Friday, January 20, 2012

பயணம் தொடர்கிறது....



        திருப்பாலைத்துறையிலிருந்து  கிளம்பும்போதே மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். அடுத்து செல்ல வேண்டிய இடம் திருநல்லூர் எனப்படுகின்ற நல்லூர். பாபனாசத்திலிருந்து கும்பகோணம் செல்லுமுன் சிறிய சாலை ஒன்று பிரிந்து ரயில்வே கேட் வழியாக சென்றது. ஊர் மக்களிடம் வழி பற்றி உறுதி செய்துகொண்டு காரில் பயணம் தொடர்ந்ததது. அந்தி மாலையில் வயல் வெளிகளுக்கு நடுவே சென்றபோது பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் குதிரையில் பயணம் செய்தது நினைவில் வந்தததை தடுக்கமுடியவில்லை. பாதையின் இருமருங்கிலும் பச்சைப்பசேல் என்று நெல் வயல்கள். நல்லுருக்குத்திரும்பும் பாதையில் ஒரு அருமையான அல்லிக்குளம்.





பாட்டீச்வரம் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இந்த குளம் அமைந்துள்ளது. சாலையில் வலது புறம் திரும்பி நல்லூர் நோக்கிச் சென்றோம்.

நல்லுரின் சிறப்பு:

       கோயிலின் மூலவரான லிங்கம் பகலில் ஐந்து முறை நிறம் மாறும் அதிசியம் இங்கு நிலவுகிறது.



மணி ஆறை நெருங்கிகொண்டிருந்ததால் அவசர அவசரமாக சன்னதியை அடைந்தோம். படிகளில் ஏறி செல்லவேண்டி இருந்தது. கோயிலில் எங்களைத்தவிர இன்னும் சிலர் இருந்தனர். நாங்கள் பார்க்கும் பொழுது லிங்கம் தாமிர கவசம் அணிந்தது போல் தோற்றம் அளித்தது. அது கவசம் இல்லை, லிங்கமே அவ்வாறு உள்ளது என்று கோயில் குருக்கள் சொன்னார். மின்சாரம் வேறு இல்லாததால் மிக இருட்டாக இருந்தது.
 
                 மூலவர் பெயர் கல்யாண சுந்தரேஸ்வரர். அம்மன் பெயர் கிரி சுந்தரி.  மாசி மகம் இத்தளத்தில் மிகவும் விசேஷம் என்று சொன்னார்கள். கோயில் முன் இருக்கும் திருக்குளத்தில் ஏழு கடல்கள் சங்கமிப்பதாக ஐதீகம் என்றும் சொன்னார்கள். கோயிலின் சில காட்சிகள்:








கோயிலின் மரத்தாலான கதவுகளில் நல்ல வேலைப்பாடுகள். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. சில காட்சிகள்;





அடுத்து பட்டீஸ்வரத்தில் சந்திப்போம்.......

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...