அந்தமான் அழகுகள் ... தொடர்ச்சி...நாள் மூன்று......(28/09/2018)
இன்றும் செல் ஃபோன் அழைக்கும் முன்பே விழிப்புத்தட்டி விட்டது. இரண்டு மணிக்குக் கண் விழித்தும், களைப்போ சலிப்போ இல்லை. வலியும் என்னை விட்டு சற்று விலகி இருந்தது. அதற்கும் ஊர் சுற்ற ஆனந்தமோ என்னவோ! அல்லது ஊருக்குத்திரும்பி வா, பிறகு உன்னைக் கவனித்துக்கொள்கிறேன் என்றும் நினைத்திருக்கலாம். குளித்த மாதிரி பாவ்லா செய்துவிடலாம் என்று முடிவெடுத்து, முகம் கழுவி, வாசனை ஸ்ப்ரேயுடன் ரெடியாகும் போது, பக்கத்து அறைக்காரர் வந்து, , நாங்கள் குளித்துவிட்டோம் என்று சொல்ல, நாங்களும், 'வள்ளுவரின் வாக்கின் படி', குளித்துவிட்டோம் என்று சொல்லிவிட்டோம், புறை தீர்ந்த நன்மை பயக்கும் என்பதால்.
தூக்கம் விழித்தவுடன் காப்பி கேட்கும் உடம்பும், அந்த அகால வேளையைக்கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டது. மூன்று மணிக்கெல்லாம், ரெடியாகி, பெட்டிகளை பேக் செய்து ( இன்று இந்த ஹோட்டலைக் காலி செய்ய வேண்டும், இரவு, வேறு இடத்தில் தங்க ஏற்பாடு.) மெயின் ஹாலுக்கு வந்தோம், அங்கு எங்களுக்கு முன்னரே பலர் ஆஜாராகியிருந்தனர். எல்லாப்பெட்டிகளையும் ஒரு அறையில் வைத்து விட்டுச் செல்ல முடிவாகியது, சுற்றுலா நடத்துபவர், எல்லாப் பெட்டிகளையும் புது ஹோட்டலுக்கு மாலை எடுத்துவந்துவிடுவார் என்று சொல்லிவிட்டார்கள்.
சரியாக மூன்று , மூன்றரைக்கெல்லாம், ஹோட்டல் கீழே வந்து காத்திருக்க, இன்னும் அந்த கைடு வந்திருக்கவில்லை. ஃபோன் செய்யும் போதுதான், டிரைவர் தூக்கத்திலிருந்து எழுந்தார். இன்னும் பதினைந்து நிமிடங்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லவும், அனைவரும் மெயின் ரோடில் வந்து காத்திருந்தோம்.
முதலில் கைடு செல்வம் வந்து சேர, சில நிமிடங்களில் வேனும் காரும் வந்து சேர்ந்தது. நான்கு மணிக்கெல்லாம் வண்டி கிளம்பியதும், விட்ட தூக்கம், ஜன்னலில் வந்த சில்லென்ற காற்றில் பட்டெனப்பற்றிக் கொள்ள, விழிப்பு வரும் பொழுது வ்ண்டி ஓரங்கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. மணி காலை ஐந்து, ஐந்தேகால் இருக்கும். நன்கு விடிந்திருந்தது.
