Monday, January 17, 2011

மாட்டுப்பொங்கல்:

நேற்று மாட்டுப்பொங்கல்!


மாட்டுப்பொங்கலுக்கு நினைவு வருவது வேலூர் (பரமத்தி) தான் !

அக்ராஹாரத்து கோமள விலாசத்து திண்ணைகளில்

அமர்ந்து கொண்டு பார்த்த காட்சிகள்

இன்றும் பசுமையாக உள்ளன:

மனதில் வரைந்த சிறு எழுத்தோவியம் :

மாட்டுப்பொங்கல்:

காலையில் எப்பவும் போல்

காவிரிக்குச் செல்லும் வண்டிமாடுகளின்

வரிசை தெருவை நிறைக்கும்.

திரும்புகையில்-

மணல் மறந்த வண்டிகளை - நம்பாது

இழுத்து வரும் சுகம் காட்டும்

முகத்தில்- குங்குமமும் மஞ்சளும்!

பாலின் நிறமொத்த தோலில்

வண்ணப்புள்ளிக் கோலங்கள்!

கொம்புகளில் அரசியல் கட்சிக்கொடிகளின்

புதுச்சாயத்தீற்றல்கள் !

நுகத்தடியில் புது மூக்கணாங் கயிற்றுடன்

ஜல் ஜல் எனத்தலையாட்டி வருகையிலே-

அவற்றிற்குத் தெரிந்திருக்குமா -

இன்று மட்டும் இந்த சுதந்திரம் என்று?

1 comment:

geethasrinivasan said...

நீ எழுத்தோவியமாய் படைத்ததை நான் நினைவோயிமாய் மனதுக்குள் அசைபோட்டு என் மகளிடம் சொன்னேன்,"நாங்கள் மூவரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள்..மிக அருமையான இளமை வாழக்கிடைத்தது எங்களுக்கு...இன்றைய இளைய தலைமுறைக்கு சினிமாக்காரர்கள் அறிமுகப் படுத்திய கிராமமும் மாட்டுப் பொங்கலும் தான் தெரியும்....நிஜமாகவே நாம் இளமைக் காலம் பொற்காலம் தான்...உன் கவிதை என்னை மீண்டும் வேலூர் கதவு எண் 10 கோமள விலாசிற்கே கூடிக் கொண்டு பொய் விட்டது...மிகவும் அருமை.....

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...