Saturday, October 10, 2026

 

10 அக்டோபர் 2026:


கோவையில் டாடாபேடில் ஹரியின் வீட்டில் தங்கியிருக்கும் போது, ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதியினைத் தமிழ்க் கவிதை வடிவில் எழுதலாம் என்று ஜூன் மாதம் நினைத்து எழுதத் தொடங்கினேன். கூகிள் க்ரோமின் AI உதவியுடன் ஸ்ரீ ஹரிவாயு ஸ்துதியின் சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு விரிவாகப் பொருள் அறிந்து கொண்டு பின் அதனை எளிய வடிவில் கவிதையாக வடித்தேன். இந்த எழுத்துப் பணி அக்டோபரில் நிறைவடைந்தது. இதை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.. நடுவில் மனதில் சிறிது சுணக்கம் ஏற்பட்டாலும் இறைவன் அருளால் என்னால் இதை முடிக்க முடிந்தது. இறைவனுக்கே இதை சமர்ப்பிக்கின்றேன்.


ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதி:




ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதி:


अथ नखस्तुतिः


पान्त्वस्मान् पुरुहूतवैरिबलवन्मातङ्गमाद्यद्घटा-

-कुम्भोच्चाद्रिविपाटनाधिकपटु प्रत्येक वज्रायिताः ।

श्रीमत्कण्ठीरवास्यप्रततसुनखरा दारितारातिदूर-

-प्रध्वस्तध्वान्तशान्तप्रविततमनसा भाविता भूरिभागैः ॥ 1 ॥


அத² நக²ஸ்துதி:


பாந்த்வஸ்மான் புருஹூதவைரிப³லவன்மாதங்க³மாத்³யத்³க⁴டா-

-கும்போ⁴ச்சாத்³ரிவிபாடனாதி⁴கபடு ப்ரத்யேக வஜ்ராயிதா: ।

ஶ்ரீமத்கண்டீ²ரவாஸ்யப்ரததஸுனக²ரா தா³ரிதாராதிதூ³ர-

-ப்ரத்⁴வஸ்தத்⁴வாந்தஶாந்தப்ரவிததமனஸா பா⁴விதா பூ⁴ரிபா⁴கை³: ॥ 1 ॥



அரண்ய அரசனின் முகங்கொண்ட தேவனே!

திருமகள் இடம்கொண்ட திவ்ய ரூபனே!

மலைநிகர் மதர்த்த யானையாம் இரண்யனை,

நிலைஉயர் இந்திரன் நெடுநாள் பகைவனை

மதங்கொண்ட யானையின் மத்தகம் பிளந்திடும்

சினங்கொண்ட சிங்கமாய் சீறியே உந்தன்,

திரண்ட நன்னகங்கள் பலவஜ்ரா யுதமாய்

வெருண்ட கொடியவன் நெஞ்சினைப் பிளக்க,

இப்புவி இருளாய் இருந்த அஞ்ஞானம்,

சட்டென மறைந்து சடுதியில் ஓட

ஆனந்தம் பெற்று அமைதியில் ஆழ்ந்த

வானவர் குழுமியே விரும்பித் தொழுதிடும்,

அன்பினைச் சொரியும் அழகிய சிங்கரின்,

நற்றொழில் நகங்கள் நமையென்றும் காக்கட்டும்! (1)







लक्ष्मीकान्त समन्ततोऽपि कलयन् नैवेशितुस्ते समं

पश्याम्युत्तमवस्तु दूरतरतोपास्तं रसो योऽष्टमः ।

यद्रोषोत्कर दक्ष नेत्र कुटिल प्रान्तोत्थिताग्नि स्फुरत्

खद्योतोपम विस्फुलिङ्गभसिता ब्रह्मेशशक्रोत्कराः ॥ 2 ॥




லக்ஷ்மீகாந்த ஸமந்ததோபி கலயன் நைவேஶிதுஸ்தே ஸமம்

பஶ்யாம்யுத்தமவஸ்து தூ³ரதரதோபாஸ்தம் ரஸோ யோஷ்டம: ।

யத்³ரோஷோத்கர த³க்ஷ நேத்ர குடில ப்ராந்தோத்தி²தாக்³னி ஸ்பு²ரத்

க²த்³யோதோபம விஸ்பு²லிங்க³ப⁴ஸிதா ப்³ரஹ்மேஶஶக்ரோத்கரா: ॥ 2 ॥






திரண்ட அண்டத்துத் திசைபல தேடினும்

திருமகள் நாதனே! உனக்கீடாய் யாருளர்? 

உன்னிலும் உயர்ந்தவர் உண்டென்று உரைப்பவர்

எண்சுவை உண்டென்று தேடுவார் தெளிந்துளம் 

விட்டதைத் தூர விலக்குவர் போலாவர்!

நெறித்தவுன் புருவமிடை திகழ்வலது விழியோரம்

தெறிக்கும் சினத்து நெருப்புக் கங்குகள்

பரந்து விரிந்து பற்றி எரிக்க

விண்ணவர் தலைவராய் வியந்தே தொழுதிடும்

பிரமனும் ஈசனும் பெருந்தேவ இந்திரனும்

தம்மொளி யிழப்பர் மின்மினிப் பூச்சியாய்! (2)





अथ वायुस्तुतिः


श्रीमद्विष्ण्वङ्घ्रिनिष्ठातिगुणगुरुतमश्रीमदानन्दतीर्थ-

-त्रैलोक्याचार्यपादोज्ज्वलजलजलसत्पांसवोऽस्मान् पुनन्तु ।

वाचां यत्र प्रणेत्री त्रिभुवनमहिता शारदा शारदेन्दु-

-ज्योत्स्नाभद्रस्मितश्रीधवलितककुभा प्रेमभारं बभार ॥ 1 ॥



அத² வாயுஸ்துதி:

ஶ்ரீமத்³விஷ்ண்வங்க்⁴ரினிஷ்டா²திகு³ணகு³ருதமஶ்ரீமதா³னந்த³தீர்த-²

-த்ரைலோக்யாசார்யபாதோ³ஜ்ஜ்வலஜலஜலஸத்பாம்ஸவோஸ்மான் புனந்து |

வாசாம் யத்ர ப்ரணேத்ரீ த்ரிபு⁴வனமஹிதா ஶாரதா³ ஶாரதே³ந்து³-

-ஜ்யோத்ஸ்னாப⁴த்³ரஸ்மிதஶ்ரீத⁴வளிதககுபா⁴ ப்ரேமபா⁴ரம் ப³பா⁴ர ॥ 1 ॥


ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதி:


மாலவன் அடிகளில் மங்கா அன்புடன்

சீர்மிகு சாத்திர நெறிகளில் துலங்கி

ஓருயர் குருவாய் உலகினில் விளங்க

திருமிகு ஆனந்த தீர்த்தர் என்றே

அருள்மிகு குருவாய் மூவுலகும் காப்பவர்

வாக்கினில் மலர்ந்த மங்கா உரைகளில்

நாமகள் என்றே நானிலம் போற்றும்

மூவுலகிற் சிறந்த சரஸ்வதி தேவிதன்

கூதிர் நிலவின் குளிரொளி நகைப்பில்

யாது திசையும் வெண்ணொளி நிரப்ப,

மத்வ பாதத்துத் துகள்கள் ஒளிமிகு

தெள்ளிய படிகமாய் மின்னியே எங்கும்

உள்ளம் நிறைந்து உறுதியாய்க் காக்கட்டும்! (1)




उत्कण्ठाकुण्ठकोलाहलजवविजिताजस्रसेवानुवृद्ध-

-प्राज्ञात्मज्ञानधूतान्धतमससुमनोमौलिरत्नावलीनाम् ।

भक्त्युद्रेकावगाढप्रघटनसधटात्कारसङ्घृष्यमाण-

प्रान्तप्राग्र्याङ्घ्रिपीठोत्थितकनकरजःपिञ्जरारञ्जिताशाः ॥ 2 ॥



உத்கண்டா²குண்ட²கோலாஹலஜவவிஜிதாஜஸ்ரஸேவானுவ்ருத்³த-⁴

-ப்ராஜ்ஞாத்மஜ்ஞானதூ⁴தாந்த⁴தமஸஸுமனோமௌலிரத்னாவளீனாம் ।

ப⁴க்த்யுத்³ரேகாவகா³ட⁴ப்ரக⁴டனஸத⁴டாத்காரஸங்க்⁴ருஷ்யமாண-

ப்ராந்தப்ராக்³ர்யாங்க்⁴ரிபீடோ²த்தி²தகனகரஜ:பிஞ்ஜராரஞ்ஜிதாஶா: ॥ 2 ॥



ஆவலுடன் உற்சாகம் அரும்பிடவே எல்லையிலா

வேகத்துடன் தாம்செய்த சேவைகளால் உயர்ஞான

பரம்பொருளை அறிந்திடவே அஞ்ஞான இருளகல

பெருகிடும் பக்தியினால் பெருந்தேவர் குழுவினராய்

மத்வபதம் பணிந்திடவே மணிமகுட ரத்தினங்கள்

தத்துவ உரைதந்த மாகுரு தானமர்ந்த

ஆசனத்து முனையழுந்தி தத்கார ஒலியெழுப்ப

மாசற்ற மத்வர்தம் பாதத்துப் பொன்துகள்கள்

வீசிடும் ஒளியுடன் வெளிதனை நிரப்பிடுமே!

காக்கட்டும் அவைநம்மை அனுதினமும் கருத்துடனே! (2)


जन्माधिव्याध्युपाधिप्रतिहतिविरहप्रापकाणां गुणानां

अग्र्याणामर्पकाणां चिरमुदितचिदानन्दसन्दोहदानाम् ।

एतेषामेष दोषप्रमुषितमनसां द्वेषिणां दूषकाणां

दैत्यानामार्तिमन्धे तमसि विदधतां संस्तवे नास्मि शक्तः ॥ 3 ॥



ஜன்மாதி⁴வ்யாத்⁴யுபாதி⁴ப்ரதிஹதிவிரஹப்ராபகாணாம் கு³ணானாம்

அக்³ர்யாணாமர்பகாணாம் சிரமுதி³தசிதா³னந்த³ஸந்தோ³ஹதா³னாம் ।

ஏதேஷாமேஷ தோ³ஷப்ரமுஷிதமனஸாம் த்³வேஷிணாம் தூ³ஷகாணாம்

தை³த்யானாமார்திமந்தே⁴ தமஸி வித³த⁴தாம் ஸம்ஸ்தவே நாஸ்மி ஶக்த: ॥ 3 ॥



பிறப்பும், வாழ்வின் பிணையும், பிணியுடன்,

உறுத்தும் கவலையும் முற்றாய் மரிக்க,

பெருவீடு பேறும் பெற்றி டலாகி,

தேடுமெய் ஞானத் தூயநல் இன்பமாய்,

புனல்வெள்ளம் போலே ஈந்திடும் வாயுவே!

