எப்பொழுதும் போல் பென்சிலை வைத்துக்கிறுக்கிக்கொண்டிருந்த பொழுது மனைவியிடமிருந்து கைப்பேசியில் அழைப்பு வர, பள்ளி சென்றுவிட்டேன் என்ற செய்தி கிடைத்தது, போனஸாக, இன்னொரு செய்தியுடன்! 'நாம் அந்தமான் செல்லலாமா? இரண்டு இடங்கள் கேன்சல் ஆகிவிட்டனவாம்! யோசித்துச்சொல்லுங்கள்! என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது!
ஏற்கனவே இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் பேசப்பட்ட சுற்றுலா நிகழ்ச்சிதான்! மனைவியின் உடன் பணிசெய்யும் இன்னொரு ஆசிரியை திருமதி மங்கை அவர்களின் கணவர் திரு பழனியப்பன் அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி! எங்களால் திட்டமிடப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சியும் வில்லங்கத்திலேயே முடிவதால், நாங்கள் விரும்பவில்லை! செப்டம்பரில் நிகழ்ச்சி! நாங்கள் உறவினர் தவிர்த்த எந்தக்குழுவுடனும் இதுவரை சுற்றுலா வேறு சென்றதில்லை! எனவே விருப்பம் காட்டவில்லை!
மனைவியின் குரலில் இருந்த ஆர்வம் கண்டு மீண்டும் மனைவியை அழைத்தேன்! அதே ஆர்வத்துடன், இரண்டு பேர் வர முடியாமல் போனதால், நம்மைக்கேட்கிறார்கள்! சென்றுவரலாம் என்று நினைக்கிறேன்!' என்றதும் நானும் சரி என்று விட்டேன்!
உடனே ஆதார் கார்ட் ஸ்கேன் செய்து அனுப்ப, சென்னையிலிருந்து அந்தமான் போர்ட்ப்லேயர் போகவர டிக்கட் ஏற்பாடு செய்யப்பட்டது! ஆனால் எல்லோரும் போகும் விமானத்தில் இடம் கிடைக்காததால், சற்று முந்தைய விமானத்தில் இருவருக்கும் இடம் கிடைத்தது!
இது நடந்தது செப்டம்பர் 22 ம் தேதி! கிளம்ப வேண்டிய நாள் செப்டம்பர் 25ம் தேதி! அன்று அம்மாவின் திதி நெரூரில் செய்யவேண்டியிருந்தது! அன்று இரவுதான் பயணம் என்பதால் சரியென்று தயாராக ஆகிவிட்டோம்! ஆனால் யாருக்கும் சொல்லவில்லை! டிக்கட் எல்லாம் உறுதியான பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டோம்! இரு மகன்களுக்கு மட்டும் தெரியும்! அவர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் விறுவிறுப்பு கூடியது!
இருந்தாலும் இருவருக்கும் சற்று கலக்கமாகவே இருந்தது!
ஆடைகள், சுட்கேசுகள் என்று கார்டு ஸ்வைப் ஆகிக்கொண்டிருந்தது! மழை இருக்கும் என்று சொல்லப்பட்டதால், ஆறு நாட்களுக்கும் ஆறு செட் துணிகள் தேவையாயிருந்தது! 23ம் தேதி மீண்டும் ஆசிரியை வீட்டிற்கு சென்று மற்ற விபரங்கள் அறிந்துகொண்டு வந்த பின்னர் தான் மறுநாள்தான் உள்ளூரில் இருக்கும் மனைவியின் அம்மாவீட்டிற்கு செய்தி சொல்லப்பட்டது! திதிக்காக கரூர் வரும் தமக்கைகளிடம் நேரில் சொல்லிக்கொள்ளலாம் என்பதால் போன் செய்யவில்லை!
மனைவியின் அண்ணன் மகனின் மனைவியின் தங்கை அந்தமானில் இருப்பதால் அவர்கள் வீட்டுக்கும் சென்றுவர இது ஒரு வாய்ப்பாக இருந்தது! ஆனால் அவளுக்கும் புறப்படும் அன்றுதான் தகவல் சொன்னோம்!
சுற்றுலா திட்டம்:
அம்மாவின் திதி முடிந்தவுடன் தமக்கைகள் நெரூரிலிருந்தே விடை பெற்றுக்கொண்டுவிட, இல்லம் திரும்பி சற்று ஓய்வெடுத்து பேக்கிங்க் வேலை ஆரம்பித்தோம். முதலுதவி மருந்துகளூம், ரெகுலர் மருந்துகளும் முன்னிடம் பெற்றன. பதினைந்து கிலோவும் ஏழு கிலோவுமே அனுமதி என்பதால் பார்த்துப்பார்த்து செய்யவேண்டியிருந்தது.( பத்து நாட்களுக்கு முன் இளைய மகன் கோவையிலிருந்து மும்பை சென்றபோது சுமார் 7500 ரூபாய் மொய் வைத்த பயத்திலேயே சற்று ஜாக்கிரதையாக இருக்க நேர்ந்தது).
