இன்று துளசி பூஜை! மீண்டும் வேலூர் ஞாபகம்!
என் மனைவி மட்டுமே செய்த பூஜையைப் பார்த்தபோது வேலூரில் வெகு விமரிசையாக இந்த விழா நடந்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை, அக்ரஹாரத்தில் சென்னமத்தை (நண்பன் நரசிம்மனின் வீடு) வீட்டின் பின்புறம் இருந்த மிகப்பெரிய துளசி மாடத்திற்கு செய்யப்பட்ட விமரிசையான பூஜை!
எல்லா வீட்டுப் பெண்களும் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்த ரவை உருண்டை, நெற்பொரி உருண்டை, கொசம்பரி(பாசிப்பருப்பை நீரில் ஊற வைத்து, அதில் மாங்காய், வெள்ளரிக்காய் முதலியவற்றுடன் பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டப்பட்டு, எலுமிச்சம்பழமும் பிழியப்படும்) ஆகியவை நிவேதனம் செய்யப்படும்.
தீபாவளியன்றே, இன்றய தினத்திற்காக பட்டாசுகள் தனியே எடுத்து வைக்கப்பட்டிருக்கும். துளசி மாடத்தைச்சுற்றி நாங்கள் பட்டாசுகளை கொளுத்தி விட்டு இந்த உருண்டைகளுக்காக காத்திருக்கும் அவதியே சுகமானது,,,,
இன்று வேலூரில் நாங்கள் யாரும் இல்லை. சென்னமத்தையின் வீடும் இல்லை,(கோகிலா திருமண மண்டபமாக இப்போது மாறிவிட்டது)!
இப்பொழுது எங்கள் வீட்டிற்கும் வர ஆளில்லை. பட்டாசு விட சிறுவர்கள் இல்லை, இந்தப்பயணம் இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பது கேள்விக்குறி தான்!

1 comment:
இதே எண்ணங்கள் என் மனத்திலும் தோன்றின. பூ காயாவதும் கனியாவதும் பின் உதிர்வதும் இயற்கை தானே. பூவின் மணத்தை நினைவில் வைத்து பத்திரப்படுத்தி அவ்வப்போது எடுத்து நுகர்ந்து மகிழும் மனது இருக்கிறதே என்று மகிழ்ந்து கொள்ளலாம்
Post a Comment