குறைநிறை எண்ணம் குலவும் மனத்துடன்,

இறைநிலை எதிர்த்து அறவழி தவிர்த்து,

மறைகளைப் பழிக்கும் மாண்பிலா அரக்கர்,

இருள்நிறை நரகினில் உழலச் செய்தே,

தருக்கழித் தழிக்கும் தகைவனே! உந்தன்

அடிமுடி மாண்பை அறிவதும் ஆமோ? (3)



अस्याविष्कर्तुकामं कलिमलकलुषेऽस्मिन् जने ज्ञानमार्गं

वन्द्यं चन्द्रेन्द्ररुद्रद्युमणिफणिवयोनायकाद्यैरिहाद्य ।

मध्वाख्यं मन्त्रसिद्धं किमुत कृतवतो मारुतस्यावतारं

पातारं पारमेष्ट्यं पदमपविपदः प्राप्तुरापन्नपुंसाम् ॥ 4 ॥


அஸ்யாவிஷ்கர்துகாமம் கலிமலகலுஷேஸ்மின் ஜனே ஜ்ஞானமார்க³ம்

வந்த்³யம் சந்த்³ரேந்த்³ரருத்³ரத்³யுமணிப²ணிவயோனாயகாத்³யைரிஹாத்³ய ।

மத்⁴வாக்²யம் மந்த்ரஸித்³த⁴ம் கிமுத க்ருதவதோ மாருதஸ்யாவதாரம்

பாதாரம் பாரமேஷ்ட்யம் பத³மபவிபத:³ ப்ராப்துராபன்னபும்ஸாம் ॥ 4 ॥



கலிதரும் மாசினால் கவிந்திடும் பாவம்

நலிந்தே ஓட நானில மனிதர்க்கு

அறவழிப் பாதையை அழகாய்க் காட்டி

திறனுடன் காத்திடச் சிந்தையில் விரும்பி,

இந்திரன் முதலாய் ஈசனும் சேஷனும்

சந்திரன் முதலாய் பரிதியும் கருடனும்

பாரினில் பணிந்திடும் பெருமையும், அந்த

நான்முகன் பதவியும் தான்பெறும் சீலனாம்,

முக்திக்கு வித்தான முக்யப் பிராணனை

மறைநூல் மந்திரம் மருவிய மத்வராய்

பாதகம் நீங்கிடப் படைத்திட்ட கடற்கிடை

மாதவன் பெருமையை மொழிவதும் ஆமோ? (4)


उद्यद्विद्युत्प्रचण्डां निजरुचिनिकरव्याप्तलोकावकाशो

बिभ्रद्भीमो भुजे योऽभ्युदितदिनकराभाङ्गदाढ्य प्रकाण्डे ।

वीर्योद्धार्यां गदाग्र्यामयमिह सुमतिं वायुदेवो विदध्यात्

अध्यात्मज्ञाननेता यतिवरमहितो भूमिभूषामणिर्मे ॥ 5 ॥


உத்³யத்³வித்³யுத்ப்ரசண்டா³ம் நிஜருசினிகரவ்யாப்தலோகாவகாஶோ

பி³ப்⁴ரத்³பீ⁴மோ பு⁴ஜே யோப்⁴யுதி³ததி³னகராபா⁴ங்க³தா³ட்⁴ய ப்ரகாண்டே³ ।

வீர்யோத்³தா⁴ர்யாம் க³தா³க்³ர்யாமயமிஹ ஸுமதிம் வாயுதே³வோ வித³த்⁴யாத்

அத்⁴யாத்மஜ்ஞானநேதா யதிவரமஹிதோ பூ⁴மிபூ⁴ஷாமணிர்மே ॥ 5 ॥


உடல்தரு அடர்மிகு உன்னத ஒளியால்

படர்ந்திடும் அண்டப் பெருவெளி நிறைத்த

மாருதி வடிவாய் மலர்ந்த நல்பீமன்

காலைக் கதிரவன் கவின்மிகு கிரணம்

போலவே மிளிறும் தோள்வளை துலங்கும்

மிகவிரி மார்பின் மிகவலி வைரம்

அணையவே விளங்கும் ஆர்த்த தோள்களில்

விண்ணினைப் பிளக்கும் வீரிய மின்னலாய்

தன்னுறை ஆற்றல் மட்டினால் இயங்கும்

கதையெனும் ஆயுதம் கருத்துடன் ஏந்தி

துறவற முனிவர்கள் தெளிந்தே வணங்கிடும்

பூமகள் அணிந்த புனித ரத்தினமாய்

பதியதில் முக்கியப் பிராணராய் எனக்கு

கதிபெற மெய்ஞான விதிதந்து காக்க! (5)


संसारोत्तापनित्योपशमदसदयस्नेहहासाम्बुपूर-

-प्रोद्यद्विद्यानवद्यद्युतिमणिकिरणश्रेणिसम्पूरिताशः ।

श्रीवत्साङ्काधिवासोचिततरसरलश्रीमदानन्दतीर्थ-

-क्षीराम्भोधिर्विभिन्द्याद्भवदनभिमतं भूरि मे भूतिहेतुः ॥ 6 ॥


ஸம்ஸாரோத்தாபனித்யோபஶமத³ஸத³யஸ்னேஹஹாஸாம்பு³பூர-

-ப்ரோத்³யத்³வித்³யானவத்³யத்³யுதிமணிகிரணஶ்ரேணிஸம்பூரிதாஶ: ।

ஶ்ரீவத்ஸாங்காதி⁴வாஸோசிததரஸரளஶ்ரீமதா³னந்த³தீர்த-²

-க்ஷீராம்போ⁴தி⁴ர்விபி⁴ந்த்³யாத்³ப⁴வத³னபி⁴மதம் பூ⁴ரி மே பூ⁴திஹேது: ॥ 6 ॥


ஸ்ரீவத்சம் தாங்கிய ஸ்ரீஹரி என்றும்

வாசம் செய்யும் தகைமை பெற்ற 

பாற்கடல் அணைய பல்குணம் கொண்ட

ஆனந்த தீர்த்தர் ஆகிய மத்வர்

பிறப்பும் இறப்பும் பிணைந்த துன்பம்

குறைத்து என்றும் அருளும் கருணை

பரிவுடன் பாச மந்தகாச சிரிப்பில்

குளிர்நீர் வெள்ளம் விளைந்த ஞானம்

பழுதில் ஒளியைப் பரப்பும் மணிகளின்

செழுமிகு கிரண வரிசையாய் ஒளிர்ந்து

பல்திசை நிறைக்கும் பன்முக ஆற்றலால்

என்மிசை கிடக்கும் எண்ணிலாத் தீமைகள்

தகர்ந்திடச் செய்வார் நான்முக்தி பெறவே!  (6)



मूर्धन्येषोऽञ्जलिर्मे दृढतरमिह ते बध्यते बन्धपाश-

-च्छेत्रे दात्रे सुखानां भजति भुवि भविष्यद्विधात्रे द्युभर्त्रे ।

अत्यन्तं सन्ततं त्वं प्रदिश पदयुगे हन्त सन्तापभाजा-

-मस्माकं भक्तिमेकां भगवत उत ते माधवस्याथ वायोः ॥ 7 ॥


மூர்த⁴ன்யேஷோஞ்ஜலிர்மே த்³ருட⁴தரமிஹ தே ப³த்⁴யதே ப³ந்த⁴பாஶ-

-ச்சே²த்ரே தா³த்ரே ஸுகா²னாம் பஜ⁴தி பு⁴வி ப⁴விஷ்யத்³விதா⁴த்ரே த்³யுப⁴ர்த்ரே ।

அத்யந்தம் ஸந்ததம் த்வம் ப்ரதி³ஶ பத³யுகே³ ஹந்த ஸந்தாபபா⁴ஜா-

-மஸ்மாகம் ப⁴க்திமேகாம் ப⁴க³வத உத தே மாத⁴வஸ்யாத² வாயோ: ॥ 7 ॥


உலகதால் வாய்க்கும் உறவினை நசித்து

பிறப்பை அழித்து பிழையிலா இன்பம்

சிறப்பாய் வழங்கி வருயுக மதற்கு

படைப்போன் பதவியும் கிடைக்க வல்லான்

உலகோர் வணங்கும் உன்னதப் பெருமான்

தேவர்கள் கூட்டம் தொழுதிடும் தலைவன்

காற்றுத் தேவா! உன்பதம் தன்னில்

விழுமிய கரம்சிரம் திடமாய் நிறுத்தி

தொழுதல் செய்வேன் தொடர்ந்து நாளும்!

இம்மையில் தகிக்கும் இன்னல் என்னும்

வெம்மையில் வெந்து வீணில் தவிக்கும்

சிறியோர் எமக்கு வரமிது தாரீர்!

மாதவக் கடவுள் மலரடி மீதும்

மாதவன் உமதிரு திருவடி மீதும்

மாறாப் பக்தி மங்கா திருக்க

வேண்டி நின்றேன், வாரி வழங்குமின்! (7)


साभ्रोष्णाभीशुशुभ्रप्रभमभय नभो भूरिभूभृद्विभूति-

-भ्राजिष्णुर्भूरृभूणां भवनमपि विभोऽभेदि बभ्रे बभूवे ।

येन भ्रूविभ्रमस्ते भ्रमयतु सुभृशं बभ्रुवद्दुर्भृताशान्

भ्रान्तिर्भेदावभासस्त्विति भयमभिभूर्भोक्ष्यतो मायिभिक्षून् ॥ 8 ॥


ஸாப்⁴ரோஷ்ணாபீ⁴ஶுஶுப்⁴ரப்ரப⁴மப⁴ய நபோ⁴ பூ⁴ரிபூ⁴ப்⁴ருத்³விபூ⁴தி-

-ப்⁴ராஜிஷ்ணுர்பூ⁴ர்ருபூ⁴ணாம் ப⁴வனமபி விபோ⁴பே⁴தி³ ப³ப்⁴ரே ப³பூ⁴வே ।

யேன ப்⁴ரூவிப்⁴ரமஸ்தே ப்⁴ரமயது ஸுப்⁴ருஶம் ப³ப்⁴ருவத்³து³ர்ப்⁴ருதாஶான்

ப்⁴ராந்திர்பே⁴தா³வபா⁴ஸஸ்த்விதி ப⁴யமபி⁴பூ⁴ர்போ⁴க்ஷ்யதோ மாயிபி⁴க்ஷூன்

 ॥ 8||


அச்சம் அறியா அருந்திறன் வாயுவே!

முகிலும் தீஞ்சுடர் கதிரும் ஒளிவெண்

மதியும் உலவும் மங்கா வானையும்

வலிமிகு மன்னரும் வான்தொடு வெற்பும்

மிளிரும் புவியொடு உம்பர்கள் உலகையும்

உண்டில தாக்கி மீண்டும் காக்கும்

திண்ணிய வினைகள் திறனுடன் உந்தன்

புருவத்து அசைவு புரிந்திடும் ஜாலம்!

அவ்வினை புரியும் அழகிய புருவம்

கண்டதை விரும்பும் கடுவன் பூனை

என்றே அலையும் இப்புவி மீதில்

ஜீவமும் பரமும் இரண்டெனும் கூற்றை

பொய்யென் றிகழும் மாயத் துறவிகள்

கருத்தை அழித்து கடும்பயம் காட்டும்!

இருப்பை மறந்து இருக்கச் செய்யும்! (8)




येऽमुं भावं भजन्ते सुरमुखसुजनाराधितं ते तृतीयं

भासन्ते भासुरैस्ते सहचरचलितैश्चामरैश्चारुवेषाः ।

वैकुण्ठे कण्ठलग्नस्थिरशुचिविलसत्कान्तितारुण्यलीला-

लावण्यापूर्णकान्ताकुचभरसुलभाश्लेषसम्मोदसान्द्राः ॥ 9 ॥



யேமும் பா⁴வம் பஜ⁴ந்தே ஸுரமுக²ஸுஜனாராதி⁴தம் தே த்ருதீயம்

பா⁴ஸந்தே பா⁴ஸுரைஸ்தே ஸஹசரசலிதைஶ்சாமரைஶ்சாருவேஷா: ।

வைகுண்டே² கண்ட²லக்³னஸ்தி²ரஶுசிவிலஸத்காந்திதாருண்யலீலா-

லாவண்யாபூர்ணகாந்தாகுசப⁴ரஸுலபா⁴ஶ்லேஷஸம்மோத³ஸாந்த்³ரா: ॥ 9 ॥


அரியின் அன்பன் வாயுதான் புணைந்த

மூன்றாம் வடிவை* முனைந்து வணங்கும்

ஆன்றோர் தேவர் அனைவரைப் போல

பூமியில் பக்திப் பூசைகள் செய்வோர்

தாமும் அழகிய திரவிய உடையுடன்

பாங்குடன் தோழர்கள் பரிவுடன் வீசும்

ஓங்கு சாமரம் ஒளியுடன் இயங்க

மாலுறை தேசம் மகிழ்ந்தே செல்வர்!

தாங்கும் கடவுளைத் தடையறத் துதித்தே

ஆங்குசெல் ஜீவர் அடையும் பேரின்பம்

நிலைத்த தூய நீங்கா விளக்கமும்

கலையா இளமையும் கவின்மிகு காதலும்

வடியா அழகே வடிவாய் வாய்த்த

சுரூப நங்கையர்** சுயமுடன் கூடி

தரும்வெள்ளப் பேரின்பம் நிகர்த்த தாமே! (9)


*வாயுவின் மூன்றாம் வடிவம்: மத்வாச்சாரியார் என்னும் ஸ்ரீ ஆனந்த தீர்த்தர்.