ஒன்பது மணிக்கு பழனியப்பன் சார் வீட்டு அருகிலே வேன் நிற்கும் என்பதால், கணேசன் ஆட்டோவில் எட்டரை மணிக்கே கிளம்பிவிட்டோம். நாங்கள் செல்லும் பொழுது வேன் இன்னும் வந்திருக்கவில்லை! எனவே மிஸ்வீட்டிற்கு சென்று எங்கள் டிக்கட்டைப்பெற்றுக்கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, வேன் வரவும், பயணம் ஆரம்பித்தது. பெட்டிகள் மேலே ஏற்றப்பட, சென்னை நோக்கிப்ப்யணம் தொடங்கியது. முதல் இருக்கையில் அமர்ந்திருக்க, ஏசியின் குளிரால் சரியாகத்தூங்கமுடியாமல் நடுங்கியபடியே (ஷால் எல்லாம் மேலே பெட்டியில் மாட்டிக்கொண்டுவிட்டது) தூங்கி, தூங்காமல், சென்னை காலை சென்றடைந்தாம்.
பல்லாவரத்தில் ஏதோ ஒரு ஹோட்டலில் ரூம்கள் போட்டு குளித்து உடை மாற்றிக்கொண்டு காலை 7.30 மணிக்கு கிளம்ப உத்தேசம். நான்கு பேருக்கு ஒரு அறையாக எடுத்துக்கொண்டு அனைவரும் தயாராகக் கிளம்பினோம். மாநிலத்தலை நகரில் அந்த ஹோட்டல் முன் இருந்த குப்பைக்கூளங்கள், அடடா, கால் வைக்க இடம் இல்லை! தூய்மை இந்தியா திட்டத்தில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை போலும்! இங்கும் அங்கும் கால் வைத்து பெரும்பாடு பட வேண்டியிருந்தது!
வழியில் ஒரு ஹோட்டலில் காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கெல்லாம் விமானநிலையம் வந்தடைந்தோம். எங்கள் விமானம் 10.55 க்கு என்பதால் நானும் என் மனைவியும் முதலில் உள்ளே சென்றுவிட்டோம்.
ஏற்கனவே அக்கா பையன் திருமணத்திற்காக கல்கத்தா வரை விமானத்தில் சென்று வந்ததால் அவ்வளவு ஆர்வம் இல்லை! செக்இன் வேலைகள் சுலபமாக முடிய, என்ட்ரி கேட் அருகே சென்று அமர்ந்தோம்.
இருக்கையில் அமரும் போதுதான் பின் இருக்கையில் திரு கதிரி கோபால்நாத் அவர்கள் அமர்ந்த்திருப்பதைப் பார்த்தோம். அவரிடம் சூப்பர் சிங்கர் செந்திலும் ராஜலக்ஷ்மியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விலக, அவர்கள் இருவருக்கும் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தோம்!
பின்னர் திரு கோபால்நாத் அவர்களிடம் சென்று வணங்கி அமர்ந்து பேசினோம். காலை விமானம் கேன்சல் ஆனதால், மனிதர் தனியாக அமர்ந்து செல்போனுடன் ஐக்கியமாகி இருந்தார். நான் அவரை வரைந்திருந்த கேரிகேச்சர் படத்தை அவருக்கு காட்டினேன். மிகவும் மகிழ்ந்தார். அதை அவருக்கு அனுப்பச்சொல்லி வாட்சாப் நம்பர் கொடுத்தார். நானும் மனைவியும் அவருடன் அமர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டோம். பின் அவரை விட்டு விலகி தனியே அமர்ந்து கொண்டோம். அந்த சில தருணங்கள்!
அதற்குள், அந்தமானில் இருக்கும் செளம்யா
அழைத்து தான் விமான நிலயத்தில் காத்திருப்பதாகக் கூறினாள்! பின் 200 ரூபாய்க்கு இரண்டு காபி ( நாய் வேஷம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும்) சாப்பிட்டு முடிக்க, கதவு திறந்து விமானம் ஏற அழைப்பு வந்தது! உடனே முண்டியடித்துக்கொண்டு மக்கள் வரிசையில் நெருக்க, ( எல்லோருக்கும் சீட் நம்பர் கொடுக்கப்பட்டும், சினிமா டிக்கட் கவுண்டர் போல் ஏன் அவசரப்படுகிறார்கள் என்பது புதிர் தான்!) அமைதியாக வரிசையில் நின்று, குகைப்பாதையில் சென்று, விமானப்பணிப்பெண்ணின் வணக்கத்தை ஏற்று, உள் நுழைய, ஒரே புகை மண்டலம்! (தேவலோக செட்டிங் மாதிரி)! இருக்கை கண்டு பிடித்து அமர, அம்மணிக்கு ஜன்னல் சீட்டும், ஐயனுக்கு நடுசீட்டும் ( பஸ்ஸில் சென்றாலும் இதே கதை தான்! நமது உருவத்திற்கு, மூன்றாவது நபர் சற்று இளைத்திருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான்! இல்லையென்றால் சட்னி தான்) கிடைத்தது! ஜன்னலுக்கு நேரே விமானத்தின் இறக்கை இருந்ததால், வேடிக்கை பார்ப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது!
