Wednesday, January 13, 2010
திருவனந்தபுரம், சித்தி மற்றும் சித்தப்பா..
பயந்த மாதிரியே 2010 கலக்கத்துடன் ஆரம்பித்துள்ளது. ஜனவரி முதல் தேதி அன்றே பூமாவுக்கு சிக்கன் குனியா தாக்கியது. நான்காம் தேதி காரிலேயே பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன். பள்ளி தலைமை ஆசிரியை கருணையுடன் வீட்டுக்கு செல்ல அனுமதித்து விட்டார். மீண்டும் ஆறாம் தேதி பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளாள். ஏழாம் தேதி மாலை அந்த சோக செய்தி வந்தது. என் சித்தி (அம்மாவின் தங்கை) திருவனந்தபுரத்தில் காலமாகிவிட்டதாக தகவல் வந்தது. ஒரு வருடமாகவே உடல் நலம் குன்றி இருந்த சித்தி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் என் சித்தப்பாவை தனியே விட்டு விட்டு மறைந்து விட்டார். சித்தியின் உடல் நலம் பற்றி மிகவும் கவலை கொண்டிருந்த என் தாய் மறைந்து நான்கு மாதங்களில் என் சித்தியும் தாய் வழி சென்று விட்டார். என் சித்தப்பா. இளவல் என்று என் தந்தையால் எப்பொழுதும் விளிக்கப்பட்டு வந்த தமிழ் அறிஞர். கருப்பு குளிர் கண்ணாடி அணிந்து வலம் வந்த தி மு க பேச்சாளர். நாத்திகவாதி. அவனியாபுரத்தில் விடுமுறைக்கு சென்றிருந்தபோது எனக்கு chess விளையாட்டை அறிமுகப்படுத்தியவர். பணி ஓய்வுக்குப்பிறகு மகனுடன் திருவனந்தபுரத்தில் வசிக்க ஆரம்பித்தவர் ஹோமியோபதி மற்றும் ஜோசியத்தில் கற்றுத் தேர்ந்தார். காலமும் வயதும் அவரை ஆத்திகராக மாற்றியது. இன்று தொண்டையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மூக்கு வழியே குழாயில் உணவு உட்கொண்டு வாழ்ந்து வரும் அவரைப்பார்த்து மனம் பட்ட வேதனையை என்னால் விவரிக்க முடியவில்லை. தங்கத்தைக்கரைக்கும் இராஜத்திராவகத்தை விட காலம் எல்லாவற்றையும் கரைத்து விடுகிறது. கண்ணாடி அணிந்து மதுரைத்தெருக்களில்வலம் வந்து எதையும் சாதித்தவர் இன்று தடியுடன் அடியெடுத்து வைப்பதை காண இயலவில்லை. மனைவி மறைந்த சோகத்திலும், வாய் சரியாக உச்சரிக்க முடியாத அந்த நிலையிலும், என் தாய் அவரது தமிழறிவை மதித்து வந்ததை என்னிடம் அவர் சொல்லி மகிழ்ந்தார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...
1 comment:
Mama,
Reading your posts lets me travel back in time. And yes, somehow, after reading your posts, just dont feel like calling you. Coz, i feel i am somewhere with you as you lead every sigle day. This blog, if not for anything else, will at least help the five cousins know what great grandparents we had. and yes, like chikki said, avva's loss is like a wound that refuses to heal. I miss her so very much every single day. Even today, when i made pongal, i remembered how she would have made it!
Post a Comment