாக இருண்டது. ஈர மண்ணின் லேசான மழை வாடை, துல்லியமாக மூக்கைத் துளைத்தது.  புழுதி அடங்கிய ஈர மண்ணில் குளுமையான அமைதி.  எதோ ஒன்றை எதிர்பார்க்கும் அந்த ஈர வெற்று மண்ணின் ஒரு கணத்தின் நிதானம். அடுத்த வினாடி கறுத்த மண்ணின் மேல் பளீரென்று வெள்ளைப்புள்ளிகள்  ஒன்றன் பின் ஒன்றாக சீராக வந்து விழுந்தன. ஈரம் உலர உலர முதலில் சாதுவாக வைக்கப்பட்ட புள்ளிகள் பிரகாசமான நட்சத்திரகளைப்போல் காட்சி அளித்தன. ஒரு வினாடி அந்த சாதாரண மண் தரை புள்ளிமான் தோலாகக் கண் முன்னே விரிந்தது.  ஒவ்வொரு புள்ளியும் ஏகாந்தமான கிரகத்தின் வரிசையில், தனித்தன்மையுள்ள ஒரூ செருக்குடன் காட்சியளித்தன.  மறு வினாடியே, குனிந்த அந்தப் பெண்களின் விறுவிறுப்பான விரல்கள், அலட்சியமாக இங்கேயும் அங்கேயும் கோடுகளை, வளைவுகளை இழுத்து, ஒரு கணம் தனிச்செருக்குடன் நின்ற புள்ளிகளை இணைத்து, அவர்களுக்கிடையில் மர்ம உறவுகளை ஏற்படுத்தினார்கள். தனி புள்ளிகளின் அகம் அகன்ற பின் கோல பந்தத்தின் குழைவுகளில் தோற்றம் மாறியது.

நன்றி: காவேரி கதைகள்; கண்ணாடி சுவர்கள்.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...