Tuesday, December 22, 2009

கீதா சொல்லிய அந்த குண்டு நோட்டு பொள்ளாச்சி மாமாவால் கொடுக்கப்பட்டது. நாங்கள் (நானும் கீதாவும்) அப்பாவும் அம்மாவும் traning சென்ற பொழுது மாமா (பொள்ளாச்சி PAP காலனியில் சுமார் மூன்று மாதங்கள் இருக்க வாய்ப்பு கிடைத்தது. பொள்ளாச்சியில் நாங்கள் எழுதி படிப்பதற்காக மாமாவால் அவர்கள் அலுவலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுக்கப்பட்ட நோட்டு. சுமார் 500 பக்கங்களுக்கு மேல் இருக்கும். பெரிய அக்கா ரமா shorthand எழுதி பழகிய நோட்டு. பிறகு கீதாவாலும் என்னாலும் ஹிந்தி முதலான பாடங்கள் எழுத இடம் கொடுத்த நோட்டு. கோலங்களால் நிரம்பிய நோட்டுக்கு ஒவ்வொரு மார்கழி மாதமும் பயங்கர demand தான். கோலங்களுக்கு விடை கொடுத்த பிறகு அந்த நோட்டை இப்போது தேடிப்பிடிக்க வேண்டும்.

என் தாத்தாவுடன் நாங்கள் பழகியது பொள்ளாச்சியில் நாங்கள் இருந்த அந்த மூன்று மாதங்களில் தான். தன் டிரங்கு பெட்டியில் வைத்து பூட்டியிருக்கும் நெஸ்காப்பியை தினம் பகல் மூன்று அல்லது நான்கு மணிக்கு எடுத்து பாலில் கலந்து குடிக்குக்போது எனக்கும் அதில் பங்கு கொஞ்சம் கிடைக்கும். தினமும் பாட்டில் வைத்து மரத்தூளில் வெந்நீர் அடுப்பு தயார் செய்யும் லாகவமான வேலையை பார்ப்பது ஆச்சர்யமான விஷயம். தாத்தாவுக்கு தினமும் இட்லி வேண்டும். மாமா வீட்டில் தினசரி மாவாட்டும் வேலை தவறாமல் நடக்கும். அத்தை செய்யும் சாம்பார் மிக ருசியாக இருக்கும்.

தொடர்வேன்....

1 comment:

geethasrinivasan said...

பொள்ளாச்சி வாழ்க்கை என் நினைவுச் சாரல்களின் வேதனை,சந்தோஷம்,கொஞ்சம் ஆச்சரியம் கலந்த கலவை.ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக பள்ளி வாழ்க்கை தடை பட்ட சந்தோஷம் கலந்த வருத்தம் நிறைந்த நாட்கள்.ஆனால் தாத்தாவின் கண்டிப்பு கலந்த பாசம் மறக்க முடியாதவை.அந்த வகையில் நாம் கொஞ்சம் லக்கி தான்.மாலை நேரத்தில் கேண்டினில் இருந்து தாத்தா வாங்கித் தரும் முறுக்குப் பொட்டலம் சூடமிட்டாய்........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........நாக்கில் எச்சில் ஊறுகிறதுஒரு குடம் தண்ணீருக்கு இரண்டு பைசா கொடுத்து தாத்தா என்னை தண்ணீர் சுமக்க வைத்தார்.
மாமாவின் பழைய புஸ்தக collection .அங்கு தான் எனக்கு மணியன்,தேவன்,ராஜம் கிருஷ்ணா போன்ற எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள்.படிக்கும் ஆசை வெறி ஆக மாறியது அங்கே தான்

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...