ஈரோடு செல்லும் வரை வண்டியில் நல்ல கூட்டம். ஒவ்வொரு ஊரிலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி நிதானமாக சென்று கொண்டிருந்தது. மைசூர் சென்ற மாதிரிதான் என்று மனம் கலங்கினாலும் ஓட்டுனர் சரியான நேரத்திற்கு ஈரோடு சென்று விட்டார். அங்கு கிடைத்த சில நிமிடங்களில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டு மீண்டும் பயணம் தொடர்ந்தது. இப்பொழுது பேருந்தில் அவ்வளவு கூட்டம் இல்லை. நிதானமான ஓட்டுனர். பண்ணாரி தாண்டி மலைப்பாதையில் வண்டி ஏறத்தொடங்க, அருமையான காட்சிகள். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூழல் சுகமாக இருந்தது. வழியெங்கும் குரங்குகள் பயணிகள் எறியும் வாழைப்பழங்களுக்காக காத்து நின்றிருந்தன. ஒரு கொண்டைஊசி வளைவில் ஒரு குரங்கு இன்னொரு குரங்கை மடிமீது கிடத்திக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தது. காமிரா பையின் உள்ளே வைத்திருந்ததால் அந்தக்காட்சியை click செய்ய முடியவில்லை.
இதற்கு நடுவே வண்டியின் நடத்துனர் அவ்வப்பொழுது குண்டு போட்டுக்கொண்டிருந்தார். நாளை தீர்ப்பை முன்னிட்டு பந்த் நடப்பதால் பேருந்துகள் ஓடாது என்றும் சொன்னார். மீண்டும் மனம் கலைய (அலைய) ஆரம்பித்தது. பூமா ரொம்ப strong . என்ன ஆனாலும் சென்று பார்த்து விடலாம் என்று முடிவெடுத்ததும் சற்று நிம்மதியாக உணர முடிந்தது.
சரியாக மாலை ஆறு மணிக்கு மைசூர் சென்று அடைந்தோம். தரையில் காலடி பட்டதும் lodge புரோக்கர்களால் சூழப்பட்டோம். முன்பு தாசரதி இன்போசிஸ்-ல் சேரும்போது தங்கிய ஹோட்டலுக்கே சென்றோம். கூடவே அந்த ப்ரோக்கரும் வந்தார். தங்க அறை கிடைத்தது. வாடகை மிக அதிகம். (தசராவுக்கு முன்பே இந்த நிலை என்றால்...?) அந்த ப்ரோக்கரே K R NAGARA செல்வதற்கு கார் ஏற்பாடு செய்து தருவதாக கூற, அயோத்தி ராமர் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு , மறுநாள் காலை ஐந்து மணிக்கே கிளம்ப முடிவானது. மருத்துவ மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச, காலை 6.30 மணிக்கு வரச்சொன்னார்கள். (k r nagara மைசூரிலிருந்து 40 கல் தொலைவில் ஹாசன் செல்லும் வழியில் உள்ளது).
மறுநாள் காலை சரியாக 5.30 மணிக்கு கார் வந்துவிட்டது. ஊரே அமைதியாக இருந்த அந்த நேரத்தில் எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் நல்ல மூடு பனி. பயணத்தை அனுபவிக்க முடியாதபடி ஒருவகையான TENSION.
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அயோத்தி ராமருக்கும் டாக்டர் மெஹபூப் கானுக்கும் சம்பந்தம் இருந்தால் என்ன செய்வது என்றும் ஒரு பயம்).
அந்த ப்ரோக்கர் வண்டி தேடும் போதே வண்டியின் ஓட்டுனர் ஒரு இந்துவாக இருக்கவேண்டும் என்று தேட, இது ஏதப்பா, பெரிய பிரச்சினையாக இருக்குமோ என்றும் ஒரு புறம் அச்சமாக இருந்தது. வண்டி ஓட்டுனரும் இந்துவாக இருந்தார். வண்டியின் review mirror ல் காவிக்கொடி சுற்றப்பட்டு வண்டி தைரியமாக சென்று கொண்டிருந்தது. போகவர வாடகை பேசி இருந்ததால் திரும்பி வருவது பற்றி கவலை இல்லை. சரியாக 6.30 மணிக்கு மருத்துவ மனைக்கு சென்றால் அங்கே...
ஏற்கனவே முப்பது பேருக்கும் மேல் காத்துக்கொண்டு இருந்தார்கள். சாலை மீதே இருந்த ஒரு சிறிய கட்டிடம். என்னுடைய token 26 . டாக்டர் ஏழு மணிக்குத்தான் வருவார் என்பதால், அருகில் இருந்த shed ல் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். அங்கு இருந்த சிறிய டீ கடையில் சூடான டீ கிடைத்தது. காலை ஐந்து மணியிலிருந்தே நோயாளிகள் வந்து அமர்ந்து இருந்தார்கள்.
(தொடர்வேன்.....)
Subscribe to:
Post Comments (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...
No comments:
Post a Comment