வண்டி நின்றிருந்த இடம் செக்போஸ்ட். இதைத்தாண்டித்தான் ஜார்வா இன மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் பயணம் செல்ல வேண்டும். ஆறு மணிக்குத்தான் வண்டிகளை அனுப்புவார்கள் என்பதால், எங்களுக்கு முன்பே சில வண்டிகள் நின்றிருந்தன. பயணிகள் அனைவரின் பெயர், ஆதார் எண் முதலியவற்றைச் செக்போஸ்டில் தர வேண்டியிருந்ததால், எல்லோரிடமும் ஆதார் கார்டை வாங்கி, நான் படிக்கப்படிக்க, திரு,பழனியப்பன் லிஸ்ட் தயார் செய்தார், அதற்குள் மற்றவரெல்லாம் கீழிறங்கி விட்டிருந்தனர். சாலையின் இருபுறமும் இருந்த கடைகளில் இட்லி, வடை,காபி,டீ முதலியன கிடைத்தன. நானும் மனைவியும் இறங்கி, அருகே இருந்த கடைக்குச் சென்றோம். வடை சூடாக தயாராகிக்கொண்டிருந்தது. முதலில் டீ மட்டும் சொல்லிவிட்டு, பின் வடையின் மேல் வந்த மயக்கத்தால் இரண்டு வடைகளும் வாங்கினோம், சுடச்சுட வாணலியில் இருந்த மொறு மொறுவென இருந்தது வடை! காலையில் இரண்டு மணிக்கு எழுந்ததால்,நல்ல பசியிருந்ததால், மேலும் இரண்டு வடையும், டீயும் அருந்தினோம், காலை உணவிற்கான பார்சல் இங்கே தயாராகி வண்டியில் ஏற்றப்பட்டது. அதற்குள் செக் போஸ்ட் திறக்க ஆரம்பித்ததால், அனைவரும் வண்டியில் ஏற வண்டி, மலைப்பாதையில் செல்ல ஆரம்பித்தது. ஃபோட்டோக்கள் எடுப்பது தடுக்கப்பட்டிருந்ததால், செல்லை உள்ளே வைக்குமுன் எடுத்த ஃபோட்டோ இது. அங்கு இருந்த சில கடைகள்.
மேலே பயணிக்கு முன் , நாம் செல்ல இருக்கும் வழித்ததடத்தை கூகிள் மேப் மூலம் எடுத்து இங்கே தருகிறேன்.
இதுதான் செக்போஸ்ட். இங்கிருந்துதான் ஆதிவாசிகளின் பகுதி ஆரம்பிக்கின்றது. கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர் நீளமான பாதை. யாரும் ஆதிவாசிகளைப்படம் பிடிக்கக்கூடாதென்று சொல்லிவிட்டார்கள்.மேலும் சில மேப் ஷாட்கள்.
மரங்கள், மரங்கள், மரங்கள்...... வித விதமாய், குள்ளமாய், அகலமாய், உயரமாய், மிக உயரமாய், அடர்த்தியாய், எங்கெங்கு காணினும் பச்சைதான். புறப்பட்ட சில நேரத்திலேயே ஒரு ஆதிவாசி மனிதன் தோளில் வில்லுடன் சாலையில் சென்று கொண்டிருந்தான். பஸ் உள்ளே இருந்த அனைவரும், ஆஃப்ரிக்கன் சஃபாரியில் சென்று சிங்கத்தையும், புலியையும் பார்க்கும் ஆவலுடன் இருக்கையில் இருந்து எழுந்து ஆர்ப்பரித்துப் பார்த்தனர். பேருந்துவின் வேகத்தில் அனைவராலும் பார்க்க இயலவில்லை. வண்டியிலிருந்த எங்கள் மனோநிலையைப்பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருந்தது. மிருகக்காட்சிச்சாலையில் மிருகங்களை வேடிக்கைப்பார்ப்பது போல், மனிதனை மனிதனே வேடிக்கைப்பார்க்கும் நிலை பரிதாபமாக இருந்தது. இன்னும் சற்றுத்தொலைவில் , இரு ஆதிவாசி சிறுவர்கள் சாலையோரமாக உடைந்த மரத்துண்டின் மீது அமர்ந்திருந்தார்கள். எங்களைப்பார்த்து அவர்களும் மகிழ்ச்சியாக கை அசைத்தார்கள். அவர்களுக்கு இது வழக்கம் போலிருக்கிறது. யாருடனும் பேசவோ, நம் உணவைக்கொடுக்கவோ, படம் எடுக்கவோ கூடாதென்று வழிநெடுக போர்டு வைத்திருந்தார்கள். சாலையின் முன்னும் பின்னும் வண்டிகள் ஊர்ந்தவண்ணம் சென்று கொண்டிருந்தன. காணும் பச்சைகள் படமெடுக்கும் என் இச்சையை அதிகரிக்க, மொபைல் ஃபோனில் மரங்களைப்படமெடுக்க ஆரம்பித்தேன். சில படங்கள் என் ஓவியத்திற்கு உதவும் என்ற ஆசையும் கூடத்தான் இருந்தது. நான் எடுத்த சில(பல) படங்கள்.
