Sunday, November 20, 2011

1911

ஜாக்கி சென்னின் நூறாவது படமான 1911 நேற்று கரூரில் பார்த்தேன்., தமிழில் dub செய்யப்பட்ட படம். சீனப் புரட்சியைப்பற்றிய படம்.  மிகவும் எதிர்பார்ப்புடன் சென்றிருந்தேன். தியேட்டரில் சுமார் 100 பேர் இருந்திருப்பார்கள். சன் யாட் சென் காலக்கதை. துப்பாக்கிகளும் குண்டுகளும் பொழிந்துகொண்டிருக்கும் காட்சிகள் மிக நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளன. படத்தில் ஜாக்கி சானுக்கு காட்சிகள் மிகக்குறைவு. எதோ சில செண்டிமெண்ட் காட்சிகள் மட்டும் தான்.  ஒரே ஒரு சண்டைக்காட்சி தான். அதுவும் சில நொடிகளே நீடிக்கின்றன. ஜாக்கி சானின் படத்தில் இருக்கும் நகைச்சுவையும் அதிரடி ஆக்சனும் மிஸ்ஸிங். சீனப்புரட்சி என்பதால் மனமும் லயிக்கவில்லை. மொத்தத்தில் இந்தப்படம் சீனாவுக்கே அர்ப்பணம்.  

Wednesday, November 16, 2011

நான் எழுதி நிரம்ப நாட்கள் ஆகி விட்டது.  விருப்ப ஒய்வு பெற்று என்னுடைய நாட்களை எனக்காக வாழப் பழகி வருகின்றேன்.  நடுவில் சில காலம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் கிரெடிட் கவுன்சிலர் பணியும் செய்து வந்தேன். வீட்டில் ஒரு சிறிய கட்டிடப்பணி வேறு. அக்டோபர் வரை இதற்கே சரியாக இருந்தது. இப்பொழுது மிக மும்முரமாக
painting ல் கவனம் செலுத்தி வருவதாலும் என்னால் எழுத முடியவில்லை. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்..

Monday, January 17, 2011

மாட்டுப்பொங்கல்:

நேற்று மாட்டுப்பொங்கல்!


மாட்டுப்பொங்கலுக்கு நினைவு வருவது வேலூர் (பரமத்தி) தான் !

அக்ராஹாரத்து கோமள விலாசத்து திண்ணைகளில்

அமர்ந்து கொண்டு பார்த்த காட்சிகள்

இன்றும் பசுமையாக உள்ளன:

மனதில் வரைந்த சிறு எழுத்தோவியம் :

மாட்டுப்பொங்கல்:

காலையில் எப்பவும் போல்

காவிரிக்குச் செல்லும் வண்டிமாடுகளின்

வரிசை தெருவை நிறைக்கும்.

திரும்புகையில்-

மணல் மறந்த வண்டிகளை - நம்பாது

இழுத்து வரும் சுகம் காட்டும்

முகத்தில்- குங்குமமும் மஞ்சளும்!

பாலின் நிறமொத்த தோலில்

வண்ணப்புள்ளிக் கோலங்கள்!

கொம்புகளில் அரசியல் கட்சிக்கொடிகளின்

புதுச்சாயத்தீற்றல்கள் !

நுகத்தடியில் புது மூக்கணாங் கயிற்றுடன்

ஜல் ஜல் எனத்தலையாட்டி வருகையிலே-

அவற்றிற்குத் தெரிந்திருக்குமா -

இன்று மட்டும் இந்த சுதந்திரம் என்று?

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...