வழக்கம் போல் சைகை அறிவுறுத்தலுகுப்பிறகு, (எப்பொழுதும் போல் ஒன்றும் புரியவில்லை! புரிந்தது, தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பது போல், ஆக்ஸிஜன் மாக்ஸை முதலில் தான் ஒழுங்காக அணிந்து கொண்டு பிறகு பிறர்க்கு உதவச்சொன்னது)! விமானம் வேகம் எடுத்து...இன்னும்...இன்னும்.. விடு ஜூட்.....சட்டென்று மேலே கிளம்பியே விட்டது! (முன் ஜாக்கிரதையாக கொண்டு சென்ற பஞ்சை ஏற்கனவே காதில் வைத்துக்கொண்டாயிற்று)! சில காட்சிகள்:
விமானம் கிளம்பி சிறிது நேரத்திலேயே தள்ளு வண்டியில் சிற்றுண்டி கொடுக்க ஆரம்பித்தார்கள்! பசி இல்லையென்றாலும் சும்மா கொடுப்பதை ஏன் வேண்டம் என்று சொல்லவேண்டும் என்பதால் வாங்கிக்கொண்டோம்! ஒரு கேக், ஒரு பன், ஒரு சிறிய பட்டர் பாக்கட், புலாவ் மாதிரி ஏதோ ஒன்று, தொட்டுக்கொள்ள கிரேவியுடன்! ஒரு கத்தி, ஒரு ஸ்பூன் மற்றும் டிஸ்யு பேப்பர்! சாப்பிட்டு முடிக்க, காபி வந்தது! டிகாக்ஷன் தனியாக டம்ளரில், பால் பவுடரும் சர்க்கரையும் தனி! காபி குடித்து வாயைக்கெடுத்துக்கொண்ட நேரத்தில் விமானம் பாதி தூரத்திற்கு மேல் கடந்திருந்தது! சரி கிண்டிலில் படிப்போம் என்று அதை ஆன் செய்ய இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க விடாமல் கண்ணைச்சுழற்றியது தூக்கம்! சற்றே கண் அயர்வதற்குள் டொய்ங்க் என மணி அடித்து விமானம் தரை இறங்கப்போவதாக அறிவித்தார்கள்! உடனே காமிராவைத்தயாராக வைத்துக்கொண்டு தரை இறங்கும் சமயத்தில் எடுத்த சில காட்சிகள்!
விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸிற்காக நிற்கும் போது கிளிக்கியது!
விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்தால் 5000 ருபாய் அபராதம் என்ற பலகையைப்பார்த்ததும் சத்தமில்லாமல் மொபைல் போனை பைக்குள் வைத்து விட்டு பேருந்தை நோக்கி நடையைக் கட்டினோம்!
மிகச்சிறிய விமான நிலையம்! செக் இன் பெட்டிகள் வருவதற்கும் செளம்யாவிடமிருந்து போன் வருவதற்கும் சரியாக இருந்தது! வெளியே கடுமையான வெய்யில்! இதில் குழந்தை அப்ரமேயனையும் தூக்கிக்கொண்டு வந்திருந்தாள்! நாங்கள் சாப்பிட சமைத்தும் எடுத்து வந்திருந்தாள்! குழந்தைக்கு உடல்நிலை சரியாக இல்லாததால் ஒரு அரைமணி நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டாள். அதற்குள் எங்களை அழைத்துச்செல்ல வந்த நபரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டோம். அடுத்த விமானத்தில் வரும் குழுவின் மற்ற நபர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம்! செளம்யாவுடனான சந்திப்பில் சில காட்சிகள்!
மற்ற நண்பர்கள் வந்ததும் தொடர்வோம்.............

6 comments:
பேஷ்! பேஷ்!
Super :)
உடன் பயனித்த அனுபவம்..
மிகவும் அருமையான பயணக்கட்டுரை..
👏👏👏👏👏👏👍
good write up
பயண குறிப்புகள் போடோகள் அனைத்தும் அருமையிலும் அருமை. நேரில் உங்களுடன் இருப்பது போல் உணர்தேன், நன்றி . தொடடர்வதை எதிர் பார்கிறேன்.
Post a Comment