Wednesday, February 10, 2010

அன்புள்ள கீதாவிற்கு,

சித்தப்பாவைப்பற்றி உன் blog படித்தேன். உன்னுடைய கருத்துக்கள் அனைத்தும் மிக சரியானவை. அதுவும் அந்த transistor... நம் இளைமைக்காலத்தில் நமது இணை பிரியா தோழனாக ( தோழிதான் சரி.. ஏனென்றால் அது sistor அல்லவா?)

இருந்தததை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? இன்று எவ்வளவுதான் நவீன சாதனங்களில் நாம் இசையை ரசித்துக்கொண்டிருந்தாலும் அந்த ரேடியோவில் MW /SW பட்டன்களை மாற்றி மாற்றி அமுக்கி .......எவ்வளவு உழைத்திருக்கும் அந்த ரேடியோ.. பாபு சர்வீஸ் சென்டருக்கு எவ்வளவு முறை பயணித்திருக்கும் அது. புதன் கிழமைகளில் ரேடியோ சிலோனில் BINACA GEETH MAALA கேட்டதாகட்டும், சரியாக வராத திருச்சி விவித பாரதி கேட்டதாகட்டும், அப்பா SW ல் மெட்ராஸ் வானொலியில் கச்சேரி கேட்டதாகட்டும்..

தோளால் ஆன சட்டை அணிந்த அந்த ரேடியோ ..ம்ம்ம்ம்...

என்னுடைய படங்களுக்கு விமரிசனங்கள் வழங்கிய ரமாவுக்கும் சிவராமுவுக்கும் நன்றி.

வண்ணத்தூரிகை சொல்கிறது...

எண்ணுவம் என்பது இழுக்கென்று

இப்போது புரிந்தது..

எனவே "கருமத்தை" கைகழுவ

நினைத்துள்ளேன்..

Sunday, February 7, 2010
















இன்னும் சில படங்கள்..




















என்னுடைய சில பெயிண்டிங்குகளை அப்லோட் செய்துள்ளேன். தற்காலமாக வரைவதில்லை. நேரமின்மையா, மனமின்மையாஎன்று தெரியவில்லை. மீண்டும் நிறைய வரையவேண்டும் என்று மனம் விரும்புகின்றது. பார்ப்போம்...






நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...