பகுதி இரண்டு!
பயணம் தொடர்வதற்குள் விமானம் தரை இறங்குமுன் எடுத்த மேலும் சில புகைப்படங்கள்! இது பெரிய காமிராவில் எடுத்தது!
"நீங்கள் அதிர்ஷ்டசாலி மாமா! கடந்த இரண்டு நாட்களாக விடாது மழை பெய்து கொண்டிருந்தது" என்று சொன்ன செள்ம்யாவின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் சூரியன் தகித்துக்கொண்டிருந்தான். மழை பெய்திருந்ததிற்கான அடையாளமே தெரியவில்லை, எங்கும் தெரிந்த பசுமையைத்தவிர! குளிரும் என்று புறப்படும்போதே பயமுறுத்தப்பட்டதால், பெட்டியில் தடியான ஸ்வெட்டர் வேறு!
"நீங்க வேற மாமா! சும்மா போர்த்திக்கொள்ளவே முடியாது! என்ற மருமகளின் சொல்படி, வியர்த்து வழிந்துகொண்டிருந்தது! ட்ரேவல் ஏஜண்டின் காரில் உள்ளே அமர்ந்திருக்க இயலவில்லை! அதற்குள் மனைவி, " நான் சென்று இந்த விமானத்தில் வருபவர்களை அழைத்து வருகிறேன் " என்று சொல்லி வருகைப்பகுதிக்குச் சென்றுவிட்டார். நான் மட்டும் காரில் கதவைத்திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பொழுதுதான் மேலே பதிவிட்ட செல்பி படங்கள் எல்லாம்!
அதற்குள் விமானம் வந்து விட, டாக்சி டிரைவர் வண்டியை எடுத்துக்கொண்டு எல்லாருடைய சாமான்களையும் ஏற்றுவதற்காக அந்தப்பக்கமாக சென்று விட, திரும்பி வந்த மனைவி இவர்களுடன் வராமல் இருக்க, நான் சற்று டென்ஷன் ஆகி விட்டேன். மனைவியின் கைப்பை,போன் எல்லாம் என்னிடமே இருந்தன! வேறு ஒரு வேனில் எல்லோரையும் ஏறச்சொல்லிக்கொண்டிருந்தார்கள்! நான் பின்னே சென்று தேட, மனைவி கார் முன்பு நின்று கொண்டிருந்த இடத்தில், 'காரையும் காணோம், ஆளையும் காணோம்"என்று தவித்துக் கொண்டிருப்பதைக்கண்டு, நிம்மதி அடைந்து, அருகில் சென்று அழைத்து வந்தேன்! அவள் முகத்தில் கலவரம் சற்று இருந்தபோதும், 'நான் ஒன்றும் பயப்படவில்லை" என்ற சமாளிப்பு வேறு! வேனில் அனைவரும் ஏறிக்கொள்ள, (மொத்தம் 32 பேர்) (கார் ஒன்று தனியாக ஆறு பேருக்கு, இட நெருக்கடியை சமாளிக்க) தங்கும் விடுதியை நோக்கி வேன் சென்றது! ( விரைந்தது என்று சொல்ல முடியாது, ஏனென்றால், சாலைகள் அவ்வாறு இருந்தன)! ஏற்றங்களும் இறக்கங்களுமாக சாலைகள் நாம் ஒரு கேரளா நகரத்தில் பயணிப்பது போலவே உணர்வை ஏற்படுத்தின!
விடுதியில் எங்களை வரவேற்ற அந்தமானின் ஏஜெண்ட், திரு கலைச்செல்வன் எங்களை வரவேற்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு ஃப்ரூட்டி பாக்கட் கொடுக்கப்பட்டது. இருவருக்கு ஒரு அறை என்ற வகையில் எங்களுக்கு முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டது! சிறிய அறைதான்! ஆனால் வசதியாக இருந்தது! குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டிருந்தது! தொலைபேசியில் ஏதோ ஒரு புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தார்கள்!