வழியில் சென்ற ஒரு லாரியிலும் சில ஆதிவாசி மனிதர்கள் சென்றதைக்கண்டோம். அவர்கள் ஆதிவாசி மனிதர்களா என்பதில் சந்தேகம் தான், ஆனால் எல்லோரும் முகத்தில் வெள்ளை நிறத்தில் சாம்பல் போன்ற ஓன்றைப்பூசியிருந்தனர். எல்லோரும் நீக்ரோக்களின் சாயலிலேயே இருந்தனர். வேன் எட்டு மணி சுமாருக்கு ஜார்வா வனப்பகுதியின் எல்லையை அடைந்தது.
வேனிலிருந்து இறங்கிய அனைவருக்கும் சிற்றுண்டிப்பொட்டலம் கொடுக்கப்பட்டது. வெயில் வெளுத்து வாங்கியது. தினமும் குடை எடுத்துசென்ற நாங்கள் அன்று எடுத்து வரவில்லை. ஒரு ஓரமாக நின்று அனைவரும் உணவருந்தினோம். புறப்படும் கப்பலில் ஏறி மறு கரைக்குச்செல்ல வேண்டும். அங்கிருந்து சிறு படகு மூலம் லைம்ஸ்டோன் குகை காண செல்லவேண்டும். சாலை இங்கு முடிந்து, உப்பங்கழி போல் உள்ள இடத்தைக் கப்பலில் கடந்து அக்கரை சென்ற பின்னரே மீண்டும் சாலை தொடங்கும். கார்கள், பஸ்கள், லாரிகள் எல்லாமே கப்பல் மூலம் தான் அக்கரை செல்ல வேண்டும். அரை மணிக்கு ஒரு முறை கப்பல் வந்து செல்கிறது. அதில் ஏறுவதற்காக வண்டிகள் வரிசையாக நிற்கின்றன. நாங்கள் இருந்த இந்த இடத்தில் கூகிள் மேப்பின் படமும், அந்த இடத்தில் எடுத்த பிற படங்களும் உங்களுக்காக.
நாங்கள் எடுத்த காட்சிகள்.
பஸ்களும் கார்களும் மனிதர்களும் ஏறிய பிறகு அந்தச்சின்னக்கப்பல் மறு கரையை நோக்கித்தன் பயணத்தைத்தொடங்கியது. பத்து பதினைந்து நிமிடப்பயணம் தான் என்பதால் அனைவரும் அங்குகிங்கு என நின்றபடியே பயணம் செய்தனர். பயணம் செய்தபோது எடுத்த சில காட்சிகள்.
சற்று நேரத்திலேயே அக்கரையை அடைந்ததும், பஸ்கள், கார்கள் இறங்கிய பின் நாங்களும் இறங்கினோம். பத்துபேருக்கு ஒரு குழுவாய் பிரிந்து, குழுவுக்கு ஒரு படகில் ஏறி லைம் ஸ்டோன் குகை பார்க்கக் கிளம்பினோம். படகில் வந்த கைடுக்கு நாங்கள் இருவரும் ஹிந்தி பேசியதும், மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
எல்லோருக்கும் லைஃப் ஜாக்கட் கட்டாயமாக அணிந்துகொள்ள வேண்டியிருந்தது. ஜாக்கட் அணிந்தால் குனிந்து பார்க்க மிக சிரமமாயிருந்தது. அப்படியும் காமிராவைக்கழுத்தில் மாட்டியபடி செல்லும் பாதையில் சில படங்கள் எடுத்தேன்.
கிட்டத்தட்ட நம் சிதம்பரம் அருகில் இருக்கும் பிச்சாவரம் காடுகள் போலவே இருந்தன. அரைமணி நேரப்பயணம் இருக்கும். நடுவில் சில இடங்களில் டும் டும் என படகு பாறையில் மோதிச்சென்ற போது வயிற்றைக்கலக்கியது. சினிமாவில் வரும் போட் ரேஸ் போல் படகுகள் போவதும் வருவதுமாக இருந்தன. பின் ஓரிடத்தில் நின்று எங்கள் குழுவின் பத்து பேரையும் கைடு அழைத்துச்சென்றார். தண்ணீரைத்தவிர வேறு சாப்பிடும் பொருளெதையும் கொண்டு செல்லத்தடை விதிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்று சொன்னார். எங்கள் குழுவில் நாங்கள் தான் கடைசி. வழியெங்கும் மேடும் பள்ளமும், சகதியும் , மனைவி நடக்க மிகவும் சிரமப்பட்டார். பிறகு செருப்பைக்கையில் எடுத்துக்கொண்டு ஒரு வழியாய் ஓப்பேற்றி நடக்க ஆரம்பித்தோம். திரும்பி வருபவர்களுக்கு வழி விட்டு வேறு செல்லவேண்டும். சில இடங்களில் மிகக்குறுகலான பாதை, இறக்கங்களுடனும் ஏற்றங்களுடனும் இருந்தது. நாங்கள் இறங்கிச்சென்ற போது எடுத்த சில காட்சிகள்.
