வருக புத்தாண்டு 2010!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த ஆண்டில் என் தாயை காலனிடம் பறிகொடுத்தது என் வாழ்க்கையின் பெரும் சோக நிகழ்வு. வலைப்பூவில் என் எண்ணங்கள் வாசமாய் வலம்வர என் தாயின் மறைவு மிகப்பெரு காரணமாய் இருந்தது. தாயின் மரணத்தில் உண்டான ரணம் புரையோடாமல் இந்த நினைவுகள் தான் காப்பற்றிக்கொண்டிருக்கின்றது. வலைப்பூவில் ஏற்கவனவே அறிமுகம் ஆகி இருந்தாலும் என் அக்கா தீபாவளி அன்று பற்ற வைத்த பொறி தான் என்னுள் வெறியாகி, விதையாகி பல வித பூக்களை மலரச்செய்து கொண்டிருக்கின்றது. என் மனைவி அரசு வேலையில் முதலாண்டை வெற்றிகரமாக முடித்தது கடந்த ஆண்டில் தான். வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற விரும்பி அதுவும் நிறைவேறாததில்
எனக்கு சற்று வருத்தம் தான். தாசரதி அமரிக்காவில் இருந்து எட்டு மாதங்கள் கழித்து மே மாதம் இந்தியா திரும்பியது ஒரு நல்ல நிகழ்வு . ஆக 2009 எனக்கு கலக்கங்களையும், குழப்பங்களையும் சோகங்களையும் அள்ளித்தெளித்து சென்றுள்ளது.
Friday, January 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...
2 comments:
ஆம் ஸ்ரீதர்! சென்ற ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டு. என்னைப்பொறுத்தவரை சாதனைகள் என்று புதிதாக ஒன்றும் இல்லை. அம்மாவை இழந்த வேதனை மட்டும் தான்.
இப்போது இந்த வலைப்பூவின் மூலம் அம்மாவின் நினைவுகளில் மூழ்கி இனிமை பூசிக்கொண்ட பழைய நிகழ்வுகளை அசை போடும் சுகமும் அம்மா கொடுத்தது தான். அம்மா இருந்து சாதிக்க முடியாததை அம்மாவின் நினைவுகள் சாதித்திருக்கின்றன. 'நீன் யாகோ நின்ன ஹங் யாகோ? நின்ன நாமத பல ஒந்து இத்தரே சாகோ ' என்ற புரந்தர தாசரின் வரிகள் தான் பொருத்தமாகப்படுகின்றன.
கீதா தன் தோட்டத்தில் பார்த்த வண்ணத்துப்பூச்சியின் பிறப்பைப்பற்றியும் அதன் வாழ்வு எப்படி அவள் கண் முன்னாடியே முடிந்தது என்பதையும் மிகவும் உணர்வு பூர்வமாக பதிவு செய்திருக்கிறாள். படித்தாயா? மிகவும் பெருமையாக இருக்கிறது.
ரமா
கடந்த வருடம் கண்டிப்பாக மனம் வருத்திய வருடம் தான்.என் இனிய தோழி என் அன்பு அம்மா என்னை விட்டுப் பிரிந்த வருடம்.மனம் ரணமாக இன்னும் உள் காயத்தின் பச்சை ரத்த வசம் அவ்வப்போது என் மனதை பிசையும் .என்ன செய்வது ?நினைவுகளின் துணை கொண்டு இனி வரும் நாட்களின் சோகங்கள் மறக்கப்பட வேண்டும்,அதற்கு அம்மா உன் ஆசி தேவை.
Post a Comment