சீக்கிரம் ரெஃப்ரெஷ் செய்துகொண்டு வந்தால், சாப்பிட்டு விட்டு, நிகழ்ச்சிகள் தொடங்கிவிடலாம் என்றதால், அனைவரும் அவரவர் அறைக்குச்சென்று தயாராக ஆரம்பித்து விட்டனர்.
இங்கே சிறிய சிக்கல்! செக் இன் பெட்டியை டேக் போட்டு கட்டி விட்டதால் திறக்க இயலவில்லை! கத்தியும் அதனுள் தான் இருந்தது! மனைவி பெட்டியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்!
ஒருவழியாய்க் கடித்துக் குதறி, இழுத்து, சூட்கேஸ் திறக்கப்பட்டது! பிறகு கத்தியை எடுத்து அடுத்த சூட்கேஸ் வெற்றிகரமாகத்திறக்கப்பட்டது!
உடைகள் மாற்றி எல்லோரும் தயாரானதும், நேரே ஹோட்டலுக்குச் சென்றோம்! ஹோட்டல் கற்பகம்! அசைவப்பிரியர்கள் செட்டில் ஆனதும் நாங்கள் இடம் பிடித்து அமர்ந்தோம்! உணவும் பரவாயில்லை! (அந்தமான் விட்டு வரும் வரை இந்த ஹோட்டல் தான் என்று இரண்டு நாட்களுக்குப்பிறகே தெரியவந்தது! ) ( உணவு அளித்தவர்கள் ஃபேஸ்புக் ஐடி கேட்கும் அளவிற்கு (சும்மா......) நெருக்கமாகி விட்டார்கள்!)
முதல் நாள் 26/09/2018
உணவிற்குப் பிறகு அனைவரும் கிளம்பி கடற்கரைக்குச் சென்றோம்! சிறிய கடற்கரை! கோவாவை நினைவூட்டியது! மாலை நான்கு நாலரைக்கெல்லாம் இருட்டத்தொடங்கிவிடுகிறது! இந்த கடற்கரையிலிருந்து படகில் ஒரு ரவுண்ட் அடித்து பக்கத்தில் இருந்த snake islandஐ (தூர இருந்தே) பார்த்துவர ( தலைக்கு ரூ.400) ஏற்பாடு செய்யப்பட்டது! ( பாவி மக்களாகிய எங்களுக்கு, இனி வரும் எல்லா நாட்களுமே தண்ணில தான் கண்டம் என்று தெரியாமல்,) ஆளாளுக்கு நான் நான் என்று போட்டி போட்டிக்கொண்டு லைஃப் ஜாக்கட் மாட்டிக்கொண்டு படகில் ஏறினோம்! Floating Jettyல்( தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் தரை! இதில் சென்று தான் படகில் ஏற வேண்டும்) நடக்கும் போதே தள்ளாடி தள்ளாடித்தான் நடக்க வேண்டி இருந்தது! நடுவில் கைப்பிடி இருந்ததால் பிடித்துக்கொண்டு நடக்க முடிந்தது! படகில் பயணித்து ஸ்னேக் தீவு வரை சென்று மீண்டும் கரை திரும்பினோம்! நான் என் தொப்பியைத்தொலைத்தது தான் மிச்சம்! ( இது ரொம்ப நேரம் கழித்தே தெரியவந்தது, அங்கு விற்றுக்கொண்டிருந்த தொப்பிகளைப் பார்த்தபின்பே)
இனி புகைப்படங்களின் தொகுப்பு!
அடுத்த நிகழ்ச்சிக்கு நேரம் இருந்ததால், கடற்கரையிலேயே நேரம் கழிக்க வேண்டியிருந்தது! அனைவரும் பிரிந்து அங்கு இங்கு என உலவ ஆரம்பித்தோம், சிலர் அங்கு இருந்த கடைகளில் மேய ஆரம்பித்திருந்தனர். ஒரு கடையில் நல்ல டீ கிடைக்க, அருந்தி விட்டு நாங்களும் மணலில் சென்று உட்கார்ந்தோம்! BSNL மற்றும் AIRTELL தவிர்த்த மற்ற நெட்வொர்க் இல்லாததால், GIOவிற்கு அனைவரும் வேண்டா வெறுப்பாக மூடுவிழா செய்யவேண்டி வந்தது! மணலில் இருந்த நாற்காலியில் அமர ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாயாம்! நான் அமர்ந்திருந்தவரை யாரும் காசு கேட்கவில்லை! ஆறு மணிக்கே இருட்டி விட்டதால், இருட்டில் பிடித்த சில காட்சிகள்!