நம்மை விட வயதானவர்களும், முடியாதவர்களும் நடந்து வருவதைப்பார்த்தால், நமக்கும் ஒரு உத்வேகம் வந்து விடுகிறது. இதில் சிலர் வேறு, அங்கு ஒன்றும் இல்லை, பார்ப்பதற்கு என்று குண்டு வேறு போட்டுச்சென்றார்கள். என்பது சதவிகிதம் தமிழர்கள் தான் சுற்றுலா வந்திருந்தார்கள்.
மரங்களின் ஊடே நடந்தாலும், சரியான வெக்கை! முகத்தில் இருந்து வியர்த்து வழிந்து காமிராவெல்லாம் நனைய ஆரம்பித்து விட்டது. குகையை நெருங்கும் இடத்தில் , ஐந்தாறு கடைகள் இருந்தன! தவித்த வாய்க்குத்தண்ணீர் போல், அருமையான எலுமிச்சை ரசம், உப்புடனும், சர்க்கரையுடனும் கிடைத்தது. அமிர்தம் என்றால் என்னவென்று விளங்கியது அன்றுதான். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, நடையைத்தொடர, வந்தே விட்டது குகை.
முழுவதும் சுண்ணாம்புப்படிவங்களால் ஆன பாறைகள். வித விதமான வடிவங்கள். பார்ப்பவரின் கற்பனைக்கு ஏற்ற மாதிரி வடிவங்கள். கீழே சகதி! பாறைகளிலிருந்து தண்ணீர் வேறு வடிந்துகொண்டிருந்தது. கைடு கூடவே வந்து விளக்கிக்கொண்டிருந்தார். சில காட்சிகள்.
இயற்கையின் அற்புதமென்றே சொல்ல வேண்டும். வித விதமான உருவங்களில் சுண்ணாம்புப்பாறைகள். அவற்றிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள், கீழே வழுக்கும் தரை. மிக நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும். இந்தப்படிவங்கள் வளர்ந்துவருவதால், குகையில் ஓரிடத்திற்கு மேல் செல்லத் தடுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த இடத்தில், கைடு எங்கள் எல்லோரையும் நிற்க வைத்து ஒரு படம் எடுத்துக்கொடுத்தார். அந்தப்படத்தையும் மேலே பதிந்துள்ளேன். பிறகு திரும்பி வந்தவழியே செல்லும்போது, மீண்டும் எலுமிச்சைரசம் அருந்தினோம்.
எப்பொழுது வேண்டுமானாலும் மழை வரும் என்பதால், கைடு எங்களை வேகமாக வரச்சொன்னார். எல்லோரும் வேகமாக முன்னே சென்றாலும் எங்களால் முடியவில்லை. சொன்னாற்போல் மழையும் வந்துவிட்டது. நனைந்துகொண்டே சென்றோம். குழு நண்பர் திரு.பெரியசாமி எங்களுடன் துணையாக வந்துகொண்டிருந்தார். அவரது பழைய நினைவுகளை எங்களுடன் அசை போட்டுக்கொண்டு வந்தார். விவசாயம் செய்து பழக்கப்பட்டதால், மழையின் சகதியில் நடப்பது அவருக்கு சிரமமாயில்லை என்று சொன்னார். சிறிது நேரத்தில் மழை நின்றுவிட்டது. ஈரமும் அதுவாக காய்ந்துவிட்டது. முன்னே சென்ற அனைவரும் நாங்கள் வந்ததும் அதே படகில் ஏறி திரும்பினோம். மீண்டும் லைஃப் ஜாக்கட் அணிந்து வந்த வழியே பயணம். இருபது இருபத்தைந்து நிமிடங்களில் பாராடாங்க் சென்றடைந்தோம். அங்கு மாடியில் இருந்த ஹோட்டலில் அனைவருக்கும் உணவு ஏற்பாடாகியிருந்தது. மூன்று மணிக்குத்திரும்பும் கப்பலில் அக்கரைக்குச்செல்ல வேண்டும் என்பதால், கீழே இருந்த ஓய்விடத்தில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டோம். சற்று நேரத்தில் மீண்டும் மழையும் திரும்ப வந்தது. அந்தமானில் மழை என்று தொலைக்காட்சியில் பார்த்ததை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. கப்பலில் ஏறும்போது எடுத்த சில காட்சிகள்.