**ஆண்ஜீவனுக்குகந்த பெண் ஜீவன்



आनन्दान्मन्दमन्दा ददति हि मरुतः कुन्दमन्दारनन्द्या-

-वर्तामोदान् दधाना मृदुपदमुदितोद्गीतकैः सुन्दरीणाम् ।

वृन्दैरावन्द्यमुक्तेन्द्वहिमगुमदनाहीन्द्रदेवेन्द्रसेव्ये

मौकुन्दे मन्दिरेऽस्मिन्नविरतमुदयन्मोदिनां देवदेव ॥ 10 ॥


ஆனந்தா³ன்மந்த³மந்தா³ த³த³தி ஹி மருத: குந்த³மந்தா³ரனந்த்³யா-

-வர்தாமோதா³ன் த³தா⁴னா ம்ருது³பத³முதி³தோத்³கீ³தகை: ஸுந்த³ரீணாம் ।

வ்ருந்தை³ராவந்த்³யமுக்தேந்த்³வஹிமகு³மத³னாஹீந்த்³ரதே³வேந்த்³ரஸேவ்யே

மௌகுந்தே³ மந்தி³ரேஸ்மின்னவிரதமுத³யன்மோதி³னாம் தே³வதே³வ ॥ 1௦ ॥


தேவர்க்குத் தேவா! வாயு தேவா!

முக்திதரு முகுந்தன் கொலுவீற் றிருக்கும்

சக்திமிகு வைகுண்டப் பதியில் நாளும்

சந்திர சுடுகதிர் சூரிய சேஷனும்

இந்திரன் மதனொடும் வந்தித் தொழுக,

சுந்தர வனிதையர் சூழ்ந்தே இசைக்கும்

மெல்லிய சொல்லொடு மேவிய பாடல்கள்

துல்லிய பேரின்பம் தடையறத் தரவே

மாதவன் சேவையில் மாண்புறு முக்தர்கள்

மாசுக ளின்றிப் பெறுவர் பேரானந்தம்!

மந்தார முல்லை நந்தியா வட்டை

தந்திடும் வாசம் தன்னுடன் சுமந்து

வருடும் தென்றலாய் விளங்கி வீசி

பரமா னந்தப்பே ரின்பப் பெருக்கை

வாரி வழங்கும் மாருதம் ஆங்கே! (10)



उत्तप्ताऽत्युत्कटत्विट् प्रकटकटकटध्वानसङ्घट्टनोद्य-

-द्विद्युद्व्यूढस्फुलिङ्गप्रकरविकिरणोत्क्वाथिते बाधिताङ्गान् ।

उद्गाढं पात्यमाना तमसि तत इतः किङ्करैः पङ्किले ते

पङ्क्तिर्ग्राव्णां गरिम्णा ग्लपयति हि भवद्वेषिणो विद्वदाद्य ॥ 11 ॥


உத்தப்தாத்யுத்கடத்விட் ப்ரகடகடகடத்⁴வானஸங்க⁴ட்டனோத்³ய-

-த்³வித்³யுத்³வ்யூட⁴ஸ்பு²லிங்க³ப்ரகரவிகிரணோத்க்வாதி²தே பா³தி⁴தாங்கா³ன் ।

உத்³கா³ட⁴ம் பாத்யமானா தமஸி தத இத: கிங்கரை: பங்கிலே தே

பங்க்திர்க்³ராவ்ணாம் க³ரிம்ணா க்³லபயதி ஹி ப⁴வத்³வேஷிணோ வித்³வதா³த்³ய ॥ 11 ॥


ஞான முதல்வ! ப்ராண தேவ!

நீயுரை தத்துவம் நிந்திக்கும் பகைவர்கள்

வீணென் றுரைத்து விகடம் செய்வோர்

காலன் அடியவர் கைப்பிடி சிக்கி

குன்றென நிற்கும் திண்ணிய பாறைகள்

வெந்திடும் வெப்ப வெருட்டும் ஒளியுடன்

கடகட வென்று அதிரப் பிணைந்து

படபட ஒலியுடன் மின்னல் பொறியுடன்

தகதக வென்று திசைகள் நிரப்பும்

இருள்சேர் குழியில் திரண்ட சகதியில்

மருளவே இழுத்து வதைக்கப் படுவர்!

அங்கும் இங்கும் அலைந்து உழன்று

பங்கம் அடைந்த அங்கம் கொண்டு

தொங்கும் பாறைகள் தொடர்ந்து நசுக்க

பெருந்துய ரடைவர் பயனது வாக!  (11)


अस्मिन्नस्मद्गुरूणां हरिचरणचिरध्यानसन्मङ्गलानां

युष्माकं पार्श्वभूमिं धृतरणरणिकस्वर्गिसेव्यां प्रपन्नः ।

यस्तूदास्ते स आस्तेऽधिभवमसुलभक्लेशनिर्मूकमस्त-

-प्रायानन्दं कथञ्चिन्न वसति सततं पञ्चकष्टेऽतिकष्टे ॥ 12 ॥


அஸ்மின்னஸ்மத்³கு³ரூணாம் ஹரிசரணசிரத்⁴யானஸன்மங்க³லானாம்

யுஷ்மாகம் பார்ஶ்வபூ⁴மிம் த்⁴ருதரணரணிகஸ்வர்கி³ஸேவ்யாம் ப்ரபன்ன: ।

யஸ்தூதா³ஸ்தே ஸ ஆஸ்தேதி⁴ப⁴வமஸுலப⁴க்லேஶனிர்மூகமஸ்த-

-ப்ராயானந்த³ம் கத²ஞ்சின்ன வஸதி ஸததம் பஞ்சகஷ்டேதிகஷ்டே ॥ 12 ॥


திருமால் திருவடி தடையறத் தியானக்

கருவா  யுள்ளம் நிறைந்து உயர்ந்த

துவைத தத்துவம் அருளிய குருவே!

வானோர் உலகே வியந்து போற்றும்

மாண்புகள் கொண்டு தேவர் பணியும்

நீயுறை பதியில் நின்றிருந் தாலும்

நீயுரை தத்துவம் நெஞ்சி லேற்கா

புவியுறை மாந்தர் பிறவித் துயரம்

கவிந்தே உறுத்த கொடும்பிணி யதனால்

ஊமைய ராகி உணர்வுகள் அழிந்து

முக்திக்கு வித்தாம் ஞானம் இழந்து

ஐவகைத் துயரம்* அணியாய் வருத்த

உய்யவே இல்லா நரக வேதனை

மெய்யாய்ப் பெறுவதும் முடிந்த முடிபே! (12)

*(அறியாமை, அஹங்காரம், கடும்பற்று, வெறுப்பு, மரணபயம் ஆகிய ஐந்து வகைத் துயரங்கள்) 


क्षुत् क्षामान् रूक्षरक्षोरदखरनखरक्षुण्णविक्षोभिताक्षा-

-नामग्नानान्धकूपे क्षुरमुखमुखरैः पक्षिभिर्विक्षताङ्गान् ।

पूयासृङ्मूत्रविष्ठाकृमिकुलकलिले तत्क्षणक्षिप्तशक्त्या-

-द्यस्त्रव्रातार्दितांस्त्वद्द्विष उपजिहते वज्रकल्पा जलूकाः ॥ 13 ॥



க்ஷுத் க்ஷாமான் ரூக்ஷரக்ஷோரத³க²ரனக²ரக்ஷுண்ணவிக்ஷோபி⁴தாக்ஷா-

-னாமக்³னானாந்த⁴கூபே க்ஷுரமுக²முக²ரை: பக்ஷிபி⁴ர்விக்ஷதாங்கா³ன் ।

பூயாஸ்ருனமூத்ரவிஷ்டா²க்ருமிகுலகலிலே தத்க்ஷணக்ஷிப்தஶக்த்யா-

-த்³யஸ்த்ரவ்ராதார்தி³தாம்ஸ்த்வத்³த்³விஷ உபஜிஹதே வஜ்ரகல்பா ஜலூகா: ॥ 13 ॥


அந்தகக் கிணற்றின் ஆழிருள் குழியில்

வெந்திட வீழ்ந்து உறுபசி தாகம்

விஞ்சவே மெலிந்து வெருட்டு மரக்கர்

தம்பெரும் பற்களும் கூருகிர் கொண்டும்

மெய்யது கிழிக்க வேறு வேறாகி

தெறித்துப் பிதுங்கும் விழிகளும் கொண்டு

கூக்குரல் ஒலிசெய்து கூர்மிகு அலகால்

தாக்கிடும் பறவைகள் அங்கம் தூளாக்க

குருதியும் சீழும் மூத்திர மலமும்

புழுக்களும் நிறைந்த மாசுறு கழிவெனும்

நரகம் சேர்ந்து மற்றதே கணத்தில்

வீசிய சூலமும் சக்தியும்* தாக்கி

ஆகிடும் ரணங்கள் அணைந்தே வருத்த

அரியும் வாயுவும் அமைந்த அமைப்பை

அறியாது வெறுப்பில் அமிழ்ந்த மாந்தர்

வஜ்ஜிரம் நிகர்த்த அட்டைகள் உறிஞ்சும்

குருதிகள் வழிய குலைந்திடு வாரே!  (13)

*ஒரு வகை ஆயுதம்



मातर्मे मातरिश्वन् पितरतुलगुरो भ्रातरिष्टाप्तबन्धो

स्वामिन् सर्वान्तरात्मन्नजर जरयितर्जन्ममृत्यामयानाम् ।

गोविन्दे देहि भक्तिं भवति च भगवन्नूर्जितां निर्निमित्तां

निर्व्याजां निश्चलां सद्गुणगणबृहतीं शाश्वतीमाशु देव ॥ 14 ॥



மாதர்மே மாதரிஶ்வன் பிதரதுலகு³ரோ ப்⁴ராதரிஷ்டாப்தப³ந்தோ⁴

ஸ்வாமின் ஸர்வாந்தராத்மன்னஜர ஜரயிதர்ஜன்மம்ருத்யாமயானாம் ।

கோ³விந்தே³ தே³ஹி ப⁴க்திம் ப⁴வதி ச ப⁴க³வன்னூர்ஜிதாம் நிர்னிமித்தாம்

நிர்வ்யாஜாம் நிஶ்சலாம் ஸத்³கு³ணக³ணப்³ருஹதீம் ஶாஶ்வதீமாஶு தே³வ ॥ 14 ॥


அண்ட சராசரம் அனைத்திற்கும் மூச்சாய்

அண்டா முதுமையும் அளவிலா இளமையும்

கொண்டே பிறப்பி றென்னும் கொடுந்துயர்

மாண்டே போக எவ்வுயிர்க்கும் உள்நிறை

உயிராய் உறையும் பிராண தேவா!

தாயும் தந்தையும் தனிப்பெரு மாசானும்

மேவிய சோதர னுமாகி நெஞ்சம்

களிக்கும் உறவுமாகி மிளிரும் தலைவனாய்

என்றும் என்னுள் இருக்கும் தேவா!