இந்த நண்டு, காமிராவின் மேக்ரோ செட்டப்பில் எடுத்தது! இதைப்பார்த்த குழுவில் கூட வந்த ஒரு இளம்பெண், " ஆஹா! எவ்வளவு ஜூஸியாக உள்ளது, சாப்பிட்டால் எப்படி இருக்கும் ? என்று சப்புக்கொட்டியதும் " அட தேவுடா! என்றாகிவிட்டது எனக்கு!
போன் இல்லை, நெட் வொர்க் இல்லை, இன்டெர்னெட் இல்லை! சுகமோ சுகம்! (இதுதான் பத்து ரூபாய் பென்ச்சு)
பீச்சை விட்டு வெளியே வந்து அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது! அதுவும் நன்மைக்கே என்பது போல் குழுவினர் ஒவ்வொருவரும் அறிமுகமாகி, அளவளாவ நேரம் கிடைத்தது! காத்திருந்து,,,,காத்திருந்து.... ஒரு வழியாக, வேன் வரவும், அடுத்து சென்றது, செல்லுலார் சிறை! இரவில் ஒலி, ஒளிக்காட்சி பிரபலம் என்பதால், அங்கு சென்றோம்! டிக்கட் வாங்கி உள்ளே சென்று நாற்காலியில்( பெரிய காலரி மாதிரி அமைத்து, நிறைய நாற்காலிகள் போட்டுள்ளார்கள்) அமர காட்சி ஆரம்பித்தது! தேசிய கீதத்துடன துவங்கிய நிகழ்ச்சி, நூற்றாண்டுகளாக அங்கு சாட்சியாக நிற்கும் ஒரு மரம் கதை சொல்வது போல் அமைக்கப்பட்டிருந்தது! ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து இருந்ததால், பலரால் அதை ரசிக்க முடியவில்லை! முன் தினம் இரவு வேன் பயணத்தாலும், தூக்கம் தூக்கிச் சென்றது! வீர சாவர்க்கர் சிறை இருந்த அறை தனி சிவப்பு விளக்கால் காட்டப்பட்டது! விடுதலைப்போராட்ட வீரர்கள் சிறையில் பட்ட துன்பங்கள் நெஞ்சைப்பிழியும் வண்ணம் சொல்லப்பட்டது! இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம், ஒன்றும் சும்மா வரவில்லை என்பது நிதர்சனமாக உணர முடிந்தது! இன்று நம் தமிழ் நாட்டில் தேசிய கீதத்தையும் தேசியக் கொடியையும் அவமதிக்கும் அளவிற்கு இந்த சுதந்திரம் நம்மை இட்டுச்சென்றுள்ளது வேதனையான விஷயம் தான்! இனி இருளில் எடுத்த சில காட்சிகள்!
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், மீண்டும் கற்பகம்( கடைசி வரை இதுதான்) சென்று இரவு உணவு முடித்து ( இட்லி, தோசை தான் எப்பவும் போல நமக்கு) அறைக்குத்திரும்பினோம், காலையில் நான்கு மணிக்குக் கிளம்பத்தயாராக இருக்க வேண்டும் என்ற திடுக் செய்தியுடன்! நாளை HAVELOCK தீவிற்குப் பயணம்! மூன்று மணிக்கு அலாரம் வைத்துக்கொண்டு குட்நைட்! ஆண்டவன் அருளால் எப்பொழுதும் துணை வரும் வலிகள் அதிகம் இல்லை! நாளை சந்திப்போம்!

No comments:
Post a Comment