லாரி கப்பலில் ஏறும் காட்சி.
கடலில் பெய்யும் மழை!
பத்து பதினைந்து நிமிடங்களில் மீண்டும் ஜார்வா நிலப்பகுதியை அடைந்தோம். இறங்கும் பொழுதும் நல்ல மழை!நனைந்துகொண்டே இறங்கி ஓடி, அங்கிருந்த ஓய்வறக்குச்சென்றடைந்தேன். அங்கு செக்போஸ்ட் மீண்டும் திறக்க நேரம் இருந்ததால், அங்கு காத்திருந்தோம். அங்கிருந்த ரெஸ்ட்ரூம் பொறுப்பாளர் ஒரு தமிழர். தண்ணீர் பாட்டில்களும் அவர் விற்றுக்கொண்டிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நிறைய தகவல்கள் சொன்னார்.
ஜார்வா இன மக்களுக்காக தனி போலீஸ் இலாக்காவே இயங்குகிறது. சிவிலியன் போலீஸுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. அரசாங்கம் அவர்களுக்கு ரேஷன், வீடு முதலான வசதிகள் செய்து கொடுத்துள்ளது. ஆனால் சிவிலியன் யாரும் அவர்களுடன் பேசவோ, எதையும் கொடுக்கவோ கடும் தடை உள்ளது. கண்டிப்பாக அவர்களைப் புகைப்படம் எடுக்கக்கூடாது. மாலை ஐந்து மணிக்கு மேல் பொதுமக்கள் யாருக்கும் அங்கு தங்க அனுமதியில்லை. மின்சாரம் கிடையாது. கிட்டத்தட்ட அவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஐந்து மணிக்கு மேல் ஜார்வா மக்கள் அந்த ரெஸ்ட் ரூம் இருக்கும் பகுதிக்கெல்லாம் வந்து அமர்ந்திருப்பார்கள் என்றும், ஹிந்தி நன்றாக பேசுவார்கள் என்றும் மேலும் அவர் கூறினார். பணம் காசு கேட்க மாட்டார்கள் என்றும், சாப்பிட வேண்டும் என்றும் கேட்பார்கள் என்றும் சொன்னார். அவர்கள் முகத்தில் பூசியிருப்பது ஒரு வித மண் என்றும் கொசு முதலான பூச்சிகளிடமிருந்து தங்களைக்காத்துக்கொள்ளவே அதைப்பூசிக்க்கொள்கிறார்கள் என்றும் சொன்னார். அந்தச்சிறுவர்களுக்கு பள்ளிக்கூட வசதிகளும் உண்டு என்ற செய்தியையும் சொன்னார்.
மறுநாள், செளம்யாவின் வீட்டிலிருந்து ஹோட்டல் திரும்பும் போது, அந்த காரின் ஓட்டுனர் மேலும் சில செய்திகள் சொன்னார். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் அவர்கள் மிகக்கொடூரமானவர்களாக இருந்தார்கள். நர மாமிசம் சாப்பிடுவார்கள். பொதுமக்கள் வாழும் பகுதியில் அதிகாலையில் கதவைத்தட்டி, கதவைத்திறந்ததும், அம்பினால் தாக்கி, தலையை அறுத்துச்சென்று விடுவார்கள். அதிகத்தலை கொண்டுவருபவரே அவர்களின் தலைவராக இருக்கமுடியும். எனவே அந்தப்பகுதியில், மிக நெருங்கிய சொந்தக்காரர்கள் வந்து கதவைத்தட்டினாலும், யாரும் கதவைத்திறக்க மாட்டார்கள். விடியும் வரை வாசலிலேயே காத்திருக்க வேண்டியதுதான். பிறகு ஒரு சமயம், அவர்களில் யாரோ அடிபட்டுக்கிடந்த போது, அங்கிருந்த மக்கள் சிகிச்சை அளித்துக்காப்பாற்றி, கொண்டுவிட்டதும், அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இப்பொழுது ஒன்றுப் பிரச்சனையில்லையாம். ஆனால் தனியாக மாட்டினால் சிக்கல் தானாம்.அதற்காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடும், தனி போலீஸும் என்று கதையை முடித்தார். அவர் அங்கேயே பிறந்து வாழ்பவர். சொன்னதை நம்பி இங்கே எழுதிவிட்டேன்.
