ராமனுக்கு நீதி கிடைக்கும் நேரத்தில் என்னுடைய மைசூர் பயணம் அமைந்தது ராமனுடைய அனுக்ரகம் என்று தான் சொல்லவேண்டும். என் மனைவி கடந்த 29 ம் தேதி காலை ஆறு மணிக்கு திடீரென்று "இன்று நாம் மைசூர் புறப்பட்டு செல்லலாம், காலாண்டு விடுமுறையை வீணாக்க வேண்டாம்" என்று யோசனை கூற, எனக்கும் அது சரி எனப்பட்டதால் ( வேறு வழி? முதுகை சரி செய்ய வேண்டுமே?) பரபரப்புடன் பயணிக்க தயாரானோம்.
சரி! மைசூர் எதற்கு? விடுமுறையை கொண்டாடவா? இல்லை ஐயா. மைசூருக்கு அருகில் K.R.NAGARA வில் ஒரு unani மருத்துவர் (Dr.Mehaboobkhan) முதுகு வலிக்கு மற்றும் எல்லாவித எலும்பு சம்பந்தமான வலிகளுக்கும் நிவாரணம் அளிப்பதாக செய்தி கேள்விப்பட்டதால் இந்த பயணம் அமைந்தது. என்னுடைய விருப்ப ஓய்வு பிரிவு உபசார விழாவிலேயே இந்த சிகிச்சை எனக்கு பரிந்துரைக்கப்பட்டது. சென்ற வாரம் கோவை சென்றிருந்த போது என் அக்கா கீதாவினால் மீண்டும் அறிவுறுத்தப்பட்டதால் (அவளும் உடன் வர இருந்து சில பல காரணங்களினால் அவள் வர இயலவில்லை- எனவே தள்ளிப்போடப்பட்ட பயணம்) இன்று கைகூடியது.
இது ஒரு matteraa? 29-ம் தேதி புறப்பட சற்று முன்பு வீட்டு வாசலில் குண்டு ஒன்று வெடித்தது செய்தித்தாள் மூலமாக. ஆம்! அயோத்தி ராமருக்கு நாளை (30-ம் தேதி) தீர்ப்பு. ஐம்பது வருடங்களாக கோவில் இல்லாமல் (அயோத்தியில்) இருந்த ராமருக்கு நாளை அல்லாஹாபாத் (நல்ல பேர்!) நீதிமன்றம் மாலை மூன்று மணிக்கு நீதி வழங்க இருப்பதாக செய்தி. ஆகா! அப்பொழுதே அடி வயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது. நாங்கள் மைசூருக்கு செல்வது ராமருக்கே பொறுக்கவில்லையோ என்று மனம் கலங்க, எல்லாம் ராமர் விட்ட வழி என்று புறப்பட்டு விட்டோம்.
வள்ளுவரில் இட்லிகளுடன் ஆரம்பித்து பஸ் நிலையம் வர கிடைத்த ஈரோடு பேருந்தில் ஏற, கடைசி சீட் வேண்டாம் என்று இறங்கிவிட அடுத்த வண்டிக்கு இன்னும் அரை மணி நேரத்திற்கு மேலாகும் என கேள்விப்பட, ஆகா, ராமா ! இது என்ன சோதனை(மைசூர் வரை செல்ல வேண்டுமே) என்று மனம் அரற்ற ஆரம்பித்துவிட்டது. அந்த வண்டியிலேயே சென்றிருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது நேராக மைசூர் செல்லும் பேருந்தே வந்ததைப் பார்த்ததும் உடம்பும் மனமும் புல்லரித்து விட்டது. ராமன் எங்களை கை விடவில்லை. நானும் உங்களுடன் வருகிறேன் என்பது போலவே இது நிகழ்ந்தது. வசதியான இருக்கைகள் கிடைக்க பயணம் இனிதே துவங்கியது. மாலை ஆறு மணிக்கு மைசூர் சென்று விடலாம் என்று நடத்துனர் சொல்லியிருந்தார்.
ஈரோடு வரை வண்டியில் வண்டியில் எக்கச்சக்க கூட்டம். கொடுமுடி தாண்டி இருக்கமாட்டோம். கீதாவிடமிருந்து phone. நாளை தீர்ப்பில் நாடே கொந்தளிக்கப்போகிறது என்று கேள்விப்பட்டதால் பயணத்தைத் தொடரவேண்டாம், திரும்பி கரூருக்கே சென்று விடவும் என்று சொல்லககேட்டதும் மீண்டும் குழப்பம். நடப்பது நடக்கட்டும் என்று மனம் தெளிய வண்டியில் ஒளிபரப்பிய திரைப்படத்தில் கவனத்தைத் திருப்பினேன்....
(மீண்டும் தொடர்வேன்...)
Monday, October 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் முப்பத்த...
No comments:
Post a Comment