Friday, April 16, 2010

சித்தப்பா...

சித்தப்பாவும் மறைந்து விட்டார்..

தமிழைத் தன்னுள் அடக்கி

தன குடும்பத்திற்காக வாழ்ந்து

ஒய்வு பெற்ற பின்னும்

பல கலைகளில் தேர்ந்து

திருவனந்தபுரத்திலும் சிறப்புற வாழ்ந்து

தொண்டையில் புற்றுடன்

தொல்லைகள் பல பட்டு - சித்தியின்

மறைவில் அழவும் முடியாமல் -

மூன்று மாதங்களுக்குள் மனை வழி

சென்று விட்ட மா மேதை.

குறுகிய நாட்களில்

தாய் தந்தை இருவரையும்

பிரிந்து நிற்கும்

லதா மற்றும் மணிக்கு

ஆண்டவன் மன தைரியத்தை

அளிக்க - அவனிடம்

வேண்டுகிறேன்...

1 comment:

RAMA RAMANAN said...

ஆம். இன்னொரு பேரிழப்பு. ஆனால் அவருக்கு எத்தகைய நிம்மதி! அவர் பட்ட கஷ்டத்துக்கு அவருடைய முடிவு மிகவும் அமைதியாகவும் விரும்பத்தக்கதாகவும் அமைந்து விட்டது. மணியிடம் நான் போய் வருகிறேன் என்பது போல் ஜாடை செய்தாராம். மணி அவருடைய காதில் நாராயண நாமத்தை ஓதியிருக்கிறான். பல வருடங்கள் நாத்திகராக இருந்த சித்தப்பா மிகச்சிறந்த ஆத்திகருக்குக் கூட கிடைக்காத இந்தப்பேற்றை பெற்றிருக்கிறார். மணியிடம் முன்பே சொல்லியிருக்கிறாராம். " நீ எனக்குச்செய்யும் சேவையை நான் உனக்குத்திருப்பிச் செய்யவேண்டும். நான் அடுத்த பிறவியில் உனக்கு மகனாகப்பிறக்க வேண்டும் " என்று. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியை மணி நன்றாகச் செய்து விட்டான். லதாவும் தன்னால் முடிந்த போதெல்லாம் திருவனந்தபுரம் சென்று அவர்களைப்பார்த்துக்கொண்டாள்.
அவனுடைய பெற்றோர் இனி தெய்வமாக இருந்து அவர்களைக் காப்பார்கள்.
ரமா

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...