மழை சற்று நிற்கவும், குழுவில் வந்த சிலர் தூரத்தில் ஜார்வா மக்கள் நடமாடுவதாகவும் அவர்கள் குழந்தகள் விளையாடுவதாகவும் பார்த்து வந்து சொல்ல, ஒவ்வொருவராகச்சென்று வேடிக்கை பார்த்து வந்தோம். பின் காலை போலவே பயணிகள் பெயரும், ஆதார் நம்பரும் எழுதி செக்போஸ்ட் திறந்தவுடன் கொடுத்துவிட்டு, போர்ட்ப்ளேயர் நோக்கிக்கிளம்பினோம். வழியிலும் அங்கும் இங்குமாய் சில ஆதிவாசிகள் தட்டுப்பட்டனர்.
காலையில் நின்ற செக்போஸ்ட் வந்ததும் வேன் நின்றது. , அங்கிருந்த கடைகளில் காபி, டீ, பக்கோடா போன்றவைக்கிடைக்க, அனைவருக்கும் அது தேவையாயிருந்தது. ஒரு தமிழரின் கடையும் இருந்தது, தமிழ்ப்பெயர்ப்ப்லகையுடன்.
மீண்டும் புறப்பட்டு, புதிய தங்குமிடம் வந்தோம். அங்கு எல்லோருடைய பெட்டிகளும் வந்திறங்கியிருந்தன. நண்பர் பெரியசாமியின் தயவால், கீழ் தளத்திலேயே தங்குமிடம் கிடைத்தது. முன்பிருந்த ஹோட்டலின் அறையை விட அறை சிறியதாய் இருந்தாலும், ஏசி இருந்ததால், ஒன்றும் பெரிதாகப் பிரச்சனையாய் இல்லை. அங்கிருந்த டீவியும் வேலை செய்யவில்லை. மிக நிம்மதியாய் இருந்தது. அதைவிட நிம்மதி, காலையில் ஏழு மணிக்குப் புறப்பட்டால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். டாய்லட்டில் ஃப்ள்ஷ்ஷும் சரியாக வேலை செய்யவில்லை. காலையில் வேறு அறை மாற்றித்தருவாதாக்ச்சொல்லிவிட்டார்கள், சமாளித்துக்கொள்ளலாம் என்று அங்கேயே தங்கிவிட்டோம். முதல்நாள் நனைந்த துணிகளை இங்கே காய வைத்துவிட்டு, உறங்கச்சென்றுவிட்டோம். நாலை ராஸ் தீவு மற்றும், நார்தெர்ன் பேயில் பவளப்பாறைகளையும் பார்க்க இருக்கிறோம். ஸ்கூபா டைவின்ங் போன்ற நீர் விளையாட்டுகளும் உண்டாம். நாளை சந்திப்போம்..........

![]() |
| ஜார்வா எல்லை முடிவு |
![]() |
| அக்கரை செல்லும் கடல் பாதை |
![]() |
| லைம் ஸ்டோன் குகை இருக்கும் இடம் |
![]() |
| லைம் ஸ்டோன் குகை இருக்கும் இடம் |
![]() |
| தூரத்தில் தெரியும் கட்டிடம் ஆதி வாசிகளின் குடியிருப்பு என்பது திரும்பி வருகையில் தெரிந்தது, மாலையில் இந்த இடத்தில் ஆதி வாசி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். |
| கப்பலில் ஏற வரிசையாய் நிற்கும் கார்கள் |
| வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்..... |
| எதிர்கரையில் நாங்கள் அடையவேண்டிய இடம், பாராடாங்க். |
சற்று நேரத்திலேயே அக்கரையை அடைந்ததும், பஸ்கள், கார்கள் இறங்கிய பின் நாங்களும் இறங்கினோம். பத்துபேருக்கு ஒரு குழுவாய் பிரிந்து, குழுவுக்கு ஒரு படகில் ஏறி லைம் ஸ்டோன் குகை பார்க்கக் கிளம்பினோம். படகில் வந்த கைடுக்கு நாங்கள் இருவரும் ஹிந்தி பேசியதும், மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
எல்லோருக்கும் லைஃப் ஜாக்கட் கட்டாயமாக அணிந்துகொள்ள வேண்டியிருந்தது. ஜாக்கட் அணிந்தால் குனிந்து பார்க்க மிக சிரமமாயிருந்தது. அப்படியும் காமிராவைக்கழுத்தில் மாட்டியபடி செல்லும் பாதையில் சில படங்கள் எடுத்தேன்.
கிட்டத்தட்ட நம் சிதம்பரம் அருகில் இருக்கும் பிச்சாவரம் காடுகள் போலவே இருந்தன. அரைமணி நேரப்பயணம் இருக்கும். நடுவில் சில இடங்களில் டும் டும் என படகு பாறையில் மோதிச்சென்ற போது வயிற்றைக்கலக்கியது. சினிமாவில் வரும் போட் ரேஸ் போல் படகுகள் போவதும் வருவதுமாக இருந்தன. பின் ஓரிடத்தில் நின்று எங்கள் குழுவின் பத்து பேரையும் கைடு அழைத்துச்சென்றார். தண்ணீரைத்தவிர வேறு சாப்பிடும் பொருளெதையும் கொண்டு செல்லத்தடை விதிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்று சொன்னார். எங்கள் குழுவில் நாங்கள் தான் கடைசி. வழியெங்கும் மேடும் பள்ளமும், சகதியும் , மனைவி நடக்க மிகவும் சிரமப்பட்டார். பிறகு செருப்பைக்கையில் எடுத்துக்கொண்டு ஒரு வழியாய் ஓப்பேற்றி நடக்க ஆரம்பித்தோம். திரும்பி வருபவர்களுக்கு வழி விட்டு வேறு செல்லவேண்டும். சில இடங்களில் மிகக்குறுகலான பாதை, இறக்கங்களுடனும் ஏற்றங்களுடனும் இருந்தது. நாங்கள் இறங்கிச்சென்ற போது எடுத்த சில காட்சிகள்.
நம்மை விட வயதானவர்களும், முடியாதவர்களும் நடந்து வருவதைப்பார்த்தால், நமக்கும் ஒரு உத்வேகம் வந்து விடுகிறது. இதில் சிலர் வேறு, அங்கு ஒன்றும் இல்லை, பார்ப்பதற்கு என்று குண்டு வேறு போட்டுச்சென்றார்கள். என்பது சதவிகிதம் தமிழர்கள் தான் சுற்றுலா வந்திருந்தார்கள்.
மரங்களின் ஊடே நடந்தாலும், சரியான வெக்கை! முகத்தில் இருந்து வியர்த்து வழிந்து காமிராவெல்லாம் நனைய ஆரம்பித்து விட்டது. குகையை நெருங்கும் இடத்தில் , ஐந்தாறு கடைகள் இருந்தன! தவித்த வாய்க்குத்தண்ணீர் போல், அருமையான எலுமிச்சை ரசம், உப்புடனும், சர்க்கரையுடனும் கிடைத்தது. அமிர்தம் என்றால் என்னவென்று விளங்கியது அன்றுதான். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, நடையைத்தொடர, வந்தே விட்டது குகை.
முழுவதும் சுண்ணாம்புப்படிவங்களால் ஆன பாறைகள். வித விதமான வடிவங்கள். பார்ப்பவரின் கற்பனைக்கு ஏற்ற மாதிரி வடிவங்கள். கீழே சகதி! பாறைகளிலிருந்து தண்ணீர் வேறு வடிந்துகொண்டிருந்தது. கைடு கூடவே வந்து விளக்கிக்கொண்டிருந்தார். சில காட்சிகள்.
| உச்சியில் இருந்து வரும் வெளிச்சம் |