மார்கழி மாதமும் FIRE எஞ்சினும் :
மார்கழி மாதம் என்றால் நான் முன்பு எழுதிய இரண்டு விஷயங்களோடு ஒரு முக்கியமான அழகான நிகழ்வும் உண்டு. அதுதான் கோலம். அக்ரஹாரத்தின் இரு வீதிகளிலும் மார்கழியின் காலைக்குளிரில் எத்தனை கோலங்கள். அதுவும் பஜனை வீட்டை கடக்குமுன் கோலம் போட்டிருக்க வேண்டும். நாளொரு கோலம்: பொழுதொரு வண்ணம்: அக்ரஹாரத்துபெண்களின் கற்பனா சக்தி அபாரமாய் இருக்கும். பெரிய கோலம் போட்டு, நடுவில் சாணியில் பூசணிப்பூவை வைத்தால் தான் கோலம் முற்றுப்பெறும். இந்தக்கோலத்தையும் பூசணிப்பூவையும் நினைத்தால் அந்த பால்காரன் ஞாபகம் வருகின்றது. நாங்கள் அப்பொழுது சாமிநாத டாக்டர் வீட்டில் குடி இருந்தோம்.
புகளுரிளிருந்து வரும் சொசைட்டி பால்காரன். சைக்கிளில் வெண்கல மணி கட்டியிருப்பான். தவிட்டுப்பாளையம் தாண்டி வேலூர் காவிரி பாலத்தில் வரும் பொழுதே அடித்துக்கொண்டிருக்கும் மணி வேகமாக வரும் ஒரு fire என்ஜினைத்தான் நினைவுபடுத்தும். எங்கள் வீடு அக்ரஹாரத்தின் கடைசி வீடானதால், பாலத்தில் அவன் எழுப்பும் ஒலி வீட்டில் அனல் பற்ற வைக்கும். பாத்திரத்தை வைத்துக்கொண்டு வாசலில் காத்திருக்க வேண்டும். அவன் வரும்பொழுது வாசலில் இல்லை என்றால் அன்றைக்கு பால் அவ்வளவுதான். முத்து பால் பண்ணைக்குத்தான் செல்ல வேண்டும். எனவே நான் தயாராக இருப்பேன். அவனுக்கு என்னவோ என் அக்க கீதா போடும் கோலத்தின் மேல் அவ்வளவு காட்டம். (மார்கழி கோலத்தைப்பற்றி என் அக்காவின் வலைப்பூவில்
(http://geethasrv.blogspot.com/) அறிந்து கொள்ளலாம். முக்கால்வாசி நாட்களில் மப்பிலேயே இருக்கும் குடிமகன். நேரே அந்த சைக்கிள் கீதா போட்டு முடித்த அந்தக்கோலத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் பூசணிப்பூவை நசுக்கி அதன் மேலேயே நின்றிருக்கும். சைக்கிளின் டயர் தடங்கள் கோலத்தை சின்னா பின்னம் ஆக்கியிருக்கும். எவ்வளவோ முறை அவனிடம் சொல்லியும் அவன் மாறவே இல்லை. ஒவ்வொருவருடமும் இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...
2 comments:
ஆமாம் அந்த பால்காரன் எப்போதுமே என் கோலத்தின் மீது தான் கண்ணாக வந்து கோலத்தை அழிப்பான்.அதுவும் மாட்டுப்பொங்கலன்று போடும் வட்டக்கலர் கோலம் ஒவ்வொரு தடவையும் அவன் சைக்கிள்சக்கரத்தில் சிதைவது இன்னும் எனக்கு கோபத்தைக் கிளருகிறது.அவன் fire என்ஜின் மட்டும் அல்ல என் கோதிர்க்கு வில்லனும் அவன்தான்.
mama,
i am loving every bit of this!
Post a Comment