வெங்கட்ராமா கோவிந்தா
நாராயண் மூர்த்தி.....
வேலூர் அக்ரஹாரா வாசிகளுக்கு இது நினைவிருகின்றதா? எனக்கும் மறந்து தான் விட்டது. நேற்று பெரிய சீனியிடம் பேசிக்கொண்டிருந்த போது, சனிக்கிழமை திருப்பதி வெங்கடா சலபதிக்கு மாவிளக்கு ஏற்றியது பற்றி சொன்னபோது, அவனால் நினவு ஊட்டப்பட்ட அந்த நினைவுகள்...
புரட்டாசி மாதம் பிறந்து விட்டால்.. ஒவ்வொரு சனிக்கிழமையும் கிழக்குத்தெரு பையன்கள் வரிசையாக, கும்பல் கும்பலாக ,
(அதில் பாதிப்பேர் குளித்தே இருக்க மாட்டார்கள்..)
வெங்கட்ராமா கோவிந்தா...
நாராயண மூர்த்தி...
என்று கூவிக்கொண்டு அரிசிக்காக படையெடுப்பு நிகழ்த்தும் போது, ஏதோ சிலருக்கு மட்டும் அரிசி போட்டுவிட்டு மிகுதிப்பேரை விரட்டி அடிக்கும் நிகழ்ச்சி தவறாமல் நடக்கும். இன்றும் அதெல்லாம் நடக்கின்றதா என்று தெரியவில்லை.
ஸ்ராவண சனிவாரம்... மாவிடித்து விளக்கேற்றும் வைபவம்;
ஐயா இது ஒன்றும் சாதாரண நிகழ்ச்சி அல்ல. வீட்டு அரிசியினால் இது நிகழாது. வெள்ளிகிழமையே ஒரு பயம் வந்து விடும். சனிக்கிழமை காலை குளித்து விட்டு நாமம் இட்டுக்கொண்டு பட்டு உடுத்திக் கொள்ள வேண்டும். அப்பா சந்தியாவண்ண பேழாவில் சுற்றி சுண்ணாம்பால் வளையமிட்டு குங்குமப் போட்டு வைத்து என் கையில் கொடுத்து விடுவார்கள். அப்போதே கண்களில் நீர் கட்டி விடும்,,, பிறகு...?
குறைந்தது ஐந்து வீடுகளுக்குச் சென்று 'வேங்கடேசாய மங்களம்" என்று கூறி அரிசி வாங்கி வர வேண்டும். வெட்கமும் கோபமும் இணைய சாமி பயம் வேறு. விதிப்படி அய்யர் வீடு, பேங்க் ராம ராவ் வீடு, அய்யங்கார் மாமி வீடு, சென்னம்மா அத்தை வீடு, வெள்ளமண்டி அய்யர் வீடு .... அப்பா போதுமடா சாமி என்று வீட்டுக்கு ஓடி வந்து அரிசியைத் தர வேண்டும். பிறகு அதை ஊற வைத்து மாவிடித்து , விளக்கேற்றி ....
பக்திக்கு மீறிய பயத்துடனும் சலிப்புடனும் வெட்கத்துடனும் செய்யப்பட இந்த வேலை..
என் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எங்களை சுற்றி இருந்த அக்கிரகாரமும் இல்லை, அந்த மனிதர்களும் இல்லை.
முதல் முறையாக அம்மாவும் அப்பாவும் இல்லாத வீட்டில் நான் மட்டும் பூமாவுடன் ஏதோ காமா சோமாவென்று மாவிளக்கு ஏற்றியபோது,
சலிப்பும் கோபமும் காணாமல் போய்விட்டிருந்தது..
.
Subscribe to:
Post Comments (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...
2 comments:
ஆமாம் .புரட்டாசி சனிக்கிழமை ...இப்போது யாரும் வேங்கடேசாய மங்களம் .......நாராயண மூர்த்தி ....யாருக்கும் சொல்ல நேரம் இல்லையோ .....அல்லது எதற்கு என்று விட்டு விட்டார்களோ தெரியவில்லை........ஸ்ராவண சனிவாரம்....வரலக்ஷ்மி பூஜை அடுத்த நாளும் களை கட்டும் அந்த விழாக் கோலம் இப்போது எங்கும் பார்க்க முடியவில்லை
ஏதோ நினைத்துக் கொண்டிருக்கையில் வெங்கட்ராம கோவிந்தா என்று எண்ணத்தில் மலரும் நினைவு ஒலித்தது. 1967, 68 களில் நாங்கள் புதுக்கோட்டையில் இருந்த போது சிறுவர்கள் கையில் தட்டுடன் வெங்கட்ராம கோவிந்தா என்று வருவார்கள். ஆனால் அது என்ன ஏது என்று எட்டவில்லை. உடனே தட்டினேன் கூகிள். உங்கள் எண்ணம் என் நினைவுக்கு விளக்கம் தந்தது.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்திவ்வுலகு"
ம்ம்.. எத்தனையோ இல்லாத இவ்வுலகில் இப்போது இதுவும் இல்லை!
நாம் பார்த்த சில/பலவற்றை நம் பிள்ளைகள் பார்க்க முடியாது. அது போல் அவர்கள் பார்க்க இருப்பதை நாம் பார்க்க இருக்க மாட்டோம். இயற்கை நியதி.
நன்றி
கார்த்திகேயன்
Post a Comment