மாதவன் திருவடி மற்றுன தருளடி

மீதெனக்கு மட்டிலா பக்தி ஊற்றது

உலக ஆதாய இச்சை இலதாய்

வஞ்சகப் போலி நச்சுகள் அற்று

நிரந்தர ஞான வைராக்கிய மாண்புகள்

நிறைந்து உடும்பின் பிடிநிகர் உறுதியில்

விரைந்து பொங்கிட அருள்வாய் முதல்வா! (14)


विष्णोरत्त्युत्तमत्वादखिलगुणगणैस्तत्र भक्तिं गरिष्ठां

आश्लिष्टे श्रीधराभ्याममुमथ परिवारात्मना सेवकेषु ।

यः सन्धत्ते विरिञ्चश्वसनविहगपानन्तरुद्रेन्द्रपूर्वे-

-ष्वाध्यायंस्तारतम्यं स्फुटमवति सदा वायुरस्मद्गुरुस्तम् ॥ 15 ॥


விஷ்ணோரத்த்யுத்தமத்வாத³கி²லகு³ணக³ணைஸ்தத்ர ப⁴க்திம் க³ரிஷ்டா²ம்

ஆஶ்லிஷ்டே ஶ்ரீத⁴ராப்⁴யாமமுமத² பரிவாராத்மனா ஸேவகேஷு ।

ய: ஸந்த⁴த்தே விரிஞ்சஶ்வஸனவிஹக³பானந்தருத்³ரேந்த்³ரபூர்வே-

-ஷ்வாத்⁴யாயம்ஸ்தாரதம்யம் ஸ்பு²டமவதி ஸதா³ வாயுரஸ்மத்³கு³ருஸ்தம் ॥ 15 ॥


குறையொன்று மில்லா குணமிகு மாதவன்

வரையிலா அண்டம் வரைந்த முதல்வன்

திருமகள் பூமகள் தோள்கொண்டு துலங்க

புருஷ உத்தமன் பிரபஞ்சப் பெரியவன்

என்றுணர்ந் துள்ளத்து உயர்பக்தி கொண்டு

பிரமனும் வாயுவும் நிகரென நிற்க

கருடனும் சேஷனும் சிவனிந் திரனும்

பிறதேவ கணங்களும் நாரண சேவையில்

சிறந்து விளங்கும் சீர்மையை அறிந்தப்

பரிவாரப் படிநிலை மாற்றாது போற்றி

துதிக்கும் பக்தரை தொடர்ந்து காக்கும்

மதிப்புடை குருவாம் வாயுவே போற்றி!  (15)


तत्त्वज्ञान् मुक्तिभाजः सुखयिसि हि गुरो योग्यतातारतम्या-

-दाधत्से मिश्रबुद्धिंस्त्रिदिवनिरयभूगोचरान् नित्यबद्धान् ।

तामिस्रान्धादिकाख्ये तमसि सुबहुलं दुःखयस्यन्यथाज्ञान्

विष्णोराज्ञाभिरित्थं शृतिशतमितिहासादि चाकर्णयामः ॥ 16 ॥


தத்த்வஜ்ஞான் முக்திபா⁴ஜ: ஸுக²யிஸி ஹி கு³ரோ யோக்³யதாதாரதம்யா-

-தா³த⁴த்ஸே மிஶ்ரபு³த்³தி⁴ம்ஸ்த்ரிதி³வனிரயபூ⁴கோ³சரான் நித்யப³த்³தா⁴ன் ।

தாமிஸ்ராந்தா⁴தி³காக்²யே தமஸி ஸுப³ஹுலம் து³:க²யஸ்யன்யதா²ஜ்ஞான்

விஷ்ணோராஜ்ஞாபி⁴ரித்த²ம் ஶ்ருதிஶதமிதிஹாஸாதி³ சாகர்ணயாம: ॥ 16 ॥


ஹரியின் ஆணை அறமென அறிந்து

நரர்தம் வினைப்பயன் நல்கும் குருவே!

மறைநெறி நின்று தூயநல் ஞானம்

நியதியாய்ப் பெற்ற நீடுயர் சத்வர்

தகுதிபோல் இன்பம் முக்தியாய்த் தருவீர்!

நல்லன என்றும் அல்லன என்றும்

பொல்லா சிந்தை பொழுதும் வதைக்கும்

ராஜச ஜீவர் தம்வினைப் பயனாய்

ஓங்கிய சுவர்க்கமும் ஒடுங்கிய நரகமும்

இன்னல் மிக்க இப்புவி வாழ்வும்

திண்ணமாய்த் தருவீர் திரும்பத் திரும்ப!

இறையை மறுத்து வெறுப்பில் உழலும்

தாமஸ ஜீவர் தம்வினைப் பயனாய்

தாமிஸ்ர அந்த தாமிஸ்ர மென்னும்

பாதக நரகப் படுகுழி வீழ்த்தி

வேதனை மிகுந்து வருந்தச் செய்வீர்!

மறைநூல் இதிகாச புராணம் யாவையும்

ஓதலால் பெறுவதும் இவ்வறி வாமே!  (16)


वन्देऽहं तं हनूमानिति महितमहापौरुषो बाहुशाली

ख्यातस्तेऽग्र्योऽवतारः सहित इह बहुब्रह्मचर्यादिधर्मैः ।

सस्नेहानां सहस्वानहरहरहितं निर्दहन् देहभाजां

अंहोमोहापहो यः स्पृहयति महतीं भक्तिमद्यापि रामे ॥ 17 ॥


வந்தே³ஹம் தம் ஹனூமானிதி மஹிதமஹாபௌருஷோ பா³ஹுஶாலீ

க்²யாதஸ்தேக்³ர்யோவதார: ஸஹித இஹ ப³ஹுப்³ரஹ்மசர்யாதி³த⁴ர்மை: ।

ஸஸ்னேஹானாம் ஸஹஸ்வானஹரஹரஹிதம் நிர்த³ஹன் தே³ஹபா⁴ஜாம்

அம்ஹோமோஹாபஹோ ய: ஸ்ப்ருஹயதி மஹதீம் ப⁴க்திமத்³யாபி ராமே ॥ 17 ॥


இப்புவி மீதில் முதல வதாரம்

தப்பிலா துரைப்பேன் வாயுவே! குருவே!

புலன்கள் ஒடுங்கிய பிரம்ம சர்யம்

நலமுடன் பேணி பெளருஷம் என்னும்

மேவிய ஆண்மையும் மேன்மிகு வைரமாய்

தோள்வலி கொண்டும் அனுமன் எனவே

புகழ்பேர் தரித்தும் பொறுமையும் ஆற்றலும்

திகழ்ந்திடும் குருவே! திருவடி உமதை

அன்புடன் பணியும் அணிசேர் பக்தரின்

வன்மிகு தீமையும் வளம்கெடு பகையும்

தீயென எரித்து தினம்தினம் அருள்வாய்! 

பாவம் வாழ்வின் மோகமும் களைவாய்!

இராமன் சரணம் இதயத்து இருத்தி

வரையிலா பக்தி விரும்பியே இன்றும்

செலுத்தும் அனும! வந்தனம் உமக்கே! (17)


प्राक्पञ्चाशत्सहस्रैर्व्यवहितमहितं योजनैः पर्वतं त्वं

यावत्सञ्जीवनाद्यौषधनिधिमधिकप्राण लङ्कामनैषिः ।

अद्राक्षीदुत्पतन्तं तत उत गिरिमुत्पाटयन्तं गृहीत्वा

यान्तं खे राघवाङ्घ्रौ प्रणतमपि तदैकक्षणे त्वां हि लोकः ॥ 18 ॥


ப்ராக்பஞ்சாஶத்ஸஹஸ்ரைர்வ்யவஹிதமஹிதம் யோஜனை: பர்வதம் த்வம்

யாவத்ஸஞ்ஜீவனாத்³யௌஷத⁴னிதி⁴மதி⁴கப்ராண லங்காமனைஷி: ।

அத்³ராக்ஷீது³த்பதந்தம் தத உத கி³ரிமுத்பாடயந்தம் க்³ருஹீத்வா

யாந்தம் கே² ராக⁴வாங்க்⁴ரௌ ப்ரணதமபி ததை³கக்ஷணே த்வாம் ஹி லோக: ॥18 ॥



வலிமையிற் சிறந்த முக்யப் பிராணரே!

சட்டெனத் தாவிநீர் விண்ணில் பறந்து

பட்டெனெ ஐம்பது ஆயிரம் யோஜனை

கடந்து மாமலை துரோண பர்வதம்

படர்ந்த சஞ்சீவி மருந்துக் குவியல்

கண்டதும் வேருடன் மாமலை கையதில்

விண்டதும் தாங்கியே வானில் மீண்டதும்

இலங்கையில் இறங்கி இராகவன் சரணம்

மலர்ந்த பக்தியை மைவிழி இமைக்கும்

நொடியில் உலகமே பார்த்ததும் மாபெரும்

நிகழ்வென நாமு ணர்ந்திடு வோமே! (18)



क्षिप्तः पश्चात्सत्सलीलं शतमतुलमते योजनानां स उच्च-

-स्तावद्विस्तारवंश्चाप्युपललव इव व्यग्रबुद्ध्या त्वयाऽतः ।

स्वस्वस्थानस्थितातिस्थिरशकलशिलाजालसंश्लेषनष्ट-

-छ्छेदाङ्कः प्रागिवाभूत् कपिवरवपुषस्ते नमः कौशलाय ॥ 19 ॥


க்ஷிப்த: பஶ்சாத்ஸத்ஸலீலம் ஶதமதுலமதே யோஜனானாம் ஸ உச்ச-

-ஸ்தாவத்³விஸ்தாரவம்ஶ்சாப்யுபலலவ இவ வ்யக்³ரபு³த்³த்⁴யா த்வயாத: ।

ஸ்வஸ்வஸ்தா²னஸ்தி²தாதிஸ்தி²ரஶகலஶிலாஜாலஸம்ஶ்லேஷனஷ்ட-

-ச்²சே²தா³ங்க: ப்ராகி³வாபூ⁴த் கபிவரவபுஷஸ்தே நம: கௌஶலாய ॥ 19 ॥


நிகரறு கூர்மதி நித்திய மான 

புகழ்மிகு வானர புருஷ உத்தமா!

உலகினர் உவப்ப இமைக்கும் நொடியில்

அலகிலா அகலமும் உயரமும் பெற்ற

மாமலை கொணர்ந்து மயக்கம் அகற்றி

தாமதம் இன்றி தடையற வரையை

களமதன் நுட்பம் கணித்தே திருப்ப

பல்நூறு யோஜனைப் பாதைப் பயணம்

துல்லிய மாகத் துணிந்தே நீயும் 

கல்லெறி ஆட்டக் கணக்காய் வீச

வெட்டிய பாறைகள் ஒட்டின திடமாய்

தத்தம் இடத்தில் தாமே பொருந்தி

வித்தை புரிந்த தேவா போற்றி! (19)


दृष्ट्वा दुष्टाधिपोरः स्फुटितकनकसद्वर्म घृष्टास्थिकूटं

निष्पिष्टं हाटकाद्रिप्रकटतटतटाकातिशङ्को जनोऽभूत् ।

येनाऽजौ रावणारिप्रियनटनपटुर्मुष्टिरिष्टं प्रदेष्टुं

किं नेष्टे मे स तेऽष्टापदकटकतटित्कोटिभामृष्टकाष्ठः ॥ 20 ॥


த்³ருஷ்ட்வா து³ஷ்டாதி⁴போர: ஸ்பு²டிதகனகஸத்³வர்ம க்⁴ருஷ்டாஸ்தி²கூடம்

நிஷ்பிஷ்டம் ஹாடகாத்³ரிப்ரகடதடதடாகாதிஶங்கோ ஜனோபூ⁴த் ।

யேனாஜௌ ராவணாரிப்ரியனடனபடுர்முஷ்டிரிஷ்டம் ப்ரதே³ஷ்டும்

கிம் நேஷ்டே மே ஸ தேஷ்டாபத³கடகதடித்கோடிபா⁴ம்ருஷ்டகாஷ்ட:² ॥ 2௦ ॥


தசமுகன் வைரி தயரதன் மைந்தன்

வசம்பெரு மகிழ்வை வாரி வழங்கும்

சமர்க்கள நடனம் சால்புடன் புரிந்து

அமர்க்களம் செய்யும் அருந்திறன் அனும!

மின்னல் கோடி மிசைபல ஒளிர

பொன்வளை யணிந்தவுன் வன்கர முஷ்டி

இலங்கை அதிபன் இன்னலின் தலைவன்

கலங்கிடும் வண்ணம் மார்பினில் மோத

நெஞ்சணி தங்கக் கவசம் சிதறி

துஞ்சிடும் என்புகள் தூளாய் நொறுங்க

உறுகுழி யானதை உலகினர் கண்டு

கருமுகில் உதித்த இடியுடன் மின்னல்

தங்கம் வார்த்த தகைமிகு மாமலை

அங்கம் வீழ்ந்து ஆழ்குளம் ஆனதோ

என்றே ஐயம் எவரும் கொள்வர்!

அடியவன் விரும்பும் அத்தனை வரமும்

பிடியெனக் கொடுக்கும் முஷ்டியும் அதுவாம்! (20)


देव्यादेशप्रणीतिदृहिणहरवरावध्यरक्षोविघाता-

-द्यासेवोद्यद्दयार्द्रः सहभुजमकरोद्रामनामा मुकुन्दः ।

दुष्प्रापे पारमेष्ठ्ये करतलमतुलं मूर्धिविन्यस्य धन्यं

तन्वन्भूयः प्रभूतप्रणयविकसिताब्जेक्षणस्त्वेक्षमाणः ॥ 21 ॥


தே³வ்யாதே³ஶப்ரணீதித்³ருஹிணஹரவராவத்⁴யரக்ஷோவிகா⁴தா-

-த்³யாஸேவோத்³யத்³த³யார்த்³ர: ஸஹபு⁴ஜமகரோத்³ராமனாமா முகுந்த:³ ।

து³ஷ்ப்ராபே பாரமேஷ்ட்²யே கரதலமதுலம் மூர்தி⁴வின்யஸ்ய த⁴ன்யம்

தன்வன்பூ⁴ய: ப்ரபூ⁴தப்ரணயவிகஸிதாப்³ஜேக்ஷணஸ்த்வேக்ஷமாண: ॥ 21 ॥


சீதா தேவி சிறையிடம் அறிந்து

மாதா தேவி மறுமொழி உவந்து

பிரம்மா சிவன்தரு பெருவர மதனால்

மரணம் வென்ற அசுரர் மாய்த்து

மாதவன் சேவை மிகப்பல ஆற்ற

போதலர் மாலை புனைந்த மாயவன்

தாமரைக் கண்களில் தளும்பும் கருணை

அருளுடன் இராமன் என்னும் பெயருடன்

உருக்கொள் முகுந்தன் உரமிகு தோளுடன்

தோளணைத் துமக்கு அண்டம் படைக்கும்

ஆளுமைப் பதவி வரும்யுகம் வழங்கி

இணையில் அருட்கரம் சிரசில் வைத்து

கருணை பொங்கக் கனிவுடன் பார்த்தார்! (21)



जघ्ने निघ्नेन विघ्नो बहुलबलबकध्वंसनाद्येन शोच-

-द्विप्रानुक्रोशपाशैरसुविधृतिसुखस्यैकचक्राजनानाम् ।

तस्मै ते देव कुर्मः कुरुकुलपतये कर्मणा च प्रणामान्

किर्मीरं दुर्मतीनां प्रथममथ च यो नर्मणा निर्ममाथ ॥ 22 ॥


ஜக்⁴னே நிக்⁴னேன விக்⁴னோ ப³ஹுலப³லப³கத்⁴வம்ஸனாத்³யேன ஶோச-

-த்³விப்ரானுக்ரோஶபாஶைரஸுவித்⁴ருதிஸுக²ஸ்யைகசக்ராஜனானாம் ।

தஸ்மை தே தே³வ குர்ம: குருகுலபதயே கர்மணா ச ப்ரணாமான்

கிர்மீரம் து³ர்மதீனாம் ப்ரத²மமத² ச யோ நர்மணா நிர்மமாத² ॥ 22 ॥


சரணா  கதியாய் ஹரிபதம் அணைந்து

வரமது வென்றே உவந்தே வாழும்

பீமனாய் உதித்து வாயுவே நீரும்

அந்தணன் துயரம் அகற்றவே விரும்பி

பந்த பாசம் பரிவுடன் காட்டி

ஏக சக்ர நகர மாந்தர்

சாகும் அச்சம் போகும் வண்ணம்

பலமிகு அரக்கன் பகனை மாய்த்து

கொடியவர் முதல்வன் கிர்மீர அரக்கன்

மடியவே அவனை மத்தெனக் கடைந்து

கேளிக்கை வினையாய்க் கொன்றே அழித்த

குருகுலம் அதனின் கூரிய காவலா!

மனம்சொல் செயல் மூன்றையும் ஒருங்கே

குவித்தே உம்மை வணங்கு கின்றேனே! (22)



निर्मृद्नन्नत्ययत्नं विजरवर जरासन्धकायास्थिसन्धीन्

युद्धे त्वं स्वध्वरे वा पशुमिव दमयन् विष्णुपक्षद्विडीशम् ।

यावत्प्रत्यक्षभूतं निखिलमखभुजं तर्पयामासिथासौ

तावत्याऽयोजि तृप्त्या किमु वद भगवन् राजसूयाश्वमेधे ॥ 23 ॥


நிர்ம்ருத்³னந்னத்யயத்னம் விஜரவர ஜராஸந்த⁴காயாஸ்தி²ஸந்தீ⁴ன்

யுத்³தே⁴ த்வம் ஸ்வத்⁴வரே வா பஶுமிவ த³மயன் விஷ்ணுபக்ஷத்³விடீ³ஶம் ।

யாவத்ப்ரத்யக்ஷபூ⁴தம் நிகி²லமக²பு⁴ஜம் தர்பயாமாஸிதா²ஸௌ

தாவத்யாயோஜி த்ருப்த்யா கிமு வத³ ப⁴க³வன் ராஜஸூயாஶ்வமேதே⁴ ॥ 23 ॥


முதுமை யில்லா மேதகு குருவாய்

விளங்கு நல்பீமன் போரினுள் சுயமாய்

பாரினுள் திருமால் பகைவர் தலைவன்

ஜரா சந்தன் என்னும் அரசனை

முயற்சி தனியாய் முனைந்து கொள்ளாது

அயற்சி யின்றி ஆகுதி விலங்காய்

உடலும் எலும்பும் உதிர்ந்து போக

சடுதியில் நசுக்கி ஜனனம் அழித்து

வேள்வியின் ஆகுதி விரும்பிப் பெற்றிடும்

மாலவன் கண்ணன் மனமகிழ்த் திடுவார்!

இராச சூய அசுவ மேத

வேள்வி ஆகுதி விளைக்கும் திருப்தி

பீமன் வேள்வி ஆகுதி விளைக்கும்

திருப்திக்கு ஈடா? திடமுடன் உரைப்பீர்! (23)



क्ष्वेलाक्षीणाट्टहासं तव रणमरिहन्नुद्गदोद्दामबाहोः

बह्वक्षौहिण्यनीकक्षपणसुनिपुणं यस्य सर्वोत्तमस्य ।

शुश्रूषार्थं चकर्थ स्वयमयमथ संवक्तुमानन्दतीर्थ-

-श्रीमन्नामन्समर्थस्त्वमपि हि युवयोः पादपद्मं प्रपद्ये ॥ 24 ॥



க்ஷ்வேலாக்ஷீணாட்டஹாஸம் தவ ரணமரிஹன்னுத்³க³தோ³த்³தா³மபா³ஹோ:

ப³ஹ்வக்ஷௌஹிண்யனீகக்ஷபணஸுனிபுணம் யஸ்ய ஸர்வோத்தமஸ்ய ।

ஶுஶ்ரூஷார்த²ம் சகர்த² ஸ்வயமயமத² ஸம்வக்துமானந்த³தீர்த-²

-ஶ்ரீமன்னாமன்ஸமர்த²ஸ்த்வமபி ஹி யுவயோ: பாத³பத்³மம் ப்ரபத்³யே ॥ 24 ॥


பகைவரை அழிக்கும் பலமிகு பீமனாய்

மிகைவலி தோளில் மேவிய கதையுடன்

தனிப்பெரும் கடவுளுக்குத் தன்சுய சேவையாய்

அணிதிரள் கவுரவர் கதையினை முடிக்க

தேயா சிம்ம நாதம் முழக்கி

ஓயா அட்ட காசம் செய்து

எண்ணறு அக்ஷௌ ஹிணிகளை* அழித்து

நுண்ணிய சாதுர்ய போர்வினை நிகழ்த்தி

திருமிகு ஆனந்த தீர்த்தராய்ப் பிறந்து

உரமிகு உன்னத நூல்கள் இயற்றி

சாதுர்யம் கொண்டே நானிலம் தன்னில்

மாதவன் பெருமை மங்காது நிறுவிய

உம்மிருவர் வினைகள் வியந்தே நாமும்

உம்மிருவர் பதங்கள் பணிந்தேத் துவமே! (24)


*ஒரு அக்ஷௌஹிணி என்பது

21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 காலாட்படைகள் ஆக மொத்தம் 218700 வீரர்கள்.



दृह्यन्तीं हृदृहं मां दृतमनिल बलाद्द्रावयन्तीमविद्या-

-निद्रां विद्राव्य सद्योरचनपटुमथाऽपाद्य विद्यासमुद्र ।

वाग्देवी सा सुविद्याद्रविणद विदिता द्रौपदी रुद्रपत्न्या-

-दुद्रिक्ता द्रागभद्राद्रहयतु दयिता पूर्वभीमाऽज्ञया ते ॥ 25 ॥



த்³ருஹ்யந்தீம் ஹ்ருத்³ருஹம் மாம் த்³ருதமனில ப³லாத்³த்³ராவயந்தீமவித்³யா-

-னித்³ராம் வித்³ராவ்ய ஸத்³யோரசனபடுமதா²பாத்³ய வித்³யாஸமுத்³ர ।

வாக்³தே³வீ ஸா ஸுவித்³யாத்³ரவிணத³ விதி³தா த்³ரௌபதீ³ ருத்³ரபத்ன்யா-

-து³த்³ரிக்தா த்³ராக³ப⁴த்³ராத்³ரஹயது த³யிதா பூர்வபீ⁴மாஜ்ஞயா தே ॥ 25 ॥



அறிவெனுங் கடலில் அருங்கல்விச் செல்வம்

உரித்த தாக்கி உமையவள் மிஞ்சும்

புகழொடு உமதொரு பாகமாய் விளங்கும்

மிகுந்திடும் சிறப்பொடு மொழியின் செல்வி

திரௌபதி தேவி திறன்மிகு பீமனின்

முன்னவ தார வாயுவின் ஆணையால்

என்மன வீட்டில் எங்கும் விரவிய

அஞ்ஞான விருளெனும் அளவில்லா நித்திரை

பஞ்சாய்ப் பறந்திட வாயுவின் சக்தியால்

என்வழி மாற்றும் அம்மாயப் பெரும்பேய்

எண்ணிலாத் தொலைவு எகிறியே மறைய

நொடியிலென் வாக்கும் மனமும் மாலவன்

அடியில் மகிழ்ந்தே இருக்க வதனால்

மங்கல மற்ற இன்னலும் கரைந்து

தங்கிட அருள்வாய் தடையின்றி உடனே! (25)



याभ्यां शुश्रूषुरासीः कुरुकुलजनने क्षत्रविप्रोदिताभ्यां

ब्रह्मभ्यां बृंहिताभ्यां चितसुखवपुषा कृष्णनामास्पदाभ्याम् ।

निर्भेदाभ्यां विशेषाद्विवचनविषयाभ्याममूभ्यामुभाभ्यां

तुभ्यं च क्षेमदेभ्यः सरिसिजविलसल्लोचनेभ्यो नमोऽस्तु ॥ 26 ॥


யாப்⁴யாம் ஶுஶ்ரூஷுராஸீ: குருகுலஜனநே க்ஷத்ரவிப்ரோதி³தாப்⁴யாம்

ப்³ரஹ்மப்⁴யாம் ப்³ரும்ஹிதாப்⁴யாம் சிதஸுக²வபுஷா க்ருஷ்ணனாமாஸ்பதா³ப்⁴யாம் ।

நிர்பே⁴தா³ப்⁴யாம் விஶேஷாத்³விவசனவிஷயாப்⁴யாமமூப்⁴யாமுபா⁴ப்⁴யாம்

துப்⁴யம் ச க்ஷேமதே³ப்⁴ய: ஸரிஸிஜவிலஸல்லோசனேப்⁴யோ நமோஸ்து ॥ 26 ॥


குருவம்ச சத்ரிய பீமனாய் நிகழ்கலி

அறிவுடை அந்தண ஆனந்த தீர்த்தராய்

சிறந்த மெய்ஞானம் மேவிய இருவரும்

கிருஷ்ண வியாசரின் அடைக்கலம் விரும்பியே

பிரபஞ்சம் வழியும் பிரம்ம ஞானமும்

நிரவிய மங்கல நற்குண மாவையும்

வாயுவின் ஆத்ம ஞானத்தால் ஒன்றாகி

இருவுட லாயினும் பேத மிலதாய்

மூத்தவர் தமக்கு முனைந்தே பணியும்

இளையவர் மத்வ ராயர் இருவரும்

நாடிடும் அடியவர் நலன்பல தந்திடும்

கேடில் வாழ்வினை குறையிலா தளித்திடும்

பாங்கினைப் பணிந்து பரவசம் கொண்டே

தாமரைக் கண்களைத் தன்முகம் கொண்டிடும்

வீம மத்வ ரூபங்கள் தமக்கு

செவ்விய வணக்கம் செலுத்துவேன் நானே! (26)


गच्छन् सौगन्धिकार्थं पथि स हनुमतः पुच्छमच्छस्य भीमः

प्रोद्धर्तुं नाशकत्स त्वमुमुरुवपुषा भीषयामास चेति ।

पूर्णज्ञानौजसोस्ते गुरुतम वपुषोः श्रीमदानन्दतीर्थ

क्रीडामात्रं तदेतत् प्रमदद सुधियां मोहक द्वेषभाजाम् ॥ 27 ॥


க³ச்ச²ன் ஸௌக³ந்தி⁴கார்த²ம் பதி² ஸ ஹனுமத: புச்ச²மச்ச²ஸ்ய பீ⁴ம:

ப்ரோத்³த⁴ர்தும் நாஶகத்ஸ த்வமுமுருவபுஷா பீ⁴ஷயாமாஸ சேதி ।

பூர்ணஜ்ஞானௌஜஸோஸ்தே கு³ருதம வபுஷோ: ஶ்ரீமதா³னந்த³தீர்த²

க்ரீடா³மாத்ரம் ததே³தத் ப்ரமத³த³ ஸுதி⁴யாம் மோஹக த்³வேஷபா⁴ஜாம் ॥ 27 ॥



முக்தி இன்பம் உலகிற்கு அளிக்கும்

உத்தம குருவாய் உறையும் மத்வ!

நறுமணத் தாமரை நாடிவழி செல்லும்

உறுபல பீமன் நற்குண அனுமனின்

நிலம்கிடை வாலினை நிமிர்த்தில னாகி

மாசறு ஞான ஒளியாய் அனுமன்

வரையிலா உருவுடன் வரையென இருக்க

கறையிலா பீமனும் கலக்கம் கொண்ட

கதையினைக் கேட்ட காலம் இருப்பினும்

அனுமனும் பீமனும் ஈருடல் ஓரொளியாய்

இருப்பது உண்மை இங்கிது விளையாட்டே

என்பதை அறிந்த ஆன்றோர் பெருமக்கள்

தன்னகம் மகிழ்ந்தே பேரின்பம் கொள்ள

வன்மையாய் வெறுக்கும் வியர்த்த மனிதரோ

வஞ்சகக் கதையென மயக்கமே கொள்வர்! (27)


बह्वीः कोटीरटीकः कुटलकटुमतीनुत्कटाटोपकोपान्

द्राक्च त्वं सत्वरत्वाच्चरणद गदया पोथयामासिथारीन् ।

उन्मथ्यातथ्यमिथ्यात्ववचनवचनानुत्पथस्थांस्तथाऽन्यान्

प्रायच्छः स्वप्रियायै प्रियतमकुसुमं प्राण तस्मै नमस्ते ॥ 28 ॥



ப³ஹ்வீ: கோடீரடீக: குடலகடுமதீனுத்கடாடோபகோபான்

த்³ராக்ச த்வம் ஸத்வரத்வாச்சரணத³ க³த³யா போத²யாமாஸிதா²ரீன் ।

உன்மத்²யாதத்²யமித்²யாத்வவசனவசனானுத்பத²ஸ்தா²ம்ஸ்ததா²ன்யான்

ப்ராயச்ச:² ஸ்வப்ரியாயை ப்ரியதமகுஸுமம் ப்ராண தஸ்மை நமஸ்தே ॥ 28 ॥



பாதத் தாமரை பணிந்தோர்க்கு ஈயும்

வேத முதல்வா! பிராண தேவா!

துவாபர பீமனாய்த் தாமரைத் தேடி

வழிவரும் தடைகளை மதித்திடாது நீயும்

பழிமிகு வஞ்சக புத்தியும் கேடுடைக்

கோபமும் ஆணவம் கொண்ட நெஞ்சமும்

பாவமும் நிறைந்த பலகோடிப் பகைவரை

கதையுடன் நொடியில் கடைந்தே அழித்து

கலியில் மத்வ ராயராய்ப் பிறந்து

பொய்மை நிறைந்த மாயா வாதம்

புரிந்தே மனிதர் பாதை மாற்றும்

திரிபுவாத மியற்றும் தீயவர் மயங்க

உயரிய தத்துவ வாதம் புரிந்தீர்!

மனதுக் குகந்த மனைவிக்கு மலரும்

மனதுக்குள் படிந்த மனிதர்க்கு அறிவும்

பீமராய் மத்வராய் விரும்பி அளித்த

வாயுவே உமக்கு வந்தனம் செய்தேன்! (28)



देहादुत्क्रामितानामधिपतिरसतामक्रमाद्वक्रबुद्धिः

क्रुद्धः क्रोधैकवश्यः क्रिमिरिव मणिमान् दुष्कृती निष्क्रियार्थम् ।

चक्रे भूचक्रमेत्य क्रकचमिव सतां चेतसः कष्टशास्त्रं

दुस्तर्कं चक्रपाणेर्गुणगणविरहं जीवतां चाधिकृत्य ॥ 29 ॥



தே³ஹாது³த்க்ராமிதானாமதி⁴பதிரஸதாமக்ரமாத்³வக்ரபு³த்³தி⁴:

க்ருத்³த:⁴ க்ரோதை⁴கவஶ்ய: க்ரிமிரிவ மணிமான் து³ஷ்க்ருதீ நிஷ்க்ரியார்த²ம் ।

சக்ரே பூ⁴சக்ரமேத்ய க்ரகசமிவ ஸதாம் சேதஸ: கஷ்டஶாஸ்த்ரம்

து³ஸ்தர்கம் சக்ரபாணேர்கு³ணக³ணவிரஹம் ஜீவதாம் சாதி⁴க்ருத்ய ॥ 29 ॥



வீமனை எதிர்த்து உடலுயி ரிழந்த

பேய்மன அரக்கர் அரசன் கலியில்

வக்கிர மனமும் வெருட்டும் கோபமும்

உக்கிர எண்ணமும் ஒன்றாய்ச் சேர

பழிவினை யாற்ற பாரினில் பிறந்து

இழிசெயல் புரிய மணிமான் என்னும்

பெயரொடு அவனும் பேரறி வாளரை

அரத்தில் அரையும் மரமே அன்ன

அகத்தில் நசுக்கி போதனை செய்ய

சக்கர பாணியாம் நாரணன் தன்னை

நற்குண மில்லா அருவனாய் நாட்டி

சீவனைப் பிரம்மம் என்றே சொல்லி

பாவ வாதம் பலவும் செய்து 

கெடுவழி செல்ல கேடுகள் புரிந்து

சகதிப் புழுவென சகத்தினில் நெளிந்து

விகற்ப நூல்கள் விரும்பிச் செய்தான்! (29)



तद्दुष्प्रेक्षानुसारात्कतिपयकुनरैरादृतोऽन्यैर्विसृष्टो

ब्रह्माऽहं निर्गुणोऽहं वितथमिदमिति ह्येष पाषण्डवादः ।

तद्युक्त्याभासजालप्रसरविषतरूद्दाहदक्षप्रमाण-

-ज्वालामालाधराग्निः पवन विजयते तेऽवतारस्तृतीयः ॥ 30 ॥



தத்³து³ஷ்ப்ரேக்ஷானுஸாராத்கதிபயகுனரைராத்³ருதோன்யைர்விஸ்ருஷ்டோ

ப்³ரஹ்மாஹம் நிர்கு³ணோஹம் விதத²மித³மிதி ஹ்யேஷ பாஷண்ட³வாத:³ ।

தத்³யுக்த்யாபா⁴ஸஜாலப்ரஸரவிஷதரூத்³தா³ஹத³க்ஷப்ரமாண-

-ஜ்வாலாமாலாத⁴ராக்³னி: பவன விஜயதே தேவதாரஸ்த்ருதீய: ॥ 3௦ ॥



மரித்த அசுரன்தன் மறந்திடா பகையினால்

வரித்த பிறவியில் உதிர்த்த கேடுடை

அதர்ம தத்துவம் அறிவிலி மனிதரால்

சிதறி எங்கும் சிந்தை அழிக்க

தேவ ஞானியர் தெளிந்த ஞானத்தால்

பாவம் அதுவெனெ பதைத்தே ஒதுக்கிட

பிரமமும் நானே பிறிதொரு உருவிலா

இறைவனும் நானே இவ்வுலகே மாயை

என்றே ஆஷாட பூதியாய் நாளும்

அகத்தி லொன்று புறத்தி லொன்றென

பகரும் கூட்டம் பாரினை மயக்க

நச்சு மரமதை நசுக்கி வேருடன்

மிஞ்சா சாம்பலாய் எரிக்கும் தீச்சுடர்

மாலையாய் மறைநூல் தெளிந்து நிரூபணம்

தந்த வாயுவே! உம்மூன்றாம் அவதார

மத்வரின் வெற்றியே மலர்ந்திடும் நாளுமே! (30)



आक्रोशन्तो निराशा भयभरविवशस्वाशयाश्छिन्नदर्पा

वाशन्तो देशनाशस्विति बत कुधियां नाशमाशादशाऽशु ।

धावन्तोऽश्लीलशीला वितथशपथशापाशिवाः शान्तशौर्या-

-स्त्वद्व्याख्यासिंहनादे सपदि ददृशिरे मायिगोमायवस्ते ॥ 31 ॥


ஆக்ரோஶந்தோ நிராஶா ப⁴யப⁴ரவிவஶஸ்வாஶயாஶ்சி²ன்னத³ர்பா

வாஶந்தோ தே³ஶனாஶஸ்விதி ப³த குதி⁴யாம் நாஶமாஶாத³ஶாஶு ।

தா⁴வந்தோஶ்லீலஶீலா விதத²ஶபத²ஶாபாஶிவா: ஶாந்தஶௌர்யா-

-ஸ்த்வத்³வ்யாக்²யாஸிம்ஹனாதே³ ஸபதி³ த³த்³ருஶிரே மாயிகோ³மாயவஸ்தே 

॥ 31 ॥



சிங்க கர்ஜனை நிகர்த்த வாதம்

பங்கம் செய்து கொடுத்த தோல்வியால்

ஏமாற்றம் அச்சம் இயலாமை பெருமூச்சு

தாமே கடும்வெறி தந்து ‘ஐயகோ!

உலகம் நன்னெறி இழந்ததே!” என்றே

கலங்கிய மனதுடன் நெறிபிறழ் வாழ்க்கையும்

பொய்நிறை சபதமும் போக்கிலா சாபமும்

வையத்துள் வழங்கினும் வெற்றுபுகழ் அமிழ

பயத்தில் பஞ்சாய்ப் பத்துத் திக்கிலும்

மயங்கி ஓட மாசுடை மனதில்

நரியென வஞ்சகம் சூழ, மாயா

தத்துவம் வழக்கில் தந்திட முயன்றோர்

புத்தி கெட்டு புறம் கண்டோட

சடுதியில் வெற்றி தாமே கனிந்ததை

எடுத்திதை உரைப்பேன் வாயுவே உம்புகழ்! (31)




त्रिष्वप्येवावतारेष्वरिभिरपघृणं हिंसितो निर्विकारः

सर्वज्ञः सर्वशक्तिः सकलगुणगणापूर्णरूपप्रगल्भः ।

स्वच्छः स्वच्छन्दमृत्युः सुखयसि सुजनं देव किं चित्रमत्र

त्राता यस्य त्रिधामा जगदुत वशगं किङ्कराः शङ्कराद्याः ॥ 32 ॥


த்ரிஷ்வப்யேவாவதாரேஷ்வரிபி⁴ரபக்⁴ருணம் ஹிம்ஸிதோ நிர்விகார:

ஸர்வஜ்ஞ: ஸர்வஶக்தி: ஸகலகு³ணக³ணாபூர்ணரூபப்ரக³ல்ப:⁴ ।

ஸ்வச்ச:² ஸ்வச்ச²ந்த³ம்ருத்யு: ஸுக²யஸி ஸுஜனம் தே³வ கிம் சித்ரமத்ர

த்ராதா யஸ்ய த்ரிதா⁴மா ஜக³து³த வஶக³ம் கிங்கரா: ஶங்கராத்³யா: ॥ 32 ॥



அரக்கர் அறிஞர் என்றே பகைவர்

பிறப்பு மூன்றிலும் பெருந்துயர் தரினும்

மனமோ உடலோ மாற்றம் கொள்ளாது

அனைத்து ஞானம் அழகுடன் திகழ

ஆற்றல் அனைத்தும் அடிமை ஆக

போற்றற் குகந்த பண்புநலன் ஒளிர

மாசிலா எண்ணத் தூய்மை கொண்டு

காசினியில் விரும்பும் காலம் காலன்

யோசித்து வரும்வரம் சுயமாய்ப் பெற்ற 

வாயுவே! மூவகை உலகையும் நிறுவி

தேவர்கள் சிவனொடு திருத்தொண் டாற்ற

பிரபஞ்சம் யாவையும் பரிவுடன் வசம்கொள்

திருமால் திருவருள் நிரம்பப் பெற்ற

உமதருள் பெற்று ஆன்றோர் இன்பம்

தம்முள் கொள்வதில் வியப்புமும் உண்டோ?  (32)



उद्यन्मन्दस्मितश्रीमृदु मधुमधुरालापपीयूषधारा-

-पूरासेकोपशान्तासुखसुजनमनोलोचनापीयमानम् ।

सन्द्रक्ष्ये सुन्दरं सन्दुहदिह महदानन्दमानन्दतीर्थ

श्रीमद्वक्त्रेन्दुबिम्बं दुरतनुदुदितं नित्यदाऽहं कदा नु ॥ 33 ॥


உத்³யன்மந்த³ஸ்மிதஶ்ரீம்ருது³ மது⁴மது⁴ராலாபபீயூஷதா⁴ரா-

-பூராஸேகோபஶாந்தாஸுக²ஸுஜனமனோலோசனாபீயமானம் ।

ஸந்த்³ரக்ஷ்யே ஸுந்த³ரம் ஸந்து³ஹதி³ஹ மஹதா³னந்த³மானந்த³தீர்த²

ஶ்ரீமத்³வக்த்ரேந்து³பி³ம்ப³ம் து³ரதனுது³தி³தம் நித்யதா³ஹம் கதா³ நு ॥ 33 ॥


பாவம் பொடிபட காக்கும் வாயுவே!

குறுநகை ஒளிர மிருது மதுர

நறுந்தேன் சுவைமொழி தடையறப் பொங்கி

இன்னல் நெருப்பை இலாது அணைத்து

நன்னெறி மாந்தர் நல்மனம் தனிலும்

புண்ணியம் செய்த புறக்கண் அதிலும்

ஆன்மிக தாகம் அடங்கும் வண்ணம்

பருகிடும் செயலால் பேரின்பம் அளித்து

மறையவே மறையா திறனுடன் விளங்கும்

திருமிகு ஆனந்த தீர்த்தரின் மதிமுகம்

காண்பதென் றோவென் கண்களால் இங்கே?   (33)


प्राचीनाचीर्णपुण्योच्चयचतुरतराचारतश्चारुचित्ता-

-नत्युच्चां रोचयन्तीं श्रुतिचितवचनां श्रावकांश्चोद्यचुञ्चून् ।

व्याख्यामुत्खातदुःखां चिरमुचितमहाचार्य चिन्तारतांस्ते

चित्रां सच्छास्त्रकर्ताश्चरणपरिचराञ्छ्रावयास्मांश्च किञ्चित् ॥ 34 ॥



ப்ராசீனாசீர்ணபுண்யோச்சயசதுரதராசாரதஶ்சாருசித்தா-

-னத்யுச்சாம் ரோசயந்தீம் ஶ்ருதிசிதவசனாம் ஶ்ராவகாம்ஶ்சோத்³யசுஞ்சூன் ।

வ்யாக்²யாமுத்கா²தது³:கா²ம் சிரமுசிதமஹாசார்ய சிந்தாரதாம்ஸ்தே

சித்ராம் ஸச்சா²ஸ்த்ரகர்தாஶ்சரணபரிசராஞ்ச்²ராவயாஸ்மாம்ஶ்ச கிஞ்சித் ॥ 34 ॥


ஞான நூல்கள் பலவும் இயற்றி

பேணும் தகுதிகள் அனைத்தும் கொண்ட

வான்புகழ் கொண்ட குருவே! மத்வரே!

முன்வினைத் தொடர்வரும் நல்வினைப் பலனாய்

உறுதவ சீலராய் உயரிய வாழ்க்கையை

மருவிலா மனதுடன் மண்ணிலே வாழ்ந்து

உமதினிய தத்துவ விளக்கங்கள் கேட்பதில்

உவகை கொள்ளும் உன்னத சீடர்கள்

மேன்மை தங்கிய மறைநூல் வார்த்தைகள்

தானவை கேட்பதால் பேரின்பம் கொள்ளுவர்!

பிறவிப் பிணியை வேருடன் பெயர்க்கும்

அரிய அவ்விளக்கம் வியப்பின் ஊற்று!

பாதம் உந்தன் பணிந்தவர் மனதில்

வேதம் ஒத்த விளக்க உரைகள்

நெடுநாள் தங்கி நிலைபெற் றருளும்!

விருந்தெனச் சீடர்க்கு விளக்கம் அளிப்போய்!

மருந்தென அதிலெமக்கு சிறிதும் அளித்தால்

செவிகள் எமது கேட்க உய்வோம்! (34)


पीठे रत्नोकपक्लृप्ते रुचिररुचिमणिज्योतिषा सन्निषण्णं

ब्रह्माणं भाविनं त्वां ज्वलति निजपदे वैदिकाद्या हि विद्याः ।

सेवन्ते मूर्तिमत्यः सुचरित चरितं भाति गन्धर्व गीतं

प्रत्येकं देवसंसत्स्वपि तव भगवन्नर्तितद्योवधूषु ॥ 35 ॥


பீடே² ரத்னோகபக்ல்ருப்தே ருசிரருசிமணிஜ்யோதிஷா ஸன்னிஷண்ணம்

ப்³ரஹ்மாணம் பா⁴வினம் த்வாம் ஜ்வலதி நிஜபதே³ வைதி³காத்³யா ஹி வித்³யா: ।

ஸேவந்தே மூர்திமத்ய: ஸுசரித சரிதம் பா⁴தி க³ந்த⁴ர்வ கீ³தம்

ப்ரத்யேகம் தே³வஸம்ஸத்ஸ்வபி தவ ப⁴க³வன்னர்திதத்³யோவதூ⁴ஷு ॥ 35 ॥



நன்னெறி மிகுந்து நலம்தரும் குருவே!

விண்ணவர் வணங்கும் வியத்தகு வாயுவே!

முத்து பவளம் மாணிக்க ரத்தினம்

கொத்தாய் மின்னும் சொக்கத் தங்க

சிம்மா சனமமர் நான்முக பதவி

எம்மான் பெற்று ஒளிரும் வேளை

நால்வகை வேதம் நல்லுப னிடங்கள்

நுல்வகைக் கல்வி அனைத்தும் ஆங்கெ

தக்குரு கொண்டு தாம்தரும் சேவை!

அக்கணம் அமரர் அவைகள் யாவும்

தேவ மங்கையர் திருநடம் புரிய

பாவம் பொடிக்கும் உமதுயர் சரித்திரம்

கந்தர்வ கானமாய் கவிந்து சூழும்

விந்தைகள் கண்டு வியந்து நிற்போமே! (35)


सानुक्रोशैरजस्रं जनिमृतिनिरयाद्यूर्मिमालाविलेऽस्मिन्

संसाराब्धौ निमग्नान् शरणमशरणानिच्छतो वीक्ष्य जन्तून् ।

युष्माभिः प्रार्थितः सन् जलनिधिशयनः सत्यवत्यां महर्षे-

-र्व्यक्तश्चिन्मात्रमूर्तिर्न खलु भगवतः प्राकृतो जातु देहः ॥ 36 ॥


ஸானுக்ரோஶைரஜஸ்ரம் ஜனிம்ருதினிரயாத்³யூர்மிமாலாவிலேஸ்மின்

ஸம்ஸாராப்³தௌ⁴ நிமக்³னான் ஶரணமஶரணானிச்ச²தோ வீக்ஷ்ய ஜந்தூன் ।

யுஷ்மாபி⁴: ப்ரார்தி²த: ஸன் ஜலனிதி⁴ஶயன: ஸத்யவத்யாம் மஹர்ஷே-

-ர்வ்யக்தஶ்சின்மாத்ரமூர்திர்ன க²லு ப⁴க³வத: ப்ராக்ருதோ ஜாது தே³ஹ: ॥ 36 ॥



இல்வாழ் வென்னும் இருண்ட கடலில்

பொல்லாப் பிறப்பு இறப்பெனும் நரகம்

தடைப்படா அலைகளாய் தன்னுள் அமிழ்த்த

கடைகொள் வார்தேடி கதறும் ஜீவர்கள்

முக்தி பெறவே முனையும் பொழுது

இச்சை தீர அருளுடன் பார்க்கும்

உம்போல் உம்பர்கள் உயிராய்த் துதிக்கும்

தண்கடல் துயிலும் திருமால் ஆங்கே

முனிவரை மணந்த சத்திய வதிக்கு

இனிய மகவாய் இன்னுயிர் தரித்து

இன்பம் விளைக்கும் அறிவுடன் துலங்கி

தெய்வம் கொண்ட தேர்ந்த வடிவம்

ஐம்புல னடங்கிய தென்பதும் தகுமோ?  (36)



अस्तव्यस्तं समस्तश्रुतिगतमधमै रत्नपूगं यथाऽन्धै-

-रर्थं लोकोपकृत्यै गुणगणनिलयः सूत्रयामास कृत्स्नम् ।

योऽसौ व्यासाभिधानस्तमहमहरहर्भक्तितस्त्वत्प्रसादात्

सद्यो विद्योपलब्ध्यै गुरुतममगुरुं देवदेवं नमामि ॥ 37 ॥


அஸ்தவ்யஸ்தம் ஸமஸ்தஶ்ருதிக³தமத⁴மை ரத்னபூக³ம் யதா²ந்தை⁴-

-ரர்த²ம் லோகோபக்ருத்யை கு³ணக³ணனிலய: ஸூத்ரயாமாஸ க்ருத்ஸ்னம் ।

யோஸௌ வ்யாஸாபி⁴தா⁴னஸ்தமஹமஹரஹர்ப⁴க்திதஸ்த்வத்ப்ரஸாதா³த்

ஸத்³யோ வித்³யோபலப்³த்⁴யை கு³ருதமமகு³ரும் தே³வதே³வம் நமாமி ॥ 37 ॥



இரத்தினக் குவியலின் சிறப்ப றியாது

குருடர்தம் மனம்போல் குலைப்பது போல

மறைநூல் சாத்திரம் மொழிந்த தத்துவம்

குறைபல கொண்டு கூறிய மதியிலா

மானிடர் வார்த்தைகள் மாற்றவே வேண்டி

நான்முகன் முதலாய் தேவர்க்குத் தேவனாய்

குருவென யாரையும் கொண்டிரா உயர்குரு

நற்குணம் குடிகொள் நயமிகு வியாசர்

பற்பல சாத்திரம் பகர்ந்த சத்தியம்

பிரம்ம சூத்திர மெனும்பெரு நூலாக்கி

உலகம் உய்யவே உணர்ந்து அளித்தார்!

வாயுவே! உமதருள் வரத்தினால்  நானும்

ஆயுளில் ஆத்மஞானம் அறிந்து பெறவே

வியாசரை அனுதினம் வணங்கு கின்றேனே! (37)


आज्ञामन्यैरधार्यां शिरसि परिसरद्रश्मिकोटीरकोटौ

कृष्णस्याक्लिष्टकर्मा दधदनुसराणादर्थितो देवसङ्घैः ।

भूमावागत्य भूमन्नसुकरमकरोर्ब्रह्मसूत्रस्य भाष्यं

दुर्भाष्यं व्यस्य दस्योर्मणिमत उदितं वेदसद्युक्तिभिस्त्वम् ॥ 38 ॥


ஆஜ்ஞாமன்யைரதா⁴ர்யாம் ஶிரஸி பரிஸரத்³ரஶ்மிகோடீரகோடௌ

க்ருஷ்ணஸ்யாக்லிஷ்டகர்மா த³த⁴த³னுஸராணாத³ர்தி²தோ தே³வஸங்கை⁴: ।

பூ⁴மாவாக³த்ய பூ⁴மன்னஸுகரமகரோர்ப்³ரஹ்மஸூத்ரஸ்ய பா⁴ஷ்யம்

து³ர்பா⁴ஷ்யம் வ்யஸ்ய த³ஸ்யோர்மணிமத உதி³தம் வேத³ஸத்³யுக்திபி⁴ஸ்த்வம் 

॥ 38 ॥


செயற்கரிய செயல்செய் சீர்மிகு வாயுவே!

வியத்தகு மகிமையும் வலிமையும் கொண்டு

மற்றவர் அறவே முனைந்திட இயலா,

உற்றநல் கிருஷ்ணனாம் வியாசரின் ஆணையை

மின்னுமுடி தரித்த மேதகு சிரத்தில்

அன்புடன் ஏந்தி அகமகிழ் வுடனே

தேவர்கள் தேவை என்றே வேண்டிட

பூமியில் பிறந்து புனித மத்வராய்

மறைநூல் சாத்திரம் விளக்கும் தத்துவம்

நெறியுடன் உரைத்து நேரிய தர்க்கத்தால்

கள்வனைப் போல கேடுடன் மணிமான்

சொல்லிய பொல்லா உரைகளை அழித்து

கடினமி தென்றே கருதும் பலர்முன்

பிடியெனத் தந்தீர் பிரம்ம சூத்திர

உயரிய விளக்கம் உலகினுக் கிங்கே! (38)



भूत्वा क्षेत्रे विशुद्धे द्विजगणनिलये रौप्यपीठाभिधाने

तत्रापि ब्रह्मजातिस्त्रिभुवनविशदे मध्यगेहाख्यगेहे ।

पारिव्राज्याधिराजः पुनरपि बदरीं प्राप्य कृष्णं च नत्वा

कृत्वा भाष्याणि सम्यग् व्यतनुत च भवान् भारतार्थप्रकाशम् ॥ 39 ॥



பூ⁴த்வா க்ஷேத்ரே விஶுத்³தே⁴ த்³விஜக³ணனிலயே ரௌப்யபீடா²பி⁴தா⁴னே

தத்ராபி ப்³ரஹ்மஜாதிஸ்த்ரிபு⁴வனவிஶதே³ மத்⁴யகே³ஹாக்²யகே³ஹே ।

பாரிவ்ராஜ்யாதி⁴ராஜ: புனரபி ப³த³ரீம் ப்ராப்ய க்ருஷ்ணம் ச நத்வா

க்ருத்வா பா⁴ஷ்யாணி ஸம்யக்³ வ்யதனுத ச ப⁴வான் பா⁴ரதார்த²ப்ரகாஶம் ॥ 39 ॥



மூவுலகும் முன்னின் றேத்தும் முதல்வ!

தூயநல் ரௌப்ய பீடமாம் ரஜதபீட

ஆயநல் வேதியர் அமர்திருத் தலத்து

மத்யேக பட்டரின் நடுமனை யதனில்

அந்தண குலத்து அறவோனாய்ப் பிறந்து

முக்தித் துறவியரின் முடிசூடா தலைவனாய்

பத்ரிகா ஸ்ரமம் மீண்டும் ஏகி

கிருஷ்ண னெனும் வியாசரைப் பணிந்து

மறைநூல் அனைத்தும் மாந்தர் உணர

உறைநூல் தெளிவாய் உவந்தே எழுதி

மாபாரத தத்துவம் மனிதரும் அறிய

தாத்பர்ய நிர்ணயம் தகைவுடன் செய்து

நானா திசைகளும் நயமுடன் பரவித்

தேனாய் இனிக்க அருள்புரிந் தாயே! (39)


वन्दे तं त्वां सुपूर्णप्रमतिमनुदिनासेवितं देववृन्दैः

वन्दे वन्दारुमीशे श्रिय उत नियतं श्रीमदानन्दतीर्थम् ।

वन्दे मन्दाकिनीसत्सरिदमलजलासेकसाधिक्यसङ्गं

वन्देऽहं देव भक्त्या भवभयदहनं सज्जनान्मोदयन्तम् ॥ 40 ॥


வந்தே³ தம் த்வாம் ஸுபூர்ணப்ரமதிமனுதி³னாஸேவிதம் தே³வவ்ருந்தை³:

வந்தே³ வந்தா³ருமீஶே ஶ்ரிய உத நியதம் ஶ்ரீமதா³னந்த³தீர்த²ம் ।

வந்தே³ மந்தா³கினீஸத்ஸரித³மலஜலாஸேகஸாதி⁴க்யஸங்க³ம்

வந்தே³ஹம் தே³வ ப⁴க்த்யா ப⁴வப⁴யத³ஹனம் ஸஜ்ஜனான்மோத³யந்தம் ॥ 4௦ ॥


இந்திரன் முதலாய் தேவர்கள் குழுமியே

வந்தனை நாளும் விடாது செய்யும்

ஆத்ம ஞானம் அனைத்தும் அறிந்த

“சுபூர்ண பிரமதி” ஆகிய உம்மை

பக்திப் பெருக்குடன் வணங்கு கின்றேன்!

இலக்குமி தேவியின் இணையிலாப் பதியை

உள்ளத்து நிறுத்தி உயிராய் வணங்கும்

திருநிறை ஆனந்த தீர்த்தராம் உம்மை

கருத்தினுள் நிறுத்தி வணங்கு கின்றேன்!

மந்தா கினியெனும் மாபெரும் நதியின்

மாசறு நீருக்கு மங்கலம் சேர்த்த

மத்வரே! உம்மை வணங்கு கின்றேன்!

சிறந்த ஞானியர் சிந்தையில் விரும்பும்

பிறவிப் பிணியை பொசுக்கி அழிக்கும்

வாயுவே! மத்வரே! வணங்கு கின்றேன்! (40)


सुब्रह्मण्याख्यसूरेः सुत इति सुभृशं केशवानन्दतीर्थ-

श्रीमत्पादाब्जभक्तः स्तुतिमकृत हरेर्वायुदेवस्य चास्य ।

तत्पादार्चादरेण ग्रथितपदलसन्मालया त्वेतया ये

संराध्यामू नमन्ति प्रततमतिगुणा मुक्तिमेते व्रजन्ति ॥ 41 ॥


ஸுப்³ரஹ்மண்யாக்²யஸூரே: ஸுத இதி ஸுப்⁴ருஶம் கேஶவானந்த³தீர்த-²

ஶ்ரீமத்பாதா³ப்³ஜப⁴க்த: ஸ்துதிமக்ருத ஹரேர்வாயுதே³வஸ்ய சாஸ்ய ।

தத்பாதா³ர்சாத³ரேண க்³ரதி²தபத³லஸன்மாலயா த்வேதயா யே

ஸம்ராத்⁴யாமூ நமந்தி ப்ரததமதிகு³ணா முக்திமேதே வ்ரஜந்தி ॥ 41 ॥


சுப்ரமண்ய சூரிபெற்ற சீர்மிகு புதல்வனாய்

ஒப்பிலா குருவாம் கேசவ ஆனந்த

தீர்த்தரின் ஒளிமிகு பாதக் கமலம்

ஈர்த்தநல் பக்தனாய் ஹரிவாயு தேவரின்

புகழினைக் கருத்துடன் பணிந்தவர் பாதம்

மகிழ்ந்தே பாடவே மணமிகு சொல்மலர்

அடுக்கிய சீருடன் அழகொலி மிகவே

தொடுத்த மாலையாய் துதித்தவிப் பாடலால்

உருகியே மனமும் மெய்யும் பணிந்து

திருமால் வாயுவை தினம்தினம் தொழுபவர்

உயரிய பக்தியும் உன்னத முக்தியும்

வரமெனப் பெற்று வாட்டும் பிறவித்

தளையது துண்டாகப் பிழையின்றி சேருவர்

கடல்துயில் கேசவன் காக்கும் உலகதில்! (41)



நக ஸ்துதி:


पान्त्वस्मान् पुरुहूतवैरिबलवन्मातङ्गमाद्यद्घटा

कुम्भोच्चाद्रिविपाटनाधिकपटुप्रत्येकवज्रायिताः ।

श्रीमत्कण्ठीरवास्य प्रतत सुनखरा दारितारातिदूर-

प्रध्वस्तध्वान्तशान्तप्रविततमनसा भाविता नाकिवृन्दैः ॥ 1 ॥


பாந்த்வஸ்மான் புருஹூதவைரிப³லவன்மாதங்க³மாத்³யத்³க⁴டா

கும்போ⁴ச்சாத்³ரிவிபாடனாதி⁴கபடுப்ரத்யேகவஜ்ராயிதா: ।

ஶ்ரீமத்கண்டீ²ரவாஸ்ய ப்ரதத ஸுனக²ரா தா³ரிதாராதிதூ³ர-

ப்ரத்⁴வஸ்தத்⁴வாந்தஶாந்தப்ரவிததமனஸா பா⁴விதா நாகிவ்ருந்தை³: ॥ 1 ॥



அரண்ய அரசனின் முகங்கொண்ட தேவனே!

திருமகள் இடம்கொண்ட திவ்ய ரூபனே!

மலைநிகர் மதர்த்த யானையாம் இரண்யனை,

நிலைஉயர் இந்திரன் நெடுநாள் பகைவனை

மதங்கொண்ட யானையின் மத்தகம் பிளந்திடும்

சினங்கொண்ட சிங்கமாய் சீறியே உந்தன்,

திரண்ட நன்னகங்கள் பலவஜ்ரா யுதமாய்

வெருண்ட கொடியவன் நெஞ்சினைப் பிளக்க,

இப்புவி இருளாய் இருந்த அஞ்ஞானம்,

சட்டென மறைந்து சடுதியில் ஓட

ஆனந்தம் பெற்று அமைதியில் ஆழ்ந்த

வானவர் குழுமியே விரும்பித் தொழுதிடும்,

அன்பினைச் சொரியும் அழகிய சிங்கரின்,

நற்றொழில் நகங்கள் நமையென்றும் காக்கட்டும்! (1)


लक्ष्मीकान्त समन्ततोऽविकलयन् नैवेशितुस्ते समं

पश्याम्युत्तमवस्तु दूरतरतोऽपास्तं रसो योऽष्टमः ।

यद्रोषोत्करदक्षनेत्रकुटिलप्रान्तोत्थिताग्निस्फुरत्

खद्योतोपमविस्फुलिङ्गभसिता ब्रह्मेशशक्रोत्कराः ॥ 2 ॥


லக்ஷ்மீகாந்த ஸமந்ததோவிகலயன் நைவேஶிதுஸ்தே ஸமம்

பஶ்யாம்யுத்தமவஸ்து தூ³ரதரதோபாஸ்தம் ரஸோ யோஷ்டம: ।

யத்³ரோஷோத்கரத³க்ஷனேத்ரகுடிலப்ராந்தோத்தி²தாக்³னிஸ்பு²ரத்

க²த்³யோதோபமவிஸ்பு²லிங்க³ப⁴ஸிதா ப்³ரஹ்மேஶஶக்ரோத்கரா: ॥ 2 ॥



திரண்ட அண்டத்துத் திசைபல தேடினும்

திருமகள் நாதனே! உனக்கீடாய் யாருளர்? 

உன்னிலும் உயர்ந்தவர் உண்டென்று உரைப்பவர்

எண்சுவை உண்டென்று தேடுவார் தெளிந்துளம் 

விட்டதைத் தூர விலக்குவர் போலாவர்!

நெறித்தவுன் புருவமிடை திகழ்வலது விழியோரம்

தெறிக்கும் சினத்து நெருப்புக் கங்குகள்

பரந்து விரிந்து பற்றி எரிக்க

விண்ணவர் தலைவராய் வியந்தே தொழுதிடும்

பிரமனும் ஈசனும் பெருந்தேவ இந்திரனும்

தம்மொளி யிழப்பர் மின்மினிப் பூச்சியாய்! (2)




இதி ஶ்ரீத்ரிவிக்ரமபண்டி³தாசார்ய விரசிதா வாயுஸ்துதி: ஸமாப்தா ॥


ஸ்ரீ திரிவிக்ரம பண்டித ஆச்சார்யரால் இயற்றப்பட்ட ஸ்ரீ வாயுஸ்திதி நிறைவடைந்தது.


ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


 


 


No comments:

  10 அக்டோபர் 2026: கோவையில் டாடாபேடில் ஹரியின் வீட்டில் தங்கியிருக்கும் போது, ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதியினைத் தமிழ்க் கவிதை வடிவில் எழுதலாம் என்...