Saturday, December 12, 2009

வேலூர் காவிரிக்கரை பட்டவர்த்தி பிள்ளையார் கோயிலைஇருபது வருடங்களுக்கு பிறகு பார்த்த போது நினைவுகளில் ஊடுருவிப் பாய்ந்த இளமைப்பருவம் - சிவராமன் (அக்காவின் மகன்) தனக்கு இளமைப்பருவ நினைவுகள் ஒன்றும் இவ்வளவு அழகாக இல்லையே என்று குறைப்பட்டுக்கொண்டதற்கு இவர்களுக்கு கிடைக்காத கிராம வாழ்க்கையே கூட காரணமாக இருக்கலாம்.
காவிரிக்கரையைப் பற்றி சொல்லும் போது பாலத்துக்கு அடியில் இருந்த அப்போதே சிதிலமான சிறிய பிள்ளையார் கோயிலைப்பற்றி சொல்லவேண்டும். திராவிட கழகத்தாரால் மூளியாக்கப்பட்ட பிள்ளையார்! சிறிய மேடை! இடிந்த படிக்கட்டுக்கள்! ஆடி மாதத்தில் இந்த மேடையில் அமர்ந்து புது நீரின் வாசத்தை அனுபவிக்க எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். வண்டி இழுத்து வாயில் நுரை தள்ளும் மாடுகள் போல், கருங்கல் படிக்கட்டுக்களில் மோதி மோதி நுரை தள்ளும் வெள்ளநீர்! சுழன்று அடிக்கும் காற்று நீர்த்திவலைகளை முகத்தில் அள்ளித்தெளிக்கும். எழுந்து செல்ல மனமே வராது. இருட்டி விட்டது, வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற தந்தையின் வற்புறுத்தலால் தான் கிளம்ப வேண்டி வரும். கருங்கல் படி ஏறி மேலே வரும்போது அங்கே சைக்கிளில் வைத்து விற்கப்படும் அன்னாசிப்பழத்துண்டுகள் ! அவசரத்தில் வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைத்து விட்டு மனிதத்தை தேடிக்கொண்டிருக்கின்றோம்!
தொடர்வேன்....

1 comment:

geethasrinivasan said...

வாய்க்காலுக்குசெல்லும் பாதை முள் அடர்ந்து கிடப்பது மனதில் குத்துகிறது.என்ன ஆயிற்று இந்த மனிதர்களுக்கு ?அழகான ஊரைச் சிதைத்து விட்டார்களே? இன்னும் அக்ரகாரத்தின் புழுதி மண் காலில் ஒட்டிக்கொண்டு இருப்பது போல் ஒரு பிசுபிசுப்பு.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...