வாசலிலே வேப்ப மரம்!
மீண்டும் பூத்துக்குலுங்குகிறது.
அம்மா மட்டும் இல்லை.
மார்ச் மாத மத்தியில்
யுகாதிக்கேன்றே துளிர்க்க -
வேப்ப மரத்தின் கணக்கு பிறழ்வதே இல்லை!
அம்மா மட்டும் இல்லை.
வாசல் சிமென்ட் தரையில்
கம்பளமாய் வேப்பம்பூகள்!
ஆசை ஆசையாய் சேகரிக்க
அம்மா மட்டும் இல்லை.
என் வீட்டோடு வளர்ந்த மரம் -
மற்றவர்க்கு அடையாளம்
சொல்ல மிக வசதி
ஆனால்-
என்னை அடையாளம் காட்டிய
அம்மா மட்டும் இல்லை.
அடுத்த வருடமும்
வேப்ப மரம் பூ பூக்கும் !
அம்மா மீண்டும் வருவாளா?
Sunday, April 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் கண்ட பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
-
எழுத்தாக்கம்: B.ரமாதேவி இனிய நண்பர்களே! ஸ்ரீமத்பகவத்கீதையை மொழிபெயர்த்து முடித்த பின்னர், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆதி...
-
இந்த முறை அரையாண்டு விடுமுறையில் எஙுகு செல்வது என்று யோசித்தபோது கும்பகோணம் கோயில்களைப் பார்த்துவரலாம் என்று முடிவெடுத்தோம். கரூர் வீ...
1 comment:
அன்புள்ள ஸ்ரீதர்,
உன்னுடைய ப்ளாக்கை இப்போது தான் படித்தேன். தனியாக வீட்டில் இருக்கும் போது அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாய் என்று தெரிகிறது. கீதாவுடையதையும் படித்தேன். நீ முதலில் எழுதினாயா அல்லது அவள் முதலில் எழுதினாளா என்று தெரியவில்லை. இருவருடையதுமே அருமை. அம்மா வர மாட்டார்கள் தான். ஆனால் அம்மா எங்கேயும் போகவில்லை என்பது போல் அல்லவா இருக்கிறது!
நம் அம்மா அப்பா ஓரளவுக்கு, ஏன், மிகவுமே அதிருஷ்டசாலிகள் தான். திருவனந்தபுரம் சித்தப்பாவின் மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் உண்டாயிற்று. அவருடைய முடிவு அவருக்கு எவ்வளவு பெரிய நிம்மதி என்பதை உணர்ந்து இன்னும் அதிக வருத்தம் உண்டாயிற்று.
சீக்கிரமே எதாவது ஒரு hobby யில் உன்னை ஈடு படுத்திக்கொள். உனக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் இருப்பது உண்மை தான். ஒவ்வொன்றாக முயற்சி செய்து எது மிகவும் பிடித்திருக்கிறதோ அதைத் தொடர்ந்து செய்.
மனதுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் புத்தகங்களைப்படி.
இனி வாழ்க்கை exciting ஆக இருக்கிறதோ இல்லையோ, இனிமையாக இருக்க என் வாழ்த்துக்கள்.